True wisdom comes to each of us when we realize how little we understand about Life, ourselves and the world around us.
As a human body it is
an extraordinary piece of creation. But as a human being he is rotten because of the
culture.
A messiah is the one
who leaves a mess behind him in this world
Religions have promised
roses but you end up with only thorns.
அடடா எனக்கு எல்லாம் தெரிந்து விட்டதே ? இனி புதிதாக தெரிவதற்கு என்ன இருக்கிறது ? எனக்கு எல்லாம் தெரியும் !
எனது மதத்திற்கு எல்லாம் தெரியும் .
எனது குருவுக்கு எல்லாம் தெரியும் ,
எனது கல்விக்கு எல்லாம் தெரியும் ,
எனது கலாச்சாரத்திற்கு எல்லாம் தெரியும் ,
இப்படியாக நான் சார்ந்துள்ள நம்பிக்கை கோட்பாடுகளுக்கு எல்லாம் தெரியும் ,
இனி புதிதாக ஒரு விடயத்தையும் நான் அறிய வேண்டியதில்லை ,
மேற்கூறிய வாசகங்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதை நீங்கள் சிலவேளைகளில் புரிந்து கொள்வீர்கள் , ஏற்றுகொள்ளவும் கூடும் ,
இல்லை இல்லை நான் எப்போதும் புதிதாக எதையாவது கற்று அறிந்து கொள்ளவே விரும்புகிறேன் என்று நீங்கள் சிலவேளை சொல்ல கூடும்,
இந்த இடத்தில உங்களின் கருத்துக்கு நான் மறுப்பு சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் ,

நீங்கள் நிச்சயமாக உங்களுக்கு எல்லாம் தெரியும் என்றுதான் நம்புகிறீர்கள் .
ஏனெனில் அடிப்படையில் நீங்கள் ஒரு நம்பிக்கை வாதியாகும் ,
நீங்கள் உங்கள் கடவுளை நம்புகிறீர்கள் '
உங்கள் குரு கூறும் உபதேசங்களை நம்புகிறீர்கள்.
உங்கள் சமுகம் உங்களுக்கு சொல்லித்தந்த கோட்பாடுகளை நம்புகிறீர்கள் .
உண்மையில் நீங்கள் ஏற்கனவே அறிந்த உண்மைகளை எல்லாம் நம்புகிறீர்கள் .
இந்த நம்பிக்கையானது உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற கருத்தை உங்கள் மனதில் மிக மிக ஆழமாக பதித்துள்ளது,
இது சரியா தவறா என்பதல்ல பிரச்சனை
நீங்கள் அனேகமாக சஞ்சலத்திற்கு அப்பாற்பட்டு உங்கள் நம்பிக்கைகளை போற்றி மிகவும் சந்தோஷமாக உள்ளீர்கள்.
மகிழ்வாக இருப்பதற்கு அறிவாளியாக இருக்க வேண்டியது அவசியம் அல்ல.
பல ஆயிரம் ஆண்டுகளாக வழிகாட்டிகள் என்று கூறப்படுபவர்களால் அறிவுரைகள் அல்லது சமய நம்பிக்கைகள் போன்ற ஆறுதல் மாத்திரைகளால் சுகமாக உள்ளீர்கள்.
கேள்வி எதுவும் கேட்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை,
அப்படி தப்பி தவறி ஏதாவது கேள்விகள் எழுந்தாலும் சமயமும் சாஸ்திரமும் அல்லது கலாச்சாரமும் உங்களுக்கு வேண்டிய பதில்களை லாரி லாரியாக அள்ளி தந்துவிடுகின்றன ,
இப்படிதான் யுகம் யுகமாக ஆப்பிள் கீழே விழுந்தலென்ன மேலே போனால் என்ன சாப்பிட கிடைத்தால் சரி என்று கோடானு கோடி மனிதர்கள் தூக்கத்தில் இருந்தனர் ,
அந்த போக்கிரி ஐசக் நியுட்டனுக்கு மட்டும் ஏன் அந்த ஆப்பிள் கீழே விழுகிறது என்ற கேள்வி எழுந்தது ?
ஆப்பிள் என்றால் கீழேதான் விழும் அதிலென்ன அதிசயம் என்று எல்லோரும் சுகமாக நம்பி பொழுது , நியுட்டன் மட்டும் ஏதோ ஒன்று எனக்கு தெரியவில்லை என்று சந்தேகப்பட்டார் .
ஏன் ஆப்பிள் கீழே விழவேண்டும் ?
அது எனக்கு தெரியவில்லயே ?
என ஐசக் நியுட்டன் எண்ணிய பொழுதுதான் அவர் விஞ்ஞானியாக உருவெடுத்தார் ,
எல்லாம் வழமை போல போய் கொண்டிருந்தால் அவை சரியாக போவதாக அர்த்தம் இல்லை,