Saturday, March 23, 2013

உன் உளவியல் இருப்பை அடிமை சாசனமாக கேட்கும் GURUJI

மனிதகுல வரலாற்றில் குரு பக்தி அல்லது குருவழிபாடு குரு மேன்மை போன்ற சமாச்சாரங்கள் எல்லா மதங்களிலும் காணப்படுகின்றது ,

அரசன் ஆண்டவன் குரு போன்ற சொற்கள் எல்லாமே அனேகமாக மனிதர்களின் பயத்தை அடிப்படையாக வைத்து அவர்களின் சுய தேடலை சிறுமை படுத்திய ஒரு சமாச்சாரமாகவே காணப்படுகிறது .

அறிவை பகிர்வதிலோ அன்பை பகிர்வதிலோ அல்லது மகிழ்ச்சியை பரிமாறுவதிலோ எந்த விதமான தவறும் இல்லை அவை அவசியமானதும் கூட .
ஆனால் உனக்கு நான் அறிவு தருகிறேன் பேர்வழி அதற்கு பிரதிகூலமாக நீ உனது உடல் பொருள் ஆவி எல்லாம்   என் முன்னே சமர்பிக்க வேண்டும் எதிர்பார்க்கும்  குரு அல்லது ஆண்டவன் அல்லது அரசன் எல்லாமே எமக்கு உண்மையில் சரியான வழியை காட்டவில்லை .

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஜீவராசியும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்கும் உரிய சகல தன்மைகளுடனேயே பிறந்து இருக்கின்றன ,

அதை மறுக்கும் வேலையை தான் அநேகமான குரு என்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் , சுயசிந்தனை செய்வதே ஏதோ ஒரு பாபகரமான காரியம்போல் அடிமைத்தனத்தை போதிக்கிறார்கள். உடல் ரீதியான அடிமைதனத்தையோ அல்லது பொருள் ரீதியான அடிமைதனத்தையோ விட உளவியல் ரீதியான அடிமைத்தனமே மோசமானது . இந்த புத்திரீதியான அடிமைத்தனம் intellectual slavery படித்தவர் பாமரர் பேதமில்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறது .
சுயமாக தன்னைபற்றிய சுயதேடலுக்கு மிகவும் பயப்படும் அடியவர்கூட்டமாக மனிதர்கள் பலரையும் மாற்றிவிட்டார்கள் இந்த குரு சாயம் பூசிய கபட வேடதாரிகள் 

ஆத்மீக குரு என்று தன்னை தானே விளம்பரப்படுத்தி கொள்ளும் அத்தனை குருமாரும் தாங்கள் ஏதோ எல்லாவிடயத்திலும்  ஒரு பிறப்புரிமை அல்லது ஒரு விதமான தெய்வீக உரிமை கொண்டவர்கள் என்று  எண்ணிக்கொண்டு ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொள்கின்றனர்  

 செயற்கையாக பாவனை பண்ணிகொண்ட ஒரு சாந்தம் ஒரு செயற்கையான புன்னகை போன்ற சகல மேனா மினுக்கி தனங்களோடு சதா எத்தனை சிஷ்யர்கள் அல்லது அடியவர்கள் வருகிறார்கள் என்று தணியாத தாகத்தோடு இருக்கும் இந்த குருமார்கள் தங்கள் ego வை திருப்தி படுத்த சதா வாடிக்கையாளர்களை   தேடி அலைகின்றனர் .
உண்மையான குருவே இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது ,
இந்த பரந்த விரிந்த உலகத்தில் எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து ஒன்றோடு ஒன்றுக்கு உதவி புரிந்தே தமைந்து இருப்பை தக்க வைத்து கொள்கின்றன .
அறிவை பகிரும் ஆற்றலை நுட்பத்தை சகல ஜீவராசிகளும் தங்களுக்கு பொது மான அளவில் இயல்பாகவே கொண்டுள்ளன,
ஒரு மரத்தை விட நீ ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்
மரமானது தனக்கு தேவையான அறிவுடனும் ஆற்றலுடனும் தான் அவதரித்து தன இருப்பை தக்க வைத்து வாழ்கிறது . அதுபோலவே நீயும் உனக்கு தேவையான அறிவுடனும் ஆற்றலுடனும் அவதரித்து உன் இருப்பை தக்கவைத்து வாழ்கிறாய் .நீயா பெரிது அல்லது மரமா பெரிது என்று ஒன்றும் இல்லை நீயும் பெரிதுதான் மரமும் பெரிதுதான்.

Monday, March 11, 2013

தற்செயலாக எதுவும் நடப்பதில்லை!

ஒன்றோடு ஒன்று தொடர்புடைய நிகழ்சிகள் ஒரு போதும் தற்செயலாக நடைபெறும் நிகழ்வுகளே அல்ல.
பிரபஞ்சம் ஒரு ஒழுங்கு முறையில் தான் இயங்குகிறது . ஒரு சம்பவம் நடை பெரும் முன்பாக அந்த சம்பவம் தொடர்பான பல சம்பவங்கள் நடை பெறுவதை நாம் அவதானிக்கலாம் 
எம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களின் தன்மைகளை நாம் உற்று அவதானித்தால் அவை எமது சாதாரண அறிவுக்கு புலப்படாத ஒரு வரையறுக்கப்பட்ட ஒழுங்கை நோக்கி இயங்குவதை காணலாம் ,
இதற்க்கு ஏராளாமான உதாரணங்கள் எல்லோரினதும் வாழ்வில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளாகும் . ஆனால் என்ன நாம் அனேகமாக அவற்றை நுட்பமாக அவதானிப்பதில்லை 
உதாரணமாக மாம்பழத்தை பற்றிய எண்ணம் உருவான சில சமயங்களில் உண்மையாகவே எமது கைக்கு ஒரு மாம்பழம் கிடைக்ககூடும் அல்லது யாரவது ஒருவர் மாம்பழத்தை வைத்திருக்கும் காட்சியை நாம் காணக்கூடும் எப்படியாவது அது சம்பந்தமான செய்திகள் எதோ ஒரு விதத்தில் தொடர்பாக நடை பெறக்கூடும் 
இவை போன்ற பல சம்பவங்களை நாம் அவதானிக்கலாம் . இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு சிறிய நிகழ்வுகளிலும் மிக சரியான திட்டமிடல் அடிப்படையிலேயே நடைபெறுகிறது 
ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்தத மிக பெரும் விடயங்களை ஆராய்வது மிக எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .
இயற்கை அழிவுகள் நடக்கும் நாடுகளில்  அவை நடப்பதற்கு சில நாட்களில் முன்பாக அல்லது பின்பாக பல விதமான அரசியல் குழப்பங்கள் நடைபெறுவது நாம் அறிந்ததே .
மனிதர்களின் மனதில் உண்டாகும் எண்ணங்களே நாடுகளின் அல்லது சமூகங்களின் தலைவிதியை எழுதுகின்றன 
எந்த விதமான எண்ணங்கள் எம்மை காந்தம் போன்று இழுக்கின்றனவோ அந்தவிதமான சம்பவங்களும் எம்மை நோக்கி வருவது நிச்சயம் 
தற்செயலாக எதுவும் நடப்பதில்லை 
எல்லாவற்றிக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பாகவே நடக்கின்றன 
எமது மனம்தான் மிக பெரிய கம்ப்யூட்டர் . அதுவும் வாழ்க்கை என்னும் தொழிற்சாலையில் உற்பத்தி ஸ்தானத்தில் கம்பீரமாக வேலை செய்யும் திறமைசாலி 
மனம் விரும்பி நினைப்பது மட்டும் அல்லாமல் விரும்பாமல் ஏனோ தானோ வென்று காரணமே இல்லாமல் நினைப்பதையும்கூட செயல் வடிவமாக நடத்தி காட்டும் பொல்லாத மிக பெரும் பலசாலிதான் எமது மனம் .
எம்மை நோக்கி வரும் சம்பவங்கள் எல்லாமே சரியான சிக்னல்களை காட்டி விட்டே வருகின்றன .
ஆனால் அந்த சிக்னல்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் நம்மிடம் எவ்வளவு தூரம் உள்ளது?
அந்த ஆற்றலை வளர்க்க உண்மையில் விரும்பினால் நிச்சயம் முடியும் 

Tuesday, March 5, 2013

Intellectual laziness சாமியார்கள் குருமார்கள் வழிகாட்டிகள்

All these godman, gurus and flunkies are offering us a new oasis. You will find out that it is no different from other mirages. .U,G,Krishnamurthi

சதா குரு  பக்தி!   அளவிட முடியாத நம்பிக்கை...போன்ற போதை வஸ்துக்களை ஏறக்குறைய எல்லா சாமியார்களும் எல்லா சமய குருமார்களும் சதா போதித்த வண்ணமே உள்ளனர் . இதில் உள்ள மர்மம் தான் என்ன?
வேறொன்றும் இல்லை இந்த குரு பக்தி ரசிகர்மன்றங்கள் தங்கள் வாழ்க்கையை வசதியாக கொண்டு செல்ல இந்த நம்பிக்கை என்ற மோசடிதான் காலா காலமாக கையாளும் தந்திரமாகும்.
சிலர் நிஜமாகவே இந்த கண்மூடி தனமான நம்பிக்கை நல்லது என்று நம்புகின்றனர் . ஆனால் அடிப்படையில் இது ஒரு தற்காலிக ஏற்பாடாக அல்லது ஒரு திரபி என்று எடுத்து கொள்ளலாமே தவிர இது ஒரு சரியான வழி என்று கொள்ளவே முடியாது .
இந்த குருட்டு நம்பிக்கைதான் மனிதகுலம் முழுதும் பல பயங்கர அழிவுகளுக்கும் மோசடியகளுக்கும் காரணமாக இருந்து இருக்கிறது
மனிதர்களை சுயமாக சிந்திக்க விடாது தமது காரியத்தை சாதித்து கொள்ளும் சாமியார்கள் குருமார்கள் வழிகாட்டிகள் போன்றோர் சதா குரு பக்தி போன்ற ரசிகர்மன்ற வியாதிகளை பரப்பும் துஷ்டர்களாக இருக்கின்றனர் .
இன்று பிரபலமான ஒரு குரு அல்லது சாமியார் அல்லது வழிகாட்டி என்றால் அவரிடம் விமானங்கள் முதல்கொண்டு ஏராளமான சொத்துக்கள் இருக்கும் . கேட்டால் அவற்றிக்கும் ஏதாவது பித்தலாட்ட பதில்களை வைத்திருப்பார்கள் , அவர்களின் சீடர்களிடமோ பேசவே முடியாது . நன்றாக மூளை கழுவப்பட்டு தமது  குரு/ரசிகர் மன்ற வழிகாட்டியை எல்லை கடந்து பாதுகாப்பார்கள் . இந்த மாதிரி பாமர மக்கள் உண்மையில் மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள்தான் .
தமது சுய புத்தியை பாவிக்க மறுத்து சதா எதோ ஒரு முடிச்சவிக்கியின் பின்னால் படித்தவர் படிக்காதவர் பேதமின்றி தமது வாழ்வின் பெரும் பகுதியை வீணாக விரயமாக்குகிறார்கள்
இவர்களை  சுயமாக சிந்திப்பது பாப கரமான செயலென்றும் எந்த கேள்வியும் கேட்காமல் நம்புவதே புண்ணியம் என்றும்  நம்ப பண்ணிவிட்டார்கள் .
 இது ஒரு சிந்தனை சோம்பேறிதனம் என்று இவர்களுக்கு புரிய வைப்பது மகா கடினம் .