Monday, June 23, 2014

உன்னை சுற்றி உள்ள பிரபஞ்சம் சதா உன்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறது ! உனக்குத்தான் கேட்கவில்லை ?

நீங்களோ நானோ ஒரு போதும் தனியாக இல்லை. எம்மை சுற்றி உள்ள இந்த பரந்த விரிந்த பிரபஞ்சம் சதா எங்களுடன் பேசுகிறது சிரிக்கிறது இடையிடையே கோபிக்கிறது இன்னும் என்னனவோ உணர்ச்சிகளையும் செய்திகளையும் எம்மை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிறது.
நாம் தான் கண்களையும் காதுகளையும் மட்டுமல்லாமல் மனதையும் மூடிக்கொண்டு விட்டோம், அதனால் அவற்றின் இனிய சங்கீதத்தை எம்மால் ரசிக்க தெரியாமல் இருக்கிறது.
உண்மையில் நாம் வேறு பிரபஞ்சம் வேறல்ல . இன்னும் சரியாக சொல்லப்போனால் எமது கண்களினூடாக இந்த உலகத்தை பிரபஞ்சம் பார்க்கிறது , எமது காதுகளினூடாக இந்த உலகின் இனிய நாதத்தை அது கேட்கிறது, எமது மனதின் ஊடாக அதுவும் தனது உணர்வுகளை சிந்தனைகளை அனுபவிக்கிறது.
கோடானு கோடி உயிரனங்கள் எல்லாம் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பக்கங்களாகும் .
எமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள உறவு அதி அற்புதமானது .அதை புரிந்துகொண்டவர்கள் அதிஷ்டசாலிகள்.
எமது ஒவ்வொரு அசைவும் பிரபஞ்சத்தின் நோக்கத்திற்கும் எமது நோக்கத்திற்கும் இசைவாக இருக்கும் பொழுது நாம் நினைத்ததெல்லாம் நிறைவேறுகிறது,
எமது வெற்றி தோல்வி எல்லாம் எம்மீது தான் தங்கி இருக்கின்றது.
ஆனால் எமக்குள் இருக்கும் பிரபஞ்சத்தின் உணர்வும் எம்மோடு கலந்து தான் இருக்கிறது,  அதை புரிந்து கொள்ளாவிடில். எமது விருப்பங்களும் விளைவுகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு கொண்டே தான் இருக்கும்.
நாம் தவறான பாதையில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் எம்மை சுற்றி உள்ள பிரபஞ்சமானது எமக்கு பலவழிகளிலும் நல்ல வழியை காட்ட முயற்சிக்கும் . அதையும் மீறி நாம் தவறான பாதையில் சென்றாலும் எம்மை காப்பாற்ற அது சதா சரியான வழியை காட்டவே முயற்சிக்கும்,  ஏனெனில் அது வேறு நாம் வேறல்ல . ஆனால் தவறையே ரசிக்க நாம் முடிவு செய்துவிட்டால் அதற்கும் அது உதவி செய்யும்,  அந்த தவறில் இருந்து நாம் ஒரு அற்புதமான பாடத்தை படிக்கலாம் அல்லவா ? அதுவும் கூட ஒரு நன்மைதானே ?

Saturday, June 14, 2014

உலகத்தையே உன் தலையில் சுமப்பதாக எண்ணாதே, உண்மையில் உலகம்தான் உன்னை சுமக்கிறது ,

எதிலும் மிகவும் சீரியஸாக இருப்பது என்பது ஒருவரின் நேர்மை , உண்மை , விசுவாசம் பணிவு தன்னம்பிக்கை போன்ற மிக உத்தமமான குணங்களின் அடையாளம் என்று நாம் பொதுவாக எண்ணுகிறோம்.

சீரியஸாக இருபதற்கு பெரும்பாலோர்  கவனமாக இருத்தல் என்ற பொருளை  கொண்டுள்ளனர் .
எந்த விடயத்திலும்  தேவை படும் அளவில் கவனமாக இருக்கிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு எதிலும் மகா சீரியஸாக இருப்பதைதான் நான் இங்கு குறிப்பிட வருகிறேன், 

 அதிலும் குறிப்பாக நான் சார்ந்த மக்களின் ஜனத்தொகையில் கணிசமானோர் பெரும்பாலும்   பொல்லாத சீரியஸ் பிராணிகள்தான் .

படிப்பதிலே கவனம் சாமி கும்பிடுவதில் கவனம் உழைப்பதில் கவனம் பிறரோடு பழகுவதில் கவனம் சம்பாதித்த காசை சொத்துக்களை சேமித்து வைப்பதில் கவனம் என எதிலும் கவனம் கவனம் கவனம்தான் ,