Monday, May 27, 2013

சிஷ்யர்களை தேடி வலை வீசும் சாமியார்கள்.....

Atmospheric pollution is most harmless when compared to the spiritual and religious pollution that have
plagued the world.There is no such thing as 'knowledge' for the sake of knowledge. Knowledge is power. "I know. You don't know". ug krishnamurthi
அனேகமாக எல்லா சாமியார்களும் சமய வாதிகளும் உபதேசிகளும்  குருமார்களும் பிரசாரகர்களும்  அள்ளி வீசும் கருத்துக்கள் எதுவுமே அவர்களின் சொந்த கருத்துக்கள் அல்ல.
நியு ஏஜ் தத்துவங்கள் என்று கூறப்படும் விடயங்களும் சுய முன்னேற்ற புத்தகங்களில் இருந்து பெறப்படும் உளவியல் மற்றும் பிரபஞ்ச பற்றிய கருத்துக்களே ஆகும் .
அவை நல்ல கருத்துக்களே , யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்று பேசாமல் இருந்து விடலாம் தான் ,ஆனால் இந்த கூட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஆத்மீக உபதேசிகள் எல்லாருமே நல்ல நல்ல கருத்துக்களை எல்லாம் தங்கள் சொந்த கருத்துக்கள் அல்லது அனுபவங்கள் போல பாவனை பண்ணி நடித்து விட்டு சிஷ்யர்களை நிரந்தர கத்துக்குட்டி அடிமைகளாக அல்லவா வைத்திருக்கிறார்கள்?
அத்தனை முடிச்சவிக்கிகளும் பெரும் பெரும் தத்துவங்களை சொல்லி கேட்போரை மயக்கி விட்டு இறுதியில் அவர்களின் பணத்தை எப்படியாவது பிடுங்கி விடுவார்கள் எனக்கு தெரிந்த அளவில் இன்று பிரபலமாக இருக்கும் அத்தனை ஆள்பிடி காரரும் இப்படித்தான் நித்தியானந்தா என்பவர் நன்றாக பேசுவார், எல்லாம் ஓஷோ மற்றும் தீபக் சோப்ரா அல்லது   வைன் டயர் மற்றும் நோர்மன் விஸ்டன் போன்றவர்களின் உபயம்
அடுத்தது அந்த ஜாக்கி வாசுதேவ் என்ற சாமியார், இவர் மனைவியை கொன்றதாக வழக்கு அப்படியே கிடப்பில் கிடக்க கடையை வெற்றி கரமாக திறந்து விட்டுள்ளார், பேசுவதில் ஒன்று கூட ஒரிஜினல் இல்லை , எல்லாம் ஓஷோ வின் second Hand matter தான் ,இவருக்கு ஒரு மகளும் பல பெண் சிநேகிதகளும் ஏராளமான சொத்துக்களும் உண்டு,

Friday, May 24, 2013

விரும்பாத trespassing? விரும்பாத வீட்டின் திறவுகோல்

Trespassing  என்பது பொதுவாக நாம் மற்றவரின் எல்லையை அனுமதி இன்றி
மீறுவது என்று பொருள்படும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எல்லைகள் இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்வும் அவரது மனதிற்குள்ளும் மனதிற்கு வெளியேயும் இருக்கிறது.
சக மனிதர்களை நாம் துருவி துருவி ஆராய்வது என்பது உண்மையில் ஒரு மோசமான அத்து மீறல் ஆகும்,
ஒருவரின் மன ஓட்டங்களை கூட ஓரளவுக்கு மேல் நாம் ஆராய்வது ஒருவகை trespassing என்று சொல்லலாம்.
இயற்கையில் சகல எண்ணங்களும் செய்திகளும் ஓரளவு வெளிப்படையாகவே இருக்கின்றன என்பது ஒரு பேருண்மையாகும் ,
பிரச்சனை அது அல்ல,
நான் உண்மையில் சொல்ல வரும் விடயம் அதைவிட முக்கியமானது.
எவ்வளவு தூரம் பிறரின் விடயங்களில் ஆர்வம் காட்டுகிறோமோ அவ்வளவு தூரம் அவர்களது வாழ்வை நாம் வாழ முயற்சிக்கிறோம் என்று தான் அர்த்தமாகும் .
உதாரணமாக ஒரு விவசாயியை பற்றியே நாம் எண்ணிக்கொண்டும் ஆராய்ந்து கொண்டும் இருந்தால் நாம் ஓரளவு அந்த விவசாயியின் வாழ்வை ஒரு virtual ஆக வாழ முயற்சிக்கிறோம் என்றுதான் பொருள்.

Thursday, May 16, 2013

இல்லாத ஒன்றையல்லவா தேடவேண்டும்? எங்கும் இருப்பதை ஏன் காண முடிவதில்லை?

As quantum physics can now confirm, the universe we live in is not made up of solid objects but of energy and information. This discovery holds vast implications for understanding the nature of our world and in understanding the true source of vibrant health. It also means that it is possible to encapsulate all the concepts discussed in the world of holistic natural health into a single unified theory
இரசாயனம் பௌதீகம் விஞ்ஞானம் போன்று ஆத்மீகத்தையும் ஒரு தனியான
பாடப்புத்தகம் போன்று கருதுவது மிகவும் தவறான கோட்பாடு என்றெண்ணுகிறேன்,
செய்யும் தொழில், கற்கும் கல்வி, விளையாடும் விளையாட்டு மற்றும் அன்றாடம் நாம் வாழும் வாழ்க்கை போன்ற எல்லாவற்றிலும் கலந்து எதிலும் பிரிக்கவே முடியாமல் இருப்பது தான் ஆத்மீகம் ,
ஆனால் நாம் என்ன செய்கிறோம் ?
ஆத்மீகத்திற்கு அல்லது கடவுளுக்கு  என்று நேரமும் இடமும் ஒதுக்கி வைத்துள்ளோம் . இது எமக்கு மிகவும் வசதியான ஒரு ஏற்பாடாக பழகிவிட்டோம் ,
 உண்மையில் இந்த ஆத்மீகம் அல்லது கடவுள் என்ற சொற்பதங்கள் எல்லாமே ஒரு குழப்பங்கள் நிறைந்த bundle of ideas ஆக இருக்கின்றன , அவரவர்களுக்கு அந்த அந்த நேரங்களில் தோன்றும் கருத்துக்கள் எல்லாவற்றையுமே ஒரு கூடைக்குள் போட்டு தற்காலிக சுகம் காணும் மார்க்கமாகவே இருக்கின்றன,
உண்மையில் இந்த ஆத்மீகம் அல்லது கடவுள் என்ற பதங்கள் மிகவும் serious matters ஆனால் நாமோ இதை சற்று சீரியசாக அணுகுவதில்லை , எமக்கு தேவை ஒரு தற்காலிக அபினி அவ்வளவுதான் ,
யாரை கேட்டாலும் கடவுளை அல்லது ஆத்மீகத்தை தேடுவதாக ஒப்பு கொள்வார்கள் ,
இருக்கும் ஒன்றை ஏன் தேடவேண்டும் ?
இங்கேதான் லாஜிக் இடிக்கிறது .

Wednesday, May 15, 2013

அவன் ஏன் அற்புதம் ஏதும் நிகழ்த்தவில்லை ?

ஏதோ ஒரு காரணத்தால் அந்த  அதிகப்பிரசங்கிக்கு தான் யார்? இறந்த பின்பு
எங்கே போகிறோம் ? கடவுள் என்று உண்மையில் ஏதாவது ஒன்று உண்டா என்பது போன்ற உதவாக்கரை கேள்விகள் அடிக்கடி எழுந்துகொண்டே இருந்தன . புரிந்தும் புரியாமலும் பல பல நூல்களை படிப்பது பலவிதமான குருஜிக்கள் போன்றவர்களின் தத்துவங்கள் எல்லாம் ஓரளவு நுனிப்புல் மேய்ந்து பார்த்தான் ,
ஒரு சமயம் ஏதோ விளங்குவது போலவும் மறுபடி ஒன்றுமே புரியாமலும் காலங்கள் கழிந்தன.
சம்பவம் நடந்த அன்று அவன் வேலை முடிந்து அருகில் இருந்த ரயில் நிலையத்தில் வழக்கம்போல காத்திருந்தான் ,
மனம் ஏராளமான கேள்விகளை கேட்டுகொண்டே இருந்தது .
Not This Not This என்று மனம் காணும் பொருட்களை எல்லாம் மனத்தால் தூக்கி எறிந்து கொண்டிருந்தான் , இதுவும் எங்கேயோ அவன் படித்த ஒரு தியான மார்க்கம்தான் , நான் யார் என்ற கேள்விக்கு நான் இதுவா ? அல்ல இது என் உடம்பு , அப்படியானால் நான் என்று எண்ணி கொண்டிருக்கும் மனம்தான் அந்த நானா ? இல்லை இல்லை அது உன் மனம், இப்படியாக கை கால் விரல்கள் மற்றும் காணும் எல்லாவற்றையும் இது நானா ? என்று கேள்விமேல் கேள்வியாக கேட்டு அவை ஒன்றுமே நான் அல்ல Not This not this நாட் திஸ் என்று கேள்வியும் பதிலும் எல்லையில்லாமல் தொடர்ந்து கொண்டே சென்று இறுதியில் கேட்பதற்கு கேள்விகளே இல்லாமல் போய்விட்டது .

Tuesday, May 14, 2013

வாழ்க்கை அழகானது ஞானத்தை விட மேலானது Life is precious than enlightenment

 ஒருவன் அழகான ஒரு குட்டி  தீவில் இருந்து அதன் ரம்மியத்தை
ரசித்துகொண்டிருந்தான் .
அவனை சந்திக்கும் பலரும் வேறு ஒரு பெரிய கற்பனைக்கு எட்டாத அற்புத தீவை பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசிகொண்டேயிருந்தர்னர் . அதைப்பற்றிய வர்ணனைகளால் நாளடைவில் அவனுக்கும் எப்படியாவது அந்த அற்புத தீவுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றி நாளடைவில் அது அவனது ஒரே நோக்கம் என்றாகி விட்டது ,
தான் குடியிருக்கும் குட்டி தீவின் எந்த அழகும் தற்போது அவனை கவர்வதில்லை, எப்போ அந்த அற்புத தீவை அடைவோம் என்ற ஒரே சிந்தனையில் காலம் கழிந்தது ,
பல நாள் விடா முயற்சியின் பின்பு அவனது எண்ணம் நிறைவேறக்கூடிய தருணம் வந்தது , அந்த அற்புத தீவுக்கு செல்லும் படகில் அவனும் ஏறிக்கொண்டான் , பலவிதமான கற்பனைகளுடன் இறுதியில் அந்த தீவை அடைந்ததும் விட்டான் ,
தனது நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆனந்தித்தான் ,
எல்லோரும் குறிப்பிட்டது போலவே அழகான மரங்கள் மலர்கள் சின்ன சின்ன மலை குன்றுகள் ஏராளமான பழவகைகள் கொண்ட அற்புத சோலைகள் எல்லாவற்றிலும் மேலாக அழகான மாந்தர்கள் என்று எல்லோரும் குறிப்பிட்ட நல்ல காட்சிகளையே அவன் கண்டான் ,
சில நாட்கள் தன்னை மறந்து தனது பழைய தீவின் சகல ரம்மியங்களையும் மறந்து இருந்தான் ,
எந்த விடயத்திற்கும் காலம் வேறு வேறு விதமான அர்த்தங்களை தந்து கொண்டிருக்கும் தானே ?

Sunday, May 12, 2013

வார்த்தைகளுக்கு வெளியே ஒரு அதிசயம் Words are not a Perfect Tools

வார்த்தைகளிலிருந்து விடுதலை என்ற  பதத்தை பற்றி கேள்வி 
பட்டிருக்கிறீர்களா ?
மிக மிக முக்கியமான  சமாச்சாரமே இதுதான் ,
எமக்கு  இன்னும் சரியாக புரியாத பல விஷயங்களுக்கு அதன்  அர்த்தங்களை குறிக்கும் விதமாக நாம் குறிக்கும் சொல் பிரயோகங்கள் பெரும்பாலும் அர்த்தமற்றவையே .
நாமே கற்பித்து கொண்ட பல  வார்த்தைகள்  அனேகமாக காலாவதியான அர்த்தங்களை சுமந்து கொண்டிருகின்றன
இதை பற்றி இனி நீங்கள் சற்று சீரியசாக சிந்திக்க வேண்டும் ,
ஒரு பொருளை விளங்க ஒரு லேபல் போன்று பயன்பட்ட சொற்கள் பின்பு
காலப்போக்கில் அந்த லேபெல்களே முழு முதற் பொருள் போன்ற தோற்றத்தை நாம் கற்பிதம் செய்து கொள்கிறோம்
ஒரு அர்த்தத்தை கொண்டிருக்கும் வார்த்தையானது வேறு ஒருவருக்கு வேறு ஒரு அர்த்தத்தை வழங்கி கொண்டிருப்பதை அறிவீர்களா ?
எதுவிதத்திலும் வார்த்தைகள் என்பது ஒரு Perfect கருவியே அல்ல ,
கடவுள் என்ற விவகாரத்தில் மட்டுமல்ல பொதுவிலேயே வார்த்தைகள் ஒரு அளவுக்கு உட்பட்ட தற்காலிக உபயோகத்தை மட்டுமே கொண்டுள்ளது ,
வாழ்வின் உன்னதமான பல தருணங்களில் நாம் வார்த்தைகள் அற்று மௌனமாகி விடுவதை நாம் கண்டிருக்கிறோம் அல்லவா ?

Saturday, May 11, 2013

நீங்களாகவே விளங்கி கொள்வதே நல்லது Knowing God is a Perfect Trick.

கடவுள் இருக்கிறாரா அல்லது இருக்கிறதா போன்ற கேள்விகளுக்குள்
செல்வது எந்த வகையிலும் ஈசியான சமாசாரம் அல்ல. கடவுள் நம்பிக்கையாளர்களும் மறுப்பாளர்களும் தங்களுக்கு தெரிந்ததாக தாங்கள் எண்ணிக்கொண்டு இருக்கும் கருத்துக்களை மிக இலகுவில் அள்ளி வீசிவிடுவர்.
இந்த பதில்கள் எல்லாமே ஒரு இரவல் பதில்கள்தான் என்பது அடியேனின் தாழ்மையான அல்லது மிகவும் கர்வமான அபிப்பிராயமாகும் .
யாரோ சொல்லிகொடுத்த அல்லது எங்கோ படித்த கருத்துக்களை தங்கள் சுய கருத்துக்களாக நம்பி கிளிப்பிள்ளை மாதிரி ஒப்படைத்து திருப்தி அடைவது காலா காலமாக நடக்கிறது .
உண்மை என்ன ?
அது என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா என்பதைவிட.
 அது என்று எதை நாம் நினைகின்றோம் என்பது மிகவும் முக்கியமானது , எமது கேள்வி எப்போது ஒரு ஒரிஜினல் கேள்வியாக இருக்கிறதோ அப்போதே உண்மையான பதிலை அறிவது இலகு வாகிவிடும் .

Friday, May 3, 2013

Victim Syndrome மகிழ்ச்சியை வெளியே காட்டி கொள்ள பயம்


A condition in which a person uses their suffering, self-sacrifice, and role as a victim to manipulate others into psychologically rewarding them for their ongoing misery
எப்போதும் நாங்கள்
பாவிகள் அல்லது எங்களுக்கு ஏராளமான கஷ்டங்கள்
பிரச்சனைகள் உள்ளன என்பது  போன்ற மனநிலையில் தான் அனேகமாக நம்மவர்கள்  இருக்கிறார்கள் .
இப்படி ஓரளவு  ஒப்பாரி மனோபாவத்தில் இருப்பது மிகவும் பாதுகாப்பானது என்றும்  நம்மவர்கள் நம்புகிறார்கள் ,
அது ஏன் என்று எனக்கு புரியவில்லை?
 கோவில்களில் வழிபடும்போது ஏதோ எல்லாவறையும் பறிகொடுத்து அல்லல் படுபவர்கள்  போல  முகத்தை மிகவும் கடுமையாக வைத்துகொண்டு ஓரளவு சோகத்தையும் காட்டி கொண்டு கடவுளுக்கு தரிசனம் தருகிறார்கள்.
 இதுதான் கடவுளுக்கு பிடிக்கும் என்று நம்புகிறார்களோ?
இந்த அவதி முகபாவ வழிபாடு அல்லது துன்பத்தில் உழலும் முகபாவம்  கடவுளின் இரக்கத்தை பெற உதவியாயிருக்கும் என்று இவர்கள் உண்மையாகவே நம்புவதாக தெரிகிறது.
எல்லாம் இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் இருந்தால் மேலும் மேலும் ஏராளாமான சலுகைகள் கடவுளிடம் இருந்து  கிடைக்கும் என்று நம்புமாறு இவர்களுக்கு யார் கற்று கொடுத்தது ?
கடவுள் நம்பிக்கை இருப்பதாக  கூறுபவர்கள் கூட  கடவுளிடம் எதோ கெஞ்சி கூத்தாடி தான் வரங்களை பெறவேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இவர்கள்  கடவுளிடம் கூட பின் கதவால் காரியம் சாதிக்க நினைக்கும் மன நிலையில் உள்ளனர் , இதில் இருந்தான் சமுக மோசடியே ஆரம்பிக்கிறது , இந்த பாதிக்கப்பட்டவன் வியாதி அதாவது Victim Syndrome எனப்படும் வியாதியால் அவதியுறும் மக்கள் தொகை மிகவும் அதிகமாகி விட்டதாக தோன்றுகிறது .
நன்றாக மழை பெய்தால் என்ன இப்படி மழைபெய்கிறதே என்று சோக போஸ் கொடுப்பதும்  பின்பு அதே மழை நின்றுவிட்டால் அடடா இந்த மழை போதாதே என்று பெரும் ஏமாற்ற மடிந்த மாந்தர் போல போஸ் கொடுப்பதும் பெரிய கூத்துதான் .