இதைப்பற்றி சொன்னால் பலரும் கடந்தகால கொடிய யுத்தம் தான்
காரணம் என்று கூறி சுலபமாக தப்பிக்க பார்கிறார்கள்.உண்மை அதுவல்ல.
இன்னும் சரியாக சொல்லப்போனால் இந்த யுத்தம் உருவானதற்கே நமது ஆழ்மனதில் ஊறி
இருந்த குரோத மனப்பான்மை தான் காரணமாக இருக்குமோ என்று
எண்ணத்தோன்றுகிறது.
நமது ஆழ்மனதில் உள்ள உணர்சிகள் அல்லது எண்ணங்கள்தான் யதார்த்த நிகழ்வுகளாக
உருவெடுக்கின்றன. எமது unconscious mind இல் என்ன உள்ளதோ பெரும்பாலும் அதுவே
யதார்த்த நிகழ்காலமாக உருவாகிறது.
எம்மிடம் தான் கோபம் வெறுப்பு பொறாமை அவநம்பிக்கை போன்ற நெகடிவ் எண்ணங்கள் தாராளமாக உண்டே?
எம்மிடம் தான் கோபம் வெறுப்பு பொறாமை அவநம்பிக்கை போன்ற நெகடிவ் எண்ணங்கள் தாராளமாக உண்டே?
இதைத்தானே சமயங்களும் சொன்னது? தற்போது விஞ்ஞானமும் சொல்கிறது.
quantum physics என்று தற்போது அழைக்கப்படும் விஞ்ஞானம் இந்த பேருண்மையை விளக்க முற்படுகிறது.
எண்ணங்கள் எதுவுமே வீணாவதில்லை ஒவ்வொரு எண்ணமும் எல்லையற்ற சக்தியை
தன்னகத்தே கொண்டுள்ளது. இதைதான் மனம்போல வாழ்வு என்று தெளிவாக முன்னோர்
சொன்னார்.
வாழ்வு என்பது எதோ இரு சக்திகளின் இணைவுதான். இரவும் பகலும் போலவோ அல்லது
பூனையும் பூனையும் போன்ற எதோ இரு ஜீவராசிகள் இணையும்போது தான் வாழ்வு
உண்டாகிறது. இந்த இணைவு என்பது தாம்பத்தியம் மட்டும் அல்ல. ஒரு சிறுவனும்
இன்னொரு சிறுவனும் கூட சிறிது பேசி மகிழும் அந்த சில வினாடிகள்
அவ்விருவரும் வாழ்கின்றனர்.
இரு ஜீவராசிகள் ஒன்றினால் ஒன்று ஈர்க்கப்படும்போது ஏற்படும் மகிழ்வே வாழ்வு
எனப்படுகிறது. அனேகமாக இரு அறிஞர்கள் அல்லது இரு ரசிகர்கள் போன்ற இருவர்
சேர்ந்து பகிரும் சில வினாடிகளோ வருடங்களோ வாழ்வுதான்
நமக்கு அதாவது நம் மக்கள் சிரிப்பதற்கு கூட ஏதோ ஏதோ கணக்கு
கூட்டல் எல்லாம் போடுவார்கள்.ஆரிய கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாய்
இரு என்று வளர்க்கப்பட்ட நாம் ஆரியகூதும் ஆட தெரியாமல் காரியத்தையும்
கோட்டை விட்டதும் தான் ஊர் அறிந்த விடயமாச்சே?
ஆனால் இன்னும் ஏதாவது பாடம் இதில் கற்றோமா என்றால்......
வாழ்கை என்பது ஒரு process வாழ்கை என்பது ஒரு result அல்ல.
process இல் ஈடுபடுபவருகே வாழ்கை வசப்படுகிறது. Result என்பது முடிவில்
வருவது ரிசல்ட்இலேயே சதா தன கவனத்தையும் சக்தியையும் குவிப்பவற்கு வாழ்க்கை
அவரை விட்டு போய்விடும். அவர்தான் ரிசல்ட் டை நோக்கி ஒடுபவராசே? அதாவது
முடிவை நோக்கி ஓடுபவர்.
வாழ்கை என்பது ஒரு வகையில் ஆரியகூத்துதான் காரியத்தில் கண்ணாயிருப்பது என்பது சரியாகசொல்லபோனால் முடிவை நோக்கி ஒடுதலாகும்.
Be process oriented not be a result oriented person
Life is a process result is End game
No comments:
Post a Comment