Wednesday, January 20, 2016

இயற்கை விதிகளை அறியாமல் நாம் இயற்றிய விதிகள்......

Stephen Hawking says humanity is inching closer to demise, and we are to blame.
We are not going to stop making progress, or reverse it, so we have to recognize the dangers and control them. I'm an optimist, and I believe we can,"  he said.
எமது வாழ்வும் இந்த பிரபஞ்சத்தின் வாழ்வும் ஒன்றில் ஒன்று தங்கியே உள்ளன. இந்த பிரபஞ்சம் என்று நான் குறிப்பிடுவது எம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தைத்தான்.
எமக்கும் இந்த பிரபஞ்சதிற்கும் உள்ள இயற்கை விதிகள் ஒன்றுதான்.
எமக்கு முன்பாக நடந்து செல்லும் ஒரு வழிப்போக்கனும் நானும் பிரிக்கவே முடியாத படி இணைந்துதான் இருக்கிறோம்.
விஞ்ஞான ரீதியாக மட்டும் அல்ல  மெய்ஞானம் என்று கூறுபவர்களின் கூற்றுப்படியும் இதுதான் உண்மை.
உண்மையில் நான் வேறு அவன் வேறு அல்ல ... அல்லது அவன் வேறு அது வேறு அல்ல.
சற்று முன்பு கூட அவனின் ஒரு அங்கமாக இருந்த பல நுண் அணுக்கள் எனது அங்கமாக சுழற்சி வேகத்தில் மாறிவிடுகிறது.
இது விஞ்ஞான ரீதியான உண்மையாகும்.
இந்த நுண் அணுக்கள் வெறும் பௌதீக சமாசாரம் மட்டும் அல்ல.
அவை ஒவ்வொன்றிலும் செய்திகள் உணர்வுகள் உள்ளன.

அவற்றில் உள்ள செய்திகள் , உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்பன சதா ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளுக்கு அல்லது இன்னொரு
ஜீவராசிக்கு மாறிக்கொண்டே இருக்கின்றன.

Tuesday, January 5, 2016

சந்தேகம் கொள்....கேள்வி கேள்...சிக்னல்களை சரியாக புரிந்து கொள்......

அழகை ரசிக்கும் ஆற்றல்  எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் ஆண் பெண் கவர்ச்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உயிரனங்களின் வாழ்வுக்கும் அதற்கேற்ற வசதிக்கும் உரியதாக இன்றளவும் உலகம் இருக்கிறது.

இன்று நாம் நம்பிக்கை வைத்து பின்பற்றி வரும் கோட்பாடுகள் அல்லது
வாழ்க்கை முறை எல்லாம் எப்படி உருவானது?
பெரும்பாலும் இயற்கையின் அடிப்படை விதிகளை தூக்கி எறிந்து விட்டு சமயங்கள் கூறும் செயற்கையான பொய்யான கோட்பாடுகளின் அடிப்படையில்தான் பெரிதும் இன்றைய வாழ்வு அமைந்துள்ளது.

எமது தேவைகள் என்று எமக்கு தேவையே இல்லாத பல விருப்பங்களை எமது தலைமீது சுமத்தி எம்மை ஒரு பொதி சுமக்கும் கழுதைகளாக உருமாற்றி இருக்கிறது.
எமது உண்மையான தேவைகளை நோக்கி எம் உள்ளுணர்வுகள் ஓயாது குரல் கொடுத்து கொண்டு இருக்கையில் , அதற்கு நேர் எதிர்மாறாக எமது தலையில் சுமத்தப்பட்ட விருப்பங்களை நோக்கி நாம் மனத்தால் ஓடுகிறோம்.
விளைவு இரண்டுக்கும் நடுவில் மாட்டுப்பட்டு அவதிபடுகிறோம்.
எமது உள்ளுணர்வுக்கு நாம் ஒருபோதும் உண்மையாக இருந்ததே இல்லை. எனவே எமது உள்ளுணர்வுகளுக்கு இந்த வாழ்க்கை உகந்ததாகவே இல்லை.