Sunday, November 4, 2012

தவறான கோட்பாடுகளில் இருந்து நாம் விடுபடுவது இலகுவான காரியமல்ல

வாருங்கள் சிந்திப்போம் கண்டுணர்வோம் உருவாக்குவோம்

நமது மனம் எவ்வளவு தூரம் எமக்கு நடைபெறும் நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது என்பதை பற்றி நாம் மிகவும் சிரத்தையோடு ஆராய வேண்டி இருக்கிறது . எமது உடல் வளர்ச்சி ஆரோக்கியம் மட்டும் அல்லாது எமது தோற்ற பொலிவு கூட எமது மனத்தை பொறுத்துதான் அமைகிறது என்பது மிகவும் நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும். எமக்கு வாழ்வில் சம்பவிக்கும் வெற்றி தோல்வி மகிழ்ச்சி துக்கம் போன்ற எல்லாமே எமது மனத்தின் தன்மையை பொறுத்தே அமைகிறது. இந்த உண்மைகள் தற்போது ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இன்னும் இதில் உள்ள மர்மங்கள் நமக்கு சரியாக புரியவில்லை என்றுதான் எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனெனில் எமது மனம் என்ற கருவியை நாம் சரியாக உபயோகிக்க தெரிந்திருந்தால் எமக்கு துன்பங்களே இருக்காது நோய்களும் கூட இருக்காது. நல்லதையே நினைப்பவருக்கு கூட பல தீமைகள் நடப்பது ஏன்? நாம் ஆழமாக சிந்திக்க வேண்டி உள்ளோம். மனம் என்ற கருவியை நாம் சரியான முறையில் உபயோகிக்க பழக வேண்டும். இருட்டிலே ஒன்றுமே தெரியாமல் கருவியை தவறான திசைக்கு திருப்புகிறோம், அநேகமானவர்க்கு இந்த தவறுதான் நடக்கிறது. உண்மையில் இது ஒரு formula இது ஒரு சூத்திரம். ஆச்சரியகரமாக இந்த சூத்திரம் பலருக்கும் சரியாக தெரிவதில்லை. இது கொள்கை அளவில் விளங்குவது இலகுதான் ஆனால் நடை முறையில் பழக்கமாக கொண்டு வருவது மிகவும் கடினம். ஏனெனில் எம்மில் ஆழமாக ஊறி விட்ட தவறான கோட்பாடுகளில் இருந்து நாம் விடுபடுவது இலகுவான காரியமல்ல.Un learning is not easy as Learning கூட்டு முயற்சியாகவும், தனித்தனியே சுய பரிசோதனையாகவும், மிக கடினமான பயிற்சி முறைகள் மூலமாகவும் தான் இந்த வெற்றி Formula வை கண்டறிய வேண்டும் எமது வாழ்வு நாம் விரும்பிய படி அமைவதற்கு உரிய சக்தியை நாம் எமக்குள் இருந்தே பெறவேண்டும் நாம் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், இது மிகவும் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான மெய்ஞான உண்மையாகும் . நாம் உண்மையில் ஒன்றும் புதிதாக கூறவில்லை. எல்லா அறிவும் இங்கேயே இருக்கிறது, எத்தனையோ ஞானிகளும் அறிஞர்களும் மீண்டும் மீண்டும் பல பல விதமாக கூறியவைதான் ஆனால் என்ன அவை எமக்கு சரியாக புரியவில்லை. இந்த அற்புத பிரபஞ்சத்தின் அற்புதங்கள் எம்மால் அளந்து கண்டு பிடிக்க முடியாதுதான். ஆனால் எம்மால் கண்டு பிடிக்க கூடிய மர்மங்களை கூட நாம் கண்டு பிடிக்க தயங்குகிறோம் பூனை கண்ணை மூடிக்கொண்டிருக்கும் comfort zone இற்குள் நாமும் கண்ணை திறந்து பார்க்க பயப்படுகிறோம். யாராவது ஏதாவது ஒன்றை கூறி நம்புங்கள் என்றால் நம்பிவிட தயாராகிறோம் , ஏனெனில் நம்புவது மிகவும் சுலபமான காரியமாகும். நாமோ சிந்திப்பதற்கு மிகவும் சோம்பல் படுகின்ற ஒரு மக்கள் கூட்டமாகும். எதையும் நம்பி கண்ணை மூடி கொண்டிருப்பது புண்ணியம் என்று வேறு தவறாக எண்ணி கொள்கிறோம் .சிந்திப்பது ஆண்டவனுக்கு பிடிக்காது அது ஆணவத்தை காட்டுகிறது பேசாமல் நம்புவது இறைவனுக்கு உகந்தது என்று சமய வாதிகளும் மனிதர்களின் அறியாமையில் உயிர்வாழும் சுயநலமிகளும் நம்மை மிக மோசமான இருட்டில் தள்ளி விட்டார்கள். சிந்திப்பது பாபம் நம்புவது புண்ணியம். நாம் ஒவ்வொருவரும் ஒருவகையில் ஒவ்வொரு சிருஷ்டியாளர்களே. எமது சிருஷ்டியின் ஊடாக முழு பிரபஞ்சமும் தனது சிருஷ்டியை நிகழ்த்தி கொண்டிருக்கிறது மரம் செடி மற்றும் நாய் பூனை போன்ற சகல ஜீவா ராசிகளும் சிருஷ்டியாளர்களே. பிரபஞ்சம் என்பது என்றும் இயங்கி கொண்டிருக்கும் சிருஷ்டி இயல்பு தான் என்று கூறலாம். படைப்பில் மரம் செடி கொடியை விட நாம் ஒன்றும் உயர்ந்தவர்கள் இல்லை. சரியாக சொல்லபோனால் எல்லாமே உயர்ந்தவைதான். ஒவ்வொன்றும் தன்னை தானே சிருஷ்டித்து கொள்கிறது ஒவ்வொரு தனி தனி சிருஷ்டியும் சேர்ந்தது தான் முழு பிரபஞ்சம் ஆகிறது. நாம் எம்மை எப்படி சிருஷ்டித்து கொள்ள வேண்டும் என்பது எமது மனம் வாக்கு காயத்தில் தான் இருக்கிறது. எம்மை நாம் எப்படி உருவாக்கி கொள்ள வேண்டும்? எமக்கு எது வேண்டும் ? நாம் வேண்டுவதை அடைவது எப்படி ? இவற்றை பற்றி எப்போதாவது நாம் சிந்தித்து இருப்போமா? வாருங்கள் சிந்திப்போம் கண்டுணர்வோம் உருவாக்குவோம்

No comments: