Friday, July 26, 2013

எனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான LOVE ?


பரஸ்பரம் அன்பான
உறவுகள் மிகவும் இனிமையானவையாகும் , நாம்
அனுபவிக்கும் உறவுகள் பெரும்பாலும் பிறரை ஒரு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்க பயன்படும் தந்திரமாகவே கருதுகிறோம் . பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே உள்ள உறவானாலும் அல்லது காதலன் காதலிக்கு இடையே உள்ள உறவாக இருந்தாலும் அவை பெருதும் ஒரு சுய நலம் அல்லது (possessiveness) எனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான பொருள் போன்ற ஒரு உணர்வின் அடிப்படையில் தோன்றும் காரணமாகவே இருக்கிறது,
இப்படி அன்பின் அடிப்படையே புரிந்து கொள்ளப்படாமல் வெறும் எனது பொருள் போன்ற உணர்வின் அடிப்படையில் உள்ள உறவுகள் உண்மையில் உறவுகளே அல்ல . நம்மில் பெரும்பாலோரின் உறவுகள் இப்படிதான் அமைந்து விடுகின்றது ,
நாம் விரும்பும் பொருள் எமக்கு கிடைக்காவிடின் நாம் ஆத்திரப்பட்டு அதை அழித்துவிடும் அளவுக்கு சென்று விடும் கொடுமை எல்லாம் இந்த possessiveness எனப்படும் சுயநலதினால் தான் உருவாகிறது ,
விலகிப்போகும் காதலிக்கு தீங்கு செய்வது , மகன் வாழ்வு கெட்டாலும் பரவாயில்லை போட்டியாக உள்ள மருமகளுக்கு பாடம் படிப்பிப்பது  போன்று ஏராளமான உதாரணங்களை கூற முடியும் ,
குடும்ப அமைப்பு முறை இறுக்கமாக இருப்பதாக தம்பட்டம் அடித்து கொள்ளும் ஆசிய ஆபிரிகக் நாடுகளில்தான் மனித உறவு முறைகள் எல்லாம் மிகவும் திரிபடைந்து மாசுபட்டு உள்ளது ,
குடும்ப பாரம்பரியம் என்ற பெயரால் எத்தனை கொடுமைகள்?
இந்த குடும்ப உறவு பெருமையை பற்றி  அதிகமாக பேசும் நாடுகளில்தான் கொடுமைகள் இன்னும் குறையவில்லை !
சக உறவினரை அல்லது நண்பரை தனது கட்டு பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்கவே அன்பு என்று கூறிகொள்ளும் ஒருவித பித்தலாட்ட possessiveness ஐ மனதின் அடியில் புதைத்து வைத்துள்ளார்கள் .

Thursday, July 11, 2013

ஆத்மீக போர்வையில் இருக்கும் ஆஸ்ப்ரின் மாத்திரைகளை தூக்கி எறியுங்கள்

அண்மைக்கால வரலாற்றில் தோன்றிய அறிவாளிகள் அல்லது ஞானிகள் என்று சொல்லப்படுபவர்களின் பட்டியலை எடுத்து கொண்டால் உண்மையில் அது ஒரு சிறிய பட்டியலாகதான் இருக்கும்,
போலி வரலாறுகள் தாராளமாக உண்டு ,   கவனத்தில் கொள்ள கூடிய அளவு முத்திரை பதித்தவர்கள் சிலரே,
அவர்களின் பாதைகள் விதம் விதமாக அமைந்துள்ளன,
எமக்கு ஏற்புடையதாக இல்லாதவிடத்தும் சிலரின் தேடல்களின் ஒரு நேர்மை இருந்தது உண்மையே.
யு.ஜி,கிருஷ்ணமூர்த்தி, ஜே,கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் எமது கவனத்தை சற்று கவர்ந்து உள்ளார்கள்
மனிதனின் பிறப்பு இறப்பு கடவுள் பிரபஞ்சம் போன்ற பெரிய பெரிய கேள்விகளுக்கு கொஞ்சமாவது உண்மையான பதிலை தேட வேண்டும் என்ற அவாவில் மிகவும் விஞ்ஞான பூர்வமாகவும் நேர்மையாகவும் ஆய்வு செய்தவராவர்.
உண்மையில் அவர்கள் எந்த ஒரு கேள்விக்கும் இதுதான் பதில் என்று கூறவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும் .
 கேள்விகளையே மீண்டும்  பதில்களாக அல்லது பதில்களையே மீண்டும் கேள்விகளாக மாற்றி நம்மை குழப்பிவிடும் கைங்கரியத்தையே செய்துள்ளனர் .
உண்மையில் ஏதாவது ஒரு பதிலை தேடும் எமது கேள்விகள் பெரும்பாலும் சரியான பதில் என்பலும் பார்க்க எமக்கு உகந்ததான பதிலையே எதிர்பார்த்து கேட்கப்படும் கேள்விகளாகும் ,
போலி பதில்கள் தற்காலிக ஆத்மீக வார்த்தைகள் போன்ற இனிப்புக்கள் எதுவும் கிரிஷ்ணமுர்த்திகளிடம் கிடையாது ,
கேள்விகளோடு வருபவர்களுக்கு இதோ நான் பதில் தர காத்திருக்கிறேன் என்று கடை விரித்து காத்திருக்கும் கள்ள சாமிகள் ஆசாமிகள் நிறைந்திருக்கும் உலகில்,
எந்த விதமான தாலாட்டு மருந்துகளும் கிடையாது,
மாறாக கேள்வி கேட்பவரை மேலும் பல கேள்விகள் கேட்க தூண்டும் படியான குழப்ப வேலைகளையே கிரிஷ்ணமுர்த்திகள் செய்தனர் . ஓஷோ கூட இதே போல தூக்கத்தில் இருப்பவரை தட்டி எழுப்பிவிடும் வேலையைத்தான் செய்தார் ,