Thursday, November 14, 2013

inconvenient spirituality நிச்சயமாக நீ சாமி கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் அடையப்போகும் இடம் ஒன்றுதான்

நான் உங்களை தொந்தரவு செய்வதற்கு நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும் ஆனால் உண்மையில் மகிழ்ச்சி அடையவேண்டும்
 எதையும் புதிதாக அறிவதிலும் பார்க்க ஏற்கனவே நாம் அறிந்தவற்றை மறப்பது அவ்வளவு எளிதல்ல .
ஒரு குழந்தையின் விளையாடு பொருளை பறித்தால்அதற்கு கோபம் வருவது இயல்புதான் .
நீங்கள் சந்தோஷமாக கொண்டாடும் கோட்பாடுகள் நம்பிக்கைகளை எல்லாம் விட்டு சற்று மாற்றி யோசிப்பது அவ்வளவு எளிதல்ல ,
 ஏற்கனவே நாம் அறிந்த ஒன்று தற்போது தவறு என்று நமக்கு  தெரிய வருவதற்கு மிகுந்த நுட்பமான அறிவு வேண்டும் ,
அதை விட  தைரியம் வேண்டும்,
நாம் சரி என்று பரிபூர்ணமாக பல யுகங்களாக நம்பிய சமாசாரங்களை  திடீரென்று அவை எல்லாம் சுத்த ஹம்பக் என்று ஏற்று கொள்ள எல்லை இல்லாத துணிவு வேண்டும்,
முதலில் பயம் எங்கள் கண்களை திறக்க எம்மை அனுமதிக்காது ,
அப்படி விழிப்புணர்வு பெற்றாலும் அனுபவித்த இருட்டு சுகம் ஒரு போதையாக எம்மை தலை தூக்க விடாது,
இனிமேல் தூங்கவே முடியாது தொந்தரவு  தாங்கவே முடியாது என்ற நிலை வருபோது சிலவேளை நாம் எமது தூக்கத்தை விட்டு துயிலேழுவோம் . இங்கே நான் தூக்கம் என்று குறிப்பிடுவது சிந்தனை தூக்கத்தைத்தான் , ஆழமாக பதிக்கப்பட்ட நம்பிக்கைகள்  எமது ஆதார மெத்தைகளாக சொகுசான நித்திரையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தந்து விட்டிருக்கிறது,
அந்த மெத்தையின் சுகத்தை நாம் அவ்வளவு இலகுவில் தியாகம் செய்துவிட முடியாது, பழக்க தோஷம் தலை தூக்க விடாது,
கண் முன்னாள் தெரியும் உலகத்தை விட கண்ணுக்கு தெரியாத விண்ணுலகம் சொர்க்க லோகம் ஆத்மா அநுபூதி என்பதாக பலவிதமான கோட்பாடுகள் பலவற்றையும் நம்புகிறோம் ,
இவை எல்லாம் உண்மையில் இருப்பதாகவே வைத்துகொள்வோம் ,
இவை எல்லாவற்றையும் விட இந்த மனித வாழ்வு அற்புதமானது,
கண்முன்னே பரந்து விரிந்து சதா ஜீவனுடன் காட்சி தரும் இந்த அற்புத வாழ்வை விட இந்த அற்புத உலகத்தை விட வேறு ஒன்றும் தற்போது தேவை இல்லை ,

ஏராளமான சமயம் சார்ந்த கனவுலோகம் அல்லது உறுதிமொழிகள் எல்லாம் உண்மையில் எதுவித பிரயோசனமும் இல்லாதவை , இதை உங்களால் ஏற்றுகொள்ளவே முடியாது,
அவ்வளவு தூரம் அவற்றை எல்லாம் நம்பி விட்டிருக்கிறீர்கள் .
அவை எல்லாம் உண்மையாகவே இருந்தால் உங்களை நிச்சயம் ஒரு நாள் வந்து அடையத்தான் போகிறது,
ஆனால் அது இன்றைய சமாசாரம் அல்ல..
இன்றைய உலகமும் இன்றைய வாழ்வும் மட்டுமே இன்றைய நாடகம் ,
இந்த நாடகத்தில் உனது வேஷம் அல்லது உனது பாத்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதில் மட்டுமே உனது வெற்றி அல்லது பிறவி பயன் அடங்கி உள்ளது,
அது வரும்போது அது வரட்டும்,
இப்போ இது இருக்கிறது ,இதை கவனி, மீதி எல்லாம் அந்த அந்த நேரத்தில் பார்த்து கொள்ளலாம் .
நீ சிருஷ்டி கர்த்தா என்பதை  ஒப்புகொள்ளாத கோட்பாடுகள் அல்லது சமய நம்பிக்கைகள் எல்லாம் உன்னை வெறும் டம்மி பீசாக மாற்றி விட்டிருக்கிறது,
நீ டம்மி பீசே அல்ல ,
உன்னை சுற்றி உள்ள உலகத்தை நீதான் கவனிக்க வேண்டும்,
ஏனெனில் நீதான் உனக்கு இன்றைய கடவுள்.
இது உனக்கு தெரியவில்லை ,
இதுதான் உனது பிரச்சனை ,சமயங்களும் சரி ஆத்மீக கோட்பாடுகளும் சரி பெரும்பாலும் உன்னை ஒரு டம்மி பீசாகவே மாற்றிவிட்டிருக்கிறது,
இந்த கருத்து உன்னை நிச்சயம் தொந்தரவு செய்யும் ஒரு கருத்தாகவே இருக்கும் ,
தூக்கத்தில் இருக்கும் உன்னை தட்டி எழுப்புபவரை உனக்கு பிடிக்காதுதான்,
மனித குல வரலாற்றில் மனிதர்களை தூங்க செய்த பெரியவர்கள் தான் அதிகம் தோன்றி இருக்கிறார்கள்.
மிகவும் அருமையாக தான் தொந்தரவு செய்பவர்கள் தோன்றி இருக்கிறார்கள்.
ஒரு சோக்கிரட்டீஸ் ஒரு டார்வின் ஒரு ஐசக் நியுட்டன் இரு கிருஷ்ணமூர்த்தி  ஒரு ஓஷோ இப்படி விரல் விட்டு எண்ணி விடலாம் ,
மேலும் பலரை இந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்றால் அவர்களின் போதனைகளை எல்லாம் தப்பு தப்பாக மாற்றி மாற்றி எழுதி வைத்துள்ளார்கள் .அவை எவை என்று விலாவாரியாக எழுத எனக்கு விருப்பம் இல்லை,
ஆத்மீக தேடல் என்ற புரியாத பாடத்தில் தேடி தேடி வாழ்க்கை முழுதும் படித்து முடிந்த பின் பார்த்தால் ஒன்றுமே இல்லை .
ஓடி தேடி கடைசியில் பார்த்தால் தேடுவதற்கு ஒன்றுமே இல்லை ,
இல்லாத ஒன்றுதான் ஆனால் ஒரு பொல்லாப்பும் இல்லை ,
நிச்சயமாக நீ சாமி கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் அடையப்போகும் இடம் ஒன்றுதான் ,
அது உனது நாய்க்குட்டியும் பூனை குட்டியும் நீயும் நானும் கடவுளாக அல்லது இந்த பிரபஞ்சமாக இருப்பதாக அறியும் இடம்தான்,
அது வருபோது பார்த்து கொள்ளலாம் ,
இப்போ இந்த உலகத்தை பார் ,
இது தான் இன்றைய கடவுள் ,

No comments: