Monday, April 29, 2013

Thought level conversation மனதோடு மனம் பேச முடியுமா ? நிச்சயமாக!

நாம் அனேகமாக மறந்து விட்ட அல்லது தொலைத்து விட்ட எமது முதல்
சிறந்த கலைதான் மனதோடு மனம் பேசும் இயல்பு. 
மனிதர்கள் கண்டு பிடித்த கருவிகளிலேயே மிகவும் அற்புதமான கருவியாக
சொற்களைத்தான் கூறவேண்டும்.
சொற்கள் ஒரு மொழியாக பரிணாம வளர்ச்சி  முன்பே ஏராளமான செய்திகளை உணர்வுகளை சப்தங்கள் மூலமாக மனிதன் பரிமாறி கொண்டான் ,
ஆனால் சப்தங்களோ சொற்களோ மனிதானால் கண்டு பிடிக்க முதல் மனிதன் ஏனைய பிராணிகள் போல உள்ளுணர்வுகளால் மனிதனும் செய்திகளை  பரிமாறி கொண்டான் .
பின்பு மொழியறிவு வளர்ந்த பின்பு பாய்ச்சல் வேகத்தில் மனித சமுதாயம் முன்னேறி விட்டது .
இந்த முன்னேற்றத்தில் மனித குலம் ஏதாவது ஒன்றை இழந்து விட்டதா என்றால் ஆம் என்றே கூற கூடிய ஒரு உன்னதமான கலை அல்லது திறமை ஒன்றை குறிப்பிடவேண்டி உள்ளது.
மனதோடு மனம் பேசும் கலையை மனிதர்கள் ஒரு காலத்தில் பெற்றிருந்தார்கள்.
காலப்போக்கில் அந்த திறமை மறைந்து விட்டது . ஆனாலும் வெகு சிலர் தங்களின் சுய மேம்பாடு காரணமாக அந்த திறமையை பெற்றிருந்தார்கள் .

Sunday, April 28, 2013

Disempower உங்கள் சுயத்தை உங்களிடம் இருந்து பறிப்பவர்கள் உங்கள் அருகிலேயே

Disempower என்பது ஒருவருக்கு உரிய உரிமையை அல்லது சக்தியை நாம்
பறித்தெடுப்பது என்று கூறலாம்
இந்த சொல் Dis Em powering நமது சமுகத்தில்  மிக அழுத்தமாக மாற்றவே முடியாத அளவு அல்லும் பகலும் நடை பெரும் ஒரு சமாசாரம் தான் . அநேகமானோர் பிறருக்கு உதவி செய்கிறோம் பேர்வழி என்று உண்மையில் அவர்களது சுயத்தை பறிமுதல் செய்யும் காரியத்தை தான் செய்கிறார்கள் .
வாழைபழத்தை உரித்து வாயுக்குள் வைத்தல் உதவி அல்ல
கேட்ட உடனேயே அவற்றை நிவர்த்தி செய்து விடுவது உதவி அல்ல .
அவரே தனக்கு வேண்டிய வாழைப்பழத்தை தான் விரும்பிய நேரத்தில் தான் விரும்பிய விதத்தில் பிறரின் நேர்முக அல்லது மறைமுக வற்புறுத்தல் எது மின்றி உண்பதற்கு நாம் செய்யும் வசதிகளை தான் உதவி என்று கூற முடியும்
தனது சுயத்தை இழந்த மனிதரால் ஒரு போதும் நல்ல ஒரு படைப்பை  ஒரு போதும் உருவாக்கவே முடியாது . சுயம் இழந்த மனிதர் தனது சுயம் எது என்று தேடி திணறுவதிலேயே வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விடுகிறது .
இந்த சுயம் இழந்த மனிதர்கள் நல்ல வெற்றிகரமான மனிதர்களாக முடியாது என்று கூற முடியாது  .
ஏனென்றால் இங்கே வெற்றிகரமான மனிதர்கள் என்பது வெறும் வெளி தோற்றமாக மட்டுமே அறியப்படுகிறது .
உண்மையான மனிதவளர்ச்சி என்பது அவர் எந்த அளவு சுய சிருஷ்டி கர்த்தாக இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்
சுயம் இழந்தவர் அதிலிருந்து மீண்டு வரவே முடியாவிட்டால் அவர் ஒரு நல்ல படைப்பாளி ஆகவே முடியாது.

Saturday, April 27, 2013

Desensitization எமது மென்மையான உணரவுகளை மழுங்க அடிக்கும் ஊடகங்கள்

De Sensitization என்பதற்கு சரியான தமிழ் சொல் எனக்கு
தெரியவில்லை ,
ஓரளவுக்கு கூச்சம் தெளிதல் அல்லது குளிர் விட்டுப்போச்சு என்று பேச்சுவழக்கில் குறிப்படுவது போல என்று அர்த்தப்படுத்தி கொள்ளலாம் என்றெண்ணுகிறேன்.
உதாரணமாக ஒரு வன்முறை காட்சியை மீண்டும் மீண்டும் டீவியிலோ திரைப்படத்திலோ பார்த்துகொண்டிருந்தால் அதில் வரும் சம்பவங்கள்  நமக்கு மிகவும் பழக்கப்பட்ட சம்பவங்களாகிவிடும்,
சந்தர்ப் சூழ்நிலை மாறும்போது நாமும் அப்படிப்பட்ட செயல்களை செய்யக்கூடியவர்களாக மாறிவிடுகிறோம் .
ஏனெனில் சதா நாம் பார்க்கும் காட்சிகள் நமது நுண் உணர்வுகளை மழுங்க அடித்து விடுகின்றன .
அது மட்டுமல்ல மீண்டும் மீண்டும் நாம் பார்க்கும் காட்சிகளால் நாம் எம்மையும் அறியாமல் ஈர்க்கப்பட்டு விடுகிறோம் ,
அடிக்கடி வன்முறை படங்களை பார்த்துவிட்டு சிறுவர்கள் சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவது அடிகடி நடைபெறுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது ,

Friday, April 19, 2013

புரியாத பெயர்கள் ! தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு ? தன்னை தானே தாழ்த்தும் Identity Crisis

நம்மவர்கள்  தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது கூடுமானவரை 
எந்த வித அர்த்தமும் இல்லாத பெயர்களாக பார்த்து வைத்துவிடுகிறார்கள் , அதிலும் அந்த பெயர்கள் எந்த விதத்திலும் நமது மொழி கலாசாரம் மதம் போன்றவற்றை காட்டி கொடுத்துவிடக்கூடாது என்பதில் மிக ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் ,
உதாரணத்திற்கு ஏராளமான பெயர்களை கூற முடியும் , நிகொசன்  டிகொசன் லிகொசன் போன்று ஏதாவது கன்னா பின்னா என்று வைத்துவிடுகிறார்கள் ,
இந்த பெயர்களை கொண்டு யாரும் இக்குழந்தைகள் எந்த நாட்டை அல்லது எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடித்து விட முடியாது ,
சிலர் அதிஷ்ட விஞ்ஞானம் என்ற நியு மொராலாஜி யின் தாக்கம் என்றும் கூறுவார் இது ஓரளவு உண்மைதான் என்றாலும் மிகச்சரியான காரணம் வேறு ஒன்று இருக்கிறது
இது ஒருவகை உளவியல் பிரச்சனை .
தங்களை பற்றிய அளவு கடந்த தாழ்வு மனப்பான்மை  தங்கள் அடையாளங்கள் தங்கள் குழந்தைகளை பாதித்து விட கூடாது என்ற  Insecure உணர்வு தான் காரணமோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியாது ,
தங்களை விட தங்கள் சமயம் பெரிது அல்லது கலாசாரம் பெரிது.
இது போன்ற ஏதோ ஒரு அடையாளம் தங்களைவிட பெரிது என்று நம்ப வைக்கப்பட்ட சமூகத்திடம் இந்த குணம் இருப்பது இயற்கையே , ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுயசிந்தனையை புறந்தள்ளி நம்பிக்கையே நல்லது என்ற கோட்பாட்டினால்  வழிநடத்தப்பட்டு   .
சுயம் என்பதை அடியோடு இழந்து விட்ட ஒரு சமுதாயம்  தான் தனது அடையாளத்தையே  மிகவும் கேவலமாக நினைக்க முடியும்

Sunday, April 14, 2013

உங்கள் மனதை விட உங்கள் உடல் புனிதமானது

நமது உடலை விட மனம் மிக நுட்பமானது அல்லது உயர்ந்தது அல்லது தெய்வீகமானது என்பது போன்ற கருத்துக்கள் கோட்பாடுகள் எம்மனதில் ஆழமாக வேருன்றி இருக்கிறது .
இந்த விதமான கோட்பாடுகள் அனேகமாக மதங்களின் கண்டு பிடிப்பாக தான் இருக்கிறது அல்லது மதம் சார்ந்த கலாச்சார பின்னணியில் இருந்து உருவானவையாக இருக்கிறது .  இந்த கோட்பாடு எமது மனதில் எவ்வளவு தூரம் ஆழமாக பதிந்து உள்ளதோ அவ்வளவோ தூரம் எமது உடலுக்கு நாமே மிகபெரும் எதிரியாக நாம் நடந்து கொள்கிறோம் ,

பிற உயிரினங்களை விட மனிதர்களுக்கு நோய்கள் அதிகமாக வருவதற்கு இதுவே முக்கிய காரணியாக இருக்கலாம் என்று அறிஞர்கள் தற்போது சிந்திக்க தலைப்பட்டுள்ளார்கள் .

மனமே உயர்ந்தது உடல் தாழ்ந்தது என்ற நம்பிக்கை உடலின் சுய மரியாதையை இழக்க செய்து விடுகிறது .

என்ன அன்பர்களே உடலுக்கும் சுய மரியாதை இருக்கிறதா ? என்று நீங்கள் வியப்படைய தேவை இல்லை நிச்சயமாக இருக்கிறது .