

ஓரளவுக்கு கூச்சம் தெளிதல் அல்லது குளிர் விட்டுப்போச்சு என்று பேச்சுவழக்கில் குறிப்படுவது போல என்று அர்த்தப்படுத்தி கொள்ளலாம் என்றெண்ணுகிறேன்.
உதாரணமாக ஒரு வன்முறை காட்சியை மீண்டும் மீண்டும் டீவியிலோ திரைப்படத்திலோ பார்த்துகொண்டிருந்தால் அதில் வரும் சம்பவங்கள் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட சம்பவங்களாகிவிடும்,
சந்தர்ப் சூழ்நிலை மாறும்போது நாமும் அப்படிப்பட்ட செயல்களை செய்யக்கூடியவர்களாக மாறிவிடுகிறோம் .
ஏனெனில் சதா நாம் பார்க்கும் காட்சிகள் நமது நுண் உணர்வுகளை மழுங்க அடித்து விடுகின்றன .
அது மட்டுமல்ல மீண்டும் மீண்டும் நாம் பார்க்கும் காட்சிகளால் நாம் எம்மையும் அறியாமல் ஈர்க்கப்பட்டு விடுகிறோம் ,
அடிக்கடி வன்முறை படங்களை பார்த்துவிட்டு சிறுவர்கள் சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவது அடிகடி நடைபெறுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது ,
இன்றைய பத்திரிகைகள் திரைப்படங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்போன்றவை சதாதிகைப்பூட்டும் விபத்து அல்லது கோரசம்பவங்கள் போன்றவற்றை மீண்டும் மீண்டும் மிகைபடுத்தி காட்டி அச்சம்பவங்கள் பற்றிய எமது மென்மையான உணர்வுகளை மழுங்க அடித்து விடுகின்றன .
காலப்போக்கில் அதுபோன்ற சம்பவங்கள் எமது ஆழமான மனிதில் அல்லது உள்ளுணர்வில் பதிந்து விடுகின்றன
எந்த விதமான எண்ணங்கள் எமது உள்ளுணர்வில் ஆழமாக பதிந்து விடுகின்றனவோ அவையே பின்பு நிதர்சனமான உணமைகளாக பலித்து விடுகின்றன என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.
உண்மையில் பத்திரிகைகள் மிகவும் மோசமான ஒரு பாதையில் செல்வது பெரும் துரதிஷ்டமாகும் ,பெரும்பாலான பத்திரிகைகள் சதா ஏதோ ஒரு பரபரப்பை வாசகர்களுக்கு வழங்கி எப்போதும் ஒரு அவல நிலையிலேயே படிப்பவர்களை வைத்திருக்கும் காரியத்ததைதான் செய்துகொண்டிருக்கின்றன.
அதிலும் தமிழ் பத்திரிகைகள் சதா மக்கள் எல்லோரும் எப்போதும் துன்பத்தையே எதிர் கொள்ள வேண்டியுள்ளது என்ற உருவகத்தையே மக்களுக்கு மீண்டும் மீண்டும் போதிக்கின்றன .
விபத்து அல்லது ஏதாவது குற்ற நிகழ்வுகள் போன்றவற்றை மிகவும் விலாவாரியாக மீண்டும் மீண்டும் மக்கள் மனதில் பதிய வைக்கிறார்கள் ,
நல்ல விடயங்களை பற்றி அவ்வளவாக எழுதுவதில்லை
இன்றைய பத்திரிகைகளை பார்க்கும் எவரும் ஏதாவது துன்பமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளனவா என்று சிரத்தையோடு பார்க்க பழக்கப்பட்டு விட்டார்கள்
அதிலும் இந்த இயக்க கலாசாரம் வந்தாலும் வந்தது சதா இரத்த வாடை வீசும் பத்திரிகைகளின் விற்பனை அமோக மாகிவிட்டது ,
கடந்த காலங்களில் பத்திரிகைகளிலும் இதர ஊடஹங்களிலும் வீசிய இரத்த வாடை பின்பு மக்களின் வாழ்விலும் வீசியதை பார்த்தோம் ,
சதா நாம் பார்க்கும் அல்லது பார்க்க விரும்பும் காட்சிகள் எம்மை நோக்கி வரும் என்பது விஞ்ஞான உண்மையாகும் , நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை
No comments:
Post a Comment