Thursday, February 8, 2018

இயற்கைக்கும் இறைவனுக்கும் இடையே ஓயாத சதுரங்க வேட்டை

அனேகமாக எல்லா மனிதர்களின் மனதிலும்  ஒரு திருட்டு புத்தி எப்பொழுதும்
ஒழித்துகொண்டே இருக்கும். அதற்கு காரணம் மனிதர்களின் சிந்தனைகள் மதங்களால் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் .
அதன் காரணமாகவே ஒரு பயமும் இருக்கிறது . அண்மையில் வெளியான சதுரங்க வேட்டை என்றொரு படம்  .இன்னும் பார்க்காவிட்டால் பாருங்கள் .
அதில் வரும் ஒரு வசனம் , ஒருவரை ஏமாற்றவேண்டும் என்றால் அவரின் ஆசையை முதலில் தூண்டவேண்டும் . அந்த ஆசையினால் அவர் தூண்டப்பட்டால் அவரை ஏமாற்றுவது சுலபம் என்பதாக அந்த வசனம் இருக்கும் .
இதுதான் அனைத்து மதங்களினதும் அடிப்படை தத்துவம் .. இதுமட்டுமல்ல இன்றைய காப்பரெட் கம்பனிகளின் தத்துவமும் இதுதான் ,
இன்னும் சரியாக சொல்லப்போனால் மதங்கள்தான் அன்றைய காபரெட் கம்பனிகள். இரண்டுக்கும் அடிப்படையில் வேறு பாடே கிடையாது.

ஒருவர் தன் வீட்டை ஒழுங்காக அழகாக பார்த்துகொண்டிருப்பதை
பொறுக்காமல் அவரை குழப்பி அவரை அவரது வீட்டில் இருந்து வெளியே அழைத்து தங்கள் மதக்கம்பனிகளின் வருமானத்தை பார்ப்பதுதான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை செய்து கொண்டிருக்கின்றன.

மதங்களால் ஏராளமான நல்ல விடயங்கள் நடந்துள்ளனவே என்று நீங்கள் எண்ணக்கூடும் . ஆனால் உண்மையில் அவை எல்லாவற்றிலும் மதங்கள் ஒருவகை சவாரியே செய்துள்ளதுதான் உண்மை.
நல்லதோ கெட்டதோ மக்களின் அத்தனை விடயங்களிலும் தாங்கள் முன் நிற்கவேண்டும் என்பதுதான் மதங்களின் அண்டர் கிரவுண்ட் கொள்கையாகும்.

திருமணமென்றால் மதம்தான் மணமக்கள் .... இழப்பு வீடு என்றாலும் மதங்கள்தான் மையக்கருவாக இருக்கவேண்டும் என்பதுதான் மதங்களின் நோக்கம்.
இதுதான் கம்பனிகளுக்கும் மதங்களுக்கும் உள்ள அடிப்படை தளம்.

நல்ல காலம் மனிதர்களை விட இதர உயிரனங்கள் ஒன்றும் மதங்களையும் கடவுள்களையும் தேடி அலையவில்லை .
எனவே அவை இந்த அழகிய பிரபஞ்சத்தை கெடுக்கவில்லை.
மனிதர்கள் ஏதோ அளப்பெரிய சாதனையும் கடும் உழைப்பும் மேற்கொண்டு கடவுளை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அதே கடவுளை அடையவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
அந்த காலத்தில் மிகப் பெரும்  கில்லாடிகள் இருந்திருக்கிறார்கள்.
அடம்பிடிக்கும்  குழந்தைகளுக்கு  அம்புலிமாமா வருவார்  என்று தாய்மார் அளக்கும் கதைகள் போலவே  மனிதர்களுக்கு  ஏராளமான கற்பனைகளை விற்பனை செய்துள்ளனர் .