
சிறந்த கலைதான் மனதோடு மனம் பேசும் இயல்பு.
மனிதர்கள் கண்டு பிடித்த கருவிகளிலேயே மிகவும் அற்புதமான கருவியாக
சொற்களைத்தான் கூறவேண்டும்.
சொற்கள் ஒரு மொழியாக பரிணாம வளர்ச்சி முன்பே ஏராளமான செய்திகளை உணர்வுகளை சப்தங்கள் மூலமாக மனிதன் பரிமாறி கொண்டான் ,
ஆனால் சப்தங்களோ சொற்களோ மனிதானால் கண்டு பிடிக்க முதல் மனிதன் ஏனைய பிராணிகள் போல உள்ளுணர்வுகளால் மனிதனும் செய்திகளை பரிமாறி கொண்டான் .
பின்பு மொழியறிவு வளர்ந்த பின்பு பாய்ச்சல் வேகத்தில் மனித சமுதாயம் முன்னேறி விட்டது .
இந்த முன்னேற்றத்தில் மனித குலம் ஏதாவது ஒன்றை இழந்து விட்டதா என்றால் ஆம் என்றே கூற கூடிய ஒரு உன்னதமான கலை அல்லது திறமை ஒன்றை குறிப்பிடவேண்டி உள்ளது.
மனதோடு மனம் பேசும் கலையை மனிதர்கள் ஒரு காலத்தில் பெற்றிருந்தார்கள்.
காலப்போக்கில் அந்த திறமை மறைந்து விட்டது . ஆனாலும் வெகு சிலர் தங்களின் சுய மேம்பாடு காரணமாக அந்த திறமையை பெற்றிருந்தார்கள் .
அவர்களை சமய பெரியோர் அல்லது ஞானிகள் சித்தர்கள் போன்று வரலாறு அடையாளம் காட்டிற்று .
அந்த மனதோடு மனம் பேசும் கலை இப்போதும்கூட பலருக்கும் ஓரளவு தெரிந்து இருக்கிறது .
ஆனால் அவர்களுக்கே கூட அந்த ஆற்றல் இருப்பது தெரியாது . பல சமயங்களிலும் ஏதோ காக்க உட்கார பழம் விழுந்த மாதிரியான ஒரு அவநம்பிக்கையில் உள்ளார்கள்.
இந்த thought level conversation கலையை வளர்த்துக்கொள்ள சில பயிற்சி முறைகள் உள்ளன . வீட்டு பிராணிகள் வளர்போருக்கு இது ஓரளவு இயற்கையாகவே வரும் வாய்ப்பு உள்ளது .
மேலும் எல்லோருக்கும் ஓரளவு பிறரின் எண்ண அலைகளை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது . அதை வளர்த்துக்கொள்ள முதலில் தேவை நம்பிக்கை . அடுத்தது நுண் உணர்வுடன் தனது மனதில் உருவாகும் சகல எண்ண ஓட்டங்களையும் கவனித்து அவற்றின் தன்மைகளை பற்றிய கவனத்தை செலுத்துதல் ஆகும் ,
மேலும் குழந்தைகள் அனேகமாக இந்த ஆற்றல் உள்ளவர்கள்தான் . ஆனால் அவர்களது உலகம் மிகவும் எளிமையாக உள்ளது . அதற்குள் அவர்கள் அழகாக தங்கள் மனதோடு மனம் உறவாடுகிறார்கள் .
எது எப்படி இருந்தாலும் இந்த உலகில் யாராலும் திறமையாக பொய் பேசிவிட முடியாது . ஏனெனில் சகலருக்கும் எல்லோரது எண்ண ஓட்டங்களும் தாமதமாகவேனும் புரிந்து விடுகிறது ',
இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது .
எமது ஆத்மாவுடன் நாம் எவ்வளவு தூரம் அருகில் இருக்கிறோமோ அவ்வளவு தூரம் எமது மனம் நுட்பமாக பிறரின் எண்ண அலைகளை உள்வாங்கி எமது எண்ண அலைகளை பிறரின் மனதிற்கு அனுப்பும் ஆற்றலை பெறுகிறது ,
பொய் பேசாமல் இருந்தாலே இந்த சக்தி ஓரளவு வந்து விடும் . இது பற்றி மேலும் அடுத்தடுத்த கட்டுரைகளில் எழுதுகிறேன் .
No comments:
Post a Comment