Sunday, September 11, 2016

கடவுளும் மருந்தும் விலை உயர்ந்த பிராண்டுகள்....? இந்த இரண்டையும் விட நீங்கள் உயர்ந்தவர் ! நிமிர்ந்து நில்லுங்கள் !


நவீன வாழ்க்கை வட்டம் ஏனோ தெரியவில்லை பயத்தின் அடிப்படையிலேயே பெரிதும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்த பய உணர்வு மனிதர்களின் இயல்பான ஆனந்தத்தை விழுங்கியே விட்டது.
இந்த வாழ்வு ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றல்லவா?

 அடிமனதில் தோன்றிய பயத்தின் காரணமாக மனதளவில் ஒழித்து வாழ்ந்து பழகி விட்டார்கள்.;
எதுவித காணரங்களும் இன்றியே பயந்து பயந்து ஒழிக்க இடம் தேடுகின்றனர்.
பயத்தின் காரணமாக சுயமாக சிந்திக்கும் பழக்கத்தை மனிதர்கள் பெரிதும் இழந்து விட்டார்கள். பயம் சிந்திக்கும் ஆற்றலை  கிள்ளி எறிந்துவிட்டது 
இந்த உலகை நேருக்கு நேர் பார்க்க பயந்து போய் ஒழித்து வாழ கண்டுபிடித்த முதல் பங்கர் குகைதான் சமயங்கள் அல்லது கடவுள்கள் என்பது.

அந்த குகைகள் தங்களது பாதுகாப்பு தொட்டில் என்று கருதுகின்றனர்.

அது தரும் தாலாட்டில் கண்ணை மூடிக்கொண்டு வாழ முயற்சிக்கின்றனர்.  இது சரியான வழி அல்லது பிழையான வழி என்று ஒருவித அபிப்பிராயத்தையும் நான் திணிக்க வரவில்லை. அது என் வேலை அல்ல.


மனதளவில் அந்த நிலக்கீழ் குகை வாழ்க்கையில் இருந்து பழகி விட்டார்கள்.
அதை விட்டு வெளியே வந்து பார்க்க பயந்த சமுதாயமாகி விட்டது.

 கற்பனைக்கு எட்டாத அற்புதங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம்  பற்றிய எந்தவித கருத்தும் இல்லாமல் பெருவாரியான மனிதர்கள்  வெறும் அடியவர்கள் ஆகிவிட்டனர்,
ஒரு போதும் உண்மையை  பார்க்க முடியாத அளவு  எங்கோ ஒரு தூரத்தில் இருக்கிறார்கள் .
மனதில் எந்த விதமான சந்தேகம் தோன்றினாலும் கைவசம் பதில்  வைத்திருக்கும் போலி மருந்துகள் சமய வியாபாரத்தில்  தாராளமாக  உண்டு.