Friday, May 24, 2013

விரும்பாத trespassing? விரும்பாத வீட்டின் திறவுகோல்

Trespassing  என்பது பொதுவாக நாம் மற்றவரின் எல்லையை அனுமதி இன்றி
மீறுவது என்று பொருள்படும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எல்லைகள் இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்வும் அவரது மனதிற்குள்ளும் மனதிற்கு வெளியேயும் இருக்கிறது.
சக மனிதர்களை நாம் துருவி துருவி ஆராய்வது என்பது உண்மையில் ஒரு மோசமான அத்து மீறல் ஆகும்,
ஒருவரின் மன ஓட்டங்களை கூட ஓரளவுக்கு மேல் நாம் ஆராய்வது ஒருவகை trespassing என்று சொல்லலாம்.
இயற்கையில் சகல எண்ணங்களும் செய்திகளும் ஓரளவு வெளிப்படையாகவே இருக்கின்றன என்பது ஒரு பேருண்மையாகும் ,
பிரச்சனை அது அல்ல,
நான் உண்மையில் சொல்ல வரும் விடயம் அதைவிட முக்கியமானது.
எவ்வளவு தூரம் பிறரின் விடயங்களில் ஆர்வம் காட்டுகிறோமோ அவ்வளவு தூரம் அவர்களது வாழ்வை நாம் வாழ முயற்சிக்கிறோம் என்று தான் அர்த்தமாகும் .
உதாரணமாக ஒரு விவசாயியை பற்றியே நாம் எண்ணிக்கொண்டும் ஆராய்ந்து கொண்டும் இருந்தால் நாம் ஓரளவு அந்த விவசாயியின் வாழ்வை ஒரு virtual ஆக வாழ முயற்சிக்கிறோம் என்றுதான் பொருள்.

அந்த விவசாயியின் வாழ்வு சிறந்ததா அல்லவா என்பதல்ல இங்கு பிரச்சனை . எமது விருப்பம் அந்த விவசாயியாக வாழவேண்டும் என்பதா இல்லையா என்பது தான் கவனத்தில் கொள்ளவேண்டும்,
நாம் ஒரு விவசாயி யாக வாழ ஒருபோதும் விரும்பாமலேயே எமது trespassing பழக்கம் காரணமாக அந்த வாழ்வை நோக்கி வேகமாக செல்கிறோம், இறுதியில் எமக்கு விருப்பம் இல்லாத ஒரு வாழ்வை அடைகிறோம்,
மேலும் மிக சரியான ஒரு உதாரணம் சொல்வதாயின், ஒரு விபச்சாரியை அல்லது ஒரு மாபியா தாதாவை பற்றியே துருவி துருவி ஆராய்ந்து கொண்டே இருந்தால் அவர்களின் வாழ்வுக்குள் நாம் மெல்ல மெல்ல trespassing செய்கிறோம் என்றுதான் பொருளாகும்.
அவர்களின் வாழ்வு என்று நான் குறிப்பிடுவது அவர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை முறையாகும் .
எமக்கு சற்றும் ஒத்துவராத வாழ்க்கை முறையில் நாம் எம்மை அறியாமலேயே சில வேளைகளில் crash land ஆவது இந்த விதமாக தான். எமது சகல எண்ணங்களும் இயங்கு சக்தி கொண்டவை என்பது மிகவும் சத்திய வார்த்தைகளாகும் .
எமக்கு தேவை என்று நாம் கருதும் விடயங்களே எமது வாழ்விற்கான அடிப்படை காரணங்கள் ஆகின்றன.
எமது வாழ்வில் நாம் அடைய வேண்டிய விடயங்கள் தவிர்ந்த எமக்கு சற்றும் தேவையே இல்லாத விடயங்களில் எல்லாம் எமது மனதை ஓடவிடுவது புத்திசாலித்தனம் இல்லாத ஒரு trespassing ஆகும்  .
 பொதுவாகவே நெகடிவ் சம்பவங்கள்தான் நமது மனதை பெருதும் கவர்கின்றன இது மீடியாக்களினால் ஏற்பட்ட விளைவோ தெரியவில்லை .
இந்த negative செய்திகளின் மீது எமக்கு ஏற்பட்டுள்ள ஈடுபாடு பிறரின் negative செயல்களில் மீது எமது கவனத்தை பெரும்பாலும் திருப்பி விட்டது .
அந்த விதமான எமக்கு எள்ளளவும் விருப்பமே இல்லாத ஒரு வாழ்வை நாம் நாமாகத்தான் தேடி கொள்கிறோம் .
நமது மனம் ஒரு Powerful Creative Engine ஆகும் , அது நீங்கள் விரும்பும் இடத்திற்கு உங்களை இட்டு செல்லும், உங்கள் மனம் போகும் இடமெல்லாம் நீங்கள் விரும்பும் இடங்களே !.மனம் நல்லவற்றை நோக்கி செல்லட்டும் . 

No comments: