Monday, October 6, 2014

ஊரில் ஒரு முகம் ! வெளிநாட்டில் வேறொரு முகம் ! ஊருக்கு வேறு ஒரு உபதேசம் வேண்டாம் !

அண்மையில்  பாடகர்  யேசுதாஸ்  இந்திய பெண்கள்  கலாச்சாரத்தை பேணும் முகமாக ஜீன்ஸ் அணியக்கூடாது . ஆண்களின் மனம் கிளர்ச்சி அடையும் வண்ணம் பெண்கள் தங்கள் உடம்பை காட்டாது கூடுமானவரை மறைக்க வேண்டும் என்று தனது  கருத்துக்களை கூறியிருந்தார். இவரோ  வருஷத்தில் பாதி நாட்கள்   அமெரிக்காவில்  ப்ளோரிடா மாநிலத்தில் நன்றாக காலூன்றி இருப்பவர். ஊருக்கு வருவது  பணம் சம்பாதிக்கவும் மற்றும் ஒரு ஜாலி ட்ரிப் ஆகவும்தான் ,
தனது  அமெரிக்க  வாழ்க்கை முறை  இந்திய மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று இவர் இப்படி  கலாசார பாரம்பரிய வேஷம் போடுகிறார். ஏனென்றால் இவரது  வருமானம் புகழ் எல்லாம் சாஸ்திரீய சங்கீதத்தில் தங்கி இருக்கிறது,  பலர் இவர் மாமிசம் உண்ணாத சுத்த  ஆசார சீலர் என்றுவேற நம்புகிறார்கள் .( சிக்கென் சாப்பிடுவதை நானே கண்டேன் )அதுவே இவருக்கு வியாபாரம்.
நான் சொல்ல வந்த விடயம் யேசுதாஸ் பற்றியது அல்ல . ஆனால் அது சிறந்த ஒரு உதாரணம் .
 நம்மவர் பலரும் வெளிநாடுகளில்  முழுக்க அல்லது பாதி பாதி அளவும் மேலை நாட்டு கலாசார விழுமியங்களின் நல்ல தன்மைகளை புரிந்து வாழுகிறார்கள்.
அவர்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இடையிடையே வருகிறது.
தங்கள்  சுதந்திர மேல்நாட்டு வாழ்க்கை முறை எங்கே ஊரில் உள்ள உறவினருக்கு தெரிந்து விடுமோ என்று ஏனோ பயப்படுகிறார்கள்.