
இரசாயனம் பௌதீகம் விஞ்ஞானம் போன்று ஆத்மீகத்தையும் ஒரு தனியான
பாடப்புத்தகம் போன்று கருதுவது மிகவும் தவறான கோட்பாடு என்றெண்ணுகிறேன்,
செய்யும் தொழில், கற்கும் கல்வி, விளையாடும் விளையாட்டு மற்றும் அன்றாடம் நாம் வாழும் வாழ்க்கை போன்ற எல்லாவற்றிலும் கலந்து எதிலும் பிரிக்கவே முடியாமல் இருப்பது தான் ஆத்மீகம் ,
ஆனால் நாம் என்ன செய்கிறோம் ?
ஆத்மீகத்திற்கு அல்லது கடவுளுக்கு என்று நேரமும் இடமும் ஒதுக்கி வைத்துள்ளோம் . இது எமக்கு மிகவும் வசதியான ஒரு ஏற்பாடாக பழகிவிட்டோம் ,
உண்மையில் இந்த ஆத்மீகம் அல்லது கடவுள் என்ற சொற்பதங்கள் எல்லாமே ஒரு குழப்பங்கள் நிறைந்த bundle of ideas ஆக இருக்கின்றன , அவரவர்களுக்கு அந்த அந்த நேரங்களில் தோன்றும் கருத்துக்கள் எல்லாவற்றையுமே ஒரு கூடைக்குள் போட்டு தற்காலிக சுகம் காணும் மார்க்கமாகவே இருக்கின்றன,
உண்மையில் இந்த ஆத்மீகம் அல்லது கடவுள் என்ற பதங்கள் மிகவும் serious matters ஆனால் நாமோ இதை சற்று சீரியசாக அணுகுவதில்லை , எமக்கு தேவை ஒரு தற்காலிக அபினி அவ்வளவுதான் ,
யாரை கேட்டாலும் கடவுளை அல்லது ஆத்மீகத்தை தேடுவதாக ஒப்பு கொள்வார்கள் ,
இருக்கும் ஒன்றை ஏன் தேடவேண்டும் ?
இங்கேதான் லாஜிக் இடிக்கிறது .
நாம் யாராவது எமது சருமத்தை தேடுகிறோமா ? அல்லது எமது மூச்சு காற்றை தேடுகிறோமா?
ஆனால் வைரத்தை தேடுவோம் பணத்தை தேடுவோம் ,
எது எம்மிடம் இல்லை அல்லது போதிய அளவு இல்லையோ அவற்றை தான் தேடுவோம்,
கடவுள் இல்லை என்று மிக தீர்க்கமாக முடிவு எடுத்துக்கொண்ட காரணத்தால்தான் அதை மிக தீவிர மாக தேடுகிறோம் என்பது தான் லாஜிக் ,
இருப்பதை யாராவது தேடுவார்களா என்ன ?
அப்படி இருப்பதாயின் எப்படி அதன் இருப்பை அறிவது?
விடயம் மிகவும் எளிது ,
கடவுள் அல்லது ஆத்மீகம் என்று நம்பும் மேட்டர் உண்மையில் எது என்று அடிப்படை தெளிவு பெற வேண்டி இருக்கிறது .
எமது ஒவ்வொரு அசைவும் நாம் எப்படி இந்த வாழ்வை எதிர் கொள்கிறோம் என்று காட்டும் ஒரு பிரகடனமாகும் .
ஆத்மீகம் அல்லது தெய்வீகம் என்பது உண்மையில் நாம் எப்படி இந்த பிரபஞ்ச மேடையில் எமது வாழ்வென்னும் நாடகத்தை நடிக்கின்றோம் என்பதில் தான் தங்கி உள்ளது ,
இந்த பிரபஞ்சம் சில இயற்கை விதிகளின்படி தான் இயங்குகிறது , நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்த இயற்கை விதி என்பதுதான் இந்த வாழ்வின் ஆதார விதி ,
எமது வாழ்வின் வெற்றியும் தோல்வியும் இன்பமும் துன்பமும் எல்லாமே இந்த இயற்கை விதியின் படிதான் நடைபெறுகிறது .
Quantum Mechanism அல்லது Quantum Physics என்று நவீன விஞ்ஞான உலகம் ஆய்வு செய்து பல பேருண்மைகளை பிரகடனப்படுத்தி உள்ளது அவற்றை தற்போது ஓரளவாவது உலகம் ஏற்று கொண்டுள்ளது
இது எப்படி இயங்குகிறது என்பதை பற்றி பின்பு ஒரு கட்டுரையில் விரிவாக ஆராய்வோம் ,
பொதுவாக எமது மனதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாமே ஒரு இயங்கு சக்தியாகும்.
அந்த இயங்கு சக்தியின் அளவுக்கு ஏற்ப அவை நடைமுறை சாத்தியமான காரியமாகவும் சம்பவிக்கும் ,
நாம் கடவுளை நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் அந்த இயங்கு சக்தி என்பது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதை நாம் நம்பியே ஆகவேண்டும்,
புதிய விஞ்ஞானம் அதை தான் சொல்கிறது , சகல விதமான பௌதீக அல்லது இரசாயன மாற்றங்களுக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு எண்ணம் அல்லது செய்தி அல்லது ஒரு தகவல் போன்ற ஏதோ ஒரு ஐடியா தான் பின்பு material reality யாக உருப்பெற்றிருக்கிறது என்று கண்டறிந்துள்ளார்கள் ,
இதைத்தான் Information என்றால் In Formation என்று திரு தீபக் சோப்ரா அவர்கள் குறிப்பிட்டுள்ளார் ,
எமது மனதை எந்தவித எண்ணங்கள் ஆட்டி படைக்கின்றனவோ அதேமாதிரியான சம்பவங்களே எம்மை நோக்கி வருவதை நாம் அனேகமாக காணலாம்.
இன்னும் சரியாக சொல்லப்போனால் எண்ணங்கள் எல்லாம் ஒரு பௌதீக விடயமே ? அவை இலக்கணப்படி ஒரு உளவியல் சார்ந்த விடயமாக இருந்தாலும் உண்மையில் அவை மிகவும் நெருக்கமாக இருப்பது பௌதிக இரசானயன பாடங்களுடன்தான்,
இது மிகவும் புரிந்து கொள்ள கடினமான உண்மையாகும், நாம் பல ஆண்டுகளாக நம்பி இருக்கும் கோட்பாடுகளில் இருந்து விடுதலை பெறுவது சுலபமான விடயம் அல்ல ,
சதா ஒரு பாதக செயலை தனது தொழிலாக கொண்டிருப்பவர் மிகவும் பக்திமான் என்று வைத்துகொள்வோம் , அவர் அனேகமாக தனது பாதகமான தொழிலை பற்றி தவறாக கருத மாட்டார்,
அவரது மனசாட்சி தொந்தரவு கொடுக்கும் பொழுதுகளில் இருக்கவே இருக்கிறது கடவுள் அல்லது ஆத்மீகம் போன்ற சமாச்சாரங்கள்.
அவை அவரது மனசாட்சியை தூங்க வைக்க அவருக்கு பெரிய உதவியை செய்யும்.
அந்த நேரங்களில் அவரது வழிபாட்டு focal point இன் முன்னால் நின்று சற்று தனது மனசாட்சியை தாலாட்டி விட்டு வழமை போல தனது பாதக தொழிலை செய்து கொண்டிருப்பார்,
அவருக்கு தான் செய்யும் பாதக தொழிலின் இயற்கை விதி புரிவதில்லை அவருக்கு அதை புரிய விடாமல் அவரது சமயம் அவருக்கு ஒரு இருட்டு திரையை விரித்து வைத்துள்ளது,
இயற்கை விதியை (Natural Law) மனிதர் அறியவிடாமல் தடுப்பது எது என்பதை நீங்களாகவே கண்டு பிடித்து கொள்ளுங்கள் .
எமது மனதில் தோன்றும் ஒவ்வொரு சிறு சலனமும் நமது பிரபஞ்ச பயணத்தில் எம்மை முன்னோக்கி தள்ளி கொண்டே இருக்கிறது ,
ஓடிக்கொண்டு இருக்கும் நாம் நாம் விரும்பிய சுகமான ஆனந்தமான பாதையில் தான் செல்கிறோமா?
அல்லது சுகமான ஆனந்தமான பாதையை விரும்பி கொண்டு ஆனால் அதற்கு நேர் எதிராக மிகவும் தவறான பாதையை எம்மை அறியாமலேயே தெரிவு செய்து கொண்டிருக்கிறோமா?
அநேகமானோருக்கு நடப்பது இதுதான் .
எல்லோரும் நல்லதையே விரும்புகின்றனர் .
ஆனால் அந்த நல்லதை தருவது கடவுள் அல்லது சமயம் என்ற Separate Matter என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் ,
அது ஒரு செபரேட் மாட்டரே அல்ல .உங்களின் ஒவ்வொரு சிந்தனையிலும் செயலிலும் தெரிவது அந்த இயங்கு சக்திதான் ,
உங்கள் வீட்டு மலசல கூடத்தை சுத்தம் செய்வதை விட சமயச்சடங்கு ஒன்றும் உங்களுக்கு நல்லதை செய்து விடாது,
உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்து மாறு நீங்கள் நடந்தால் அவர்களின் அந்த அன்பு உங்களை ஆனந்தமாக வாழ வைக்கும் ,
நீங்கள் சந்திக்கும் மனிதர்களோடு ஏனோ தானோ வென்று நடந்து விட்டு வழக்கம்போல உங்கள் ஆஸ்தான focal points களின் முன்னால் இருந்துகொண்டு இறைஞ்சுவது நீங்கள் விரும்பும் பயனை தராது,
அது ஒரு உளவியல் திரபி போன்று தற்காலிகமாக பயன் படலாம் , அவ்வளவுதான் அதன் பயன் பாடு.
No comments:
Post a Comment