Thursday, April 7, 2011

அன்புக்கு நேர் எதிரான உணர்வு பயம்தான். இரண்டும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கும் உணர்வுகளாகும்.

ஓஷோவைப்பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது என்றுதான் நான் இவ்வளவு காலமும் எண்ணி இருந்தேன், அது தவறு என்று தற்போது புரிகிறது.
கடந்த பல நூற்றாண்டுகளில் ஓஷோவை போன்ற ஒரு மகான் தோன்றியதில்லை.
மகான்கள் பலரும் பாதி உண்மைகளை ஒலிபெரிக்கினார்களே தவிர உண்மையை கண்டவர் குறைவு.
தானே சரியாக விளங்காத விடயங்களை பிறருக்கு உபதேசம் செய்வதில் பற்றுக்கொண்டவர்களாகவே வாழ்ந்து மறைந்து அல்லது சமாதி அடைந்து விட்டார்கள்.
அவர்கள் சொற்பொழிவு ஆற்றிய விபரக்குவியல்களை கிளிப்பிள்ளை போல ஒப்பித்தே புதிது புதிதாக பல ஜாம்பவான்கள் வாழ்ந்து மறைந்தும் விட்டார்கள்.
மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்களா அல்லது எதையாவது உருப்படியாக தேடி கண்டு கொண்டார்களா ?
ஆத்மா ஞானம் கடவுள் குண்டலினி யோகம் மோட்சம் போன்ற ஏதாவது புரியாத கேள்விகளுக்கு விடை கண்டுகொண்டார்களா?
சுற்றி வளைப்பானேன் அநேகமாக  தெரியாது/ இல்லை என்பதுதான் நேர்மையான பதிலாக இருக்கும்,
சமயவாதிகள் மக்களை பயம் காட்டியே மாக்களாக்கி  விட்டார்கள். சுயமாக சிந்திக்கும் திறமையை சமய நம்பிக்கை உள்ளவர்கள் பெரிதும் இழந்து விட்டார்கள் போலவே தோன்றுகிறது.
இல்லாவிடில் கோயில்களும்  அர்ச்சகர்கள் முன் எப்பொழுதும் இல்லாத அளவு  சமுகத்தில் முக்கிய பங்காளிகள் போன்று தோன்ற முடியமா? கோயில்களும் அர்ச்சகர்களும் பெருகி விட்ட அளவு சமுக விரோதிகளும் பயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும்  தோன்றியது எதோ தற்செயலாக நடந்த செயல் என்று கருத முடியமா?
பயம் காட்டி வளர்க்கப்பட்ட மக்கள் கூட்டத்தில் இருந்து அன்புள்ள மனித சமூகத்தையா எதிர்பார்க்க முடியும்? சாமியை கண்டு பயம் ஆசாமியை கண்டும் பயம்.
அன்புக்கு நேர் எதிரான உணர்வு பயம்தான். இரண்டும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கும் உணர்வுகளாகும்.
பயமும் அன்பும் ஒரே இடத்தில் வரவே முடியாது.அப்படி இருக்க முடியும் என்று யாரவது சொல்வார்களேயானால் அவர்களைப்போல பொய்யர்கள் உலகத்திலேயே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இதில் மிகப்பெரிய மோசடி என்னவென்றால் பயபக்தி என்ற ஒரு சொல்லை நாம் கண்டு பிடித்து இல்லாத அர்த்தங்களை எல்லாம் கற்பித்து வாழ்ந்து விட்டோம், 
நாம் எங்கே வாழ்ந்தோம்? வாழ்ந்ததாக பாவனை அல்லவா காட்டுகிறோம்?
 நமது சமயங்களில் எல்லாம் எக்கச்சக்கமான ரூல்ஸ் உருவாக்கி வைத்துள்ளோம்
.இந்த வகை ரூல்ஸ் எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் மக்களை சிந்திக்க விடாமல் வெறும் கண்மூடி பின்பற்றுபவர்களாக வைத்திருப்பதற்கே உருவாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடியும்.
இதில் பலருக்கும் மிக நிச்சயமான தற்காலிக  லாபங்கள் இருப்பதை காணமுடியும்.
ஓஷோவின் கருத்துக்கள் மக்களுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் காலம் இது.
உண்மையை மிச்சம் மீதி வைக்காமல் பட்டவர்த்தனமாக உரைத்தவர் ஓஷோவும்  U.G.கிருஷ்ணமுர்த்தியும் தான்.
J.கிருஷ்ணமூர்த்தியும் உண்மை காட்டியவர்தான் ஆனாலும் அவர் விளங்கப்படுத்தும் முறை சற்று கடினமாக உள்ளது.
மேலும் ஆண் பெண் உறவு போன்ற விடயங்களில் அவர் சற்று நழுவல் போக்கை கையாண்டு விட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.
பாமரனும் புரிந்து கொள்ளகூடிய எளிய மொழியில் மிகப்பெரும் ஆன்மிக உண்மைகளை பரிமாறுவதில் ஓஷோவை மிஞ்ச யாரும் இல்லை.
ரமண மகரிஷி போன்றவர்கள் மௌனப்பாதையையே பெருதும் தேர்ந்து எடுத்தார்கள். அது ஒரு உன்னத அனுபவம்.
ஓஷோவின் பங்களிப்போ உலகின் பட்டி தொட்டி எல்லாம் உள்ள குப்பனுக்கும் சுப்பனுக்கும்கூட விளங்க வேண்டும் என்ற தணியாத தாகத்தில் வழங்க்கப்பட்டதாகும்.