Sunday, May 12, 2013

வார்த்தைகளுக்கு வெளியே ஒரு அதிசயம் Words are not a Perfect Tools

வார்த்தைகளிலிருந்து விடுதலை என்ற  பதத்தை பற்றி கேள்வி 
பட்டிருக்கிறீர்களா ?
மிக மிக முக்கியமான  சமாச்சாரமே இதுதான் ,
எமக்கு  இன்னும் சரியாக புரியாத பல விஷயங்களுக்கு அதன்  அர்த்தங்களை குறிக்கும் விதமாக நாம் குறிக்கும் சொல் பிரயோகங்கள் பெரும்பாலும் அர்த்தமற்றவையே .
நாமே கற்பித்து கொண்ட பல  வார்த்தைகள்  அனேகமாக காலாவதியான அர்த்தங்களை சுமந்து கொண்டிருகின்றன
இதை பற்றி இனி நீங்கள் சற்று சீரியசாக சிந்திக்க வேண்டும் ,
ஒரு பொருளை விளங்க ஒரு லேபல் போன்று பயன்பட்ட சொற்கள் பின்பு
காலப்போக்கில் அந்த லேபெல்களே முழு முதற் பொருள் போன்ற தோற்றத்தை நாம் கற்பிதம் செய்து கொள்கிறோம்
ஒரு அர்த்தத்தை கொண்டிருக்கும் வார்த்தையானது வேறு ஒருவருக்கு வேறு ஒரு அர்த்தத்தை வழங்கி கொண்டிருப்பதை அறிவீர்களா ?
எதுவிதத்திலும் வார்த்தைகள் என்பது ஒரு Perfect கருவியே அல்ல ,
கடவுள் என்ற விவகாரத்தில் மட்டுமல்ல பொதுவிலேயே வார்த்தைகள் ஒரு அளவுக்கு உட்பட்ட தற்காலிக உபயோகத்தை மட்டுமே கொண்டுள்ளது ,
வாழ்வின் உன்னதமான பல தருணங்களில் நாம் வார்த்தைகள் அற்று மௌனமாகி விடுவதை நாம் கண்டிருக்கிறோம் அல்லவா ?


எமது பயணத்தில் சில அளவு தூரத்தை மட்டுமே கடக்க இந்த வார்த்தைகள் என்ற கருவி உதவும்.
இந்த கருவிகளிலேயே  இறுதி வரை தொங்கி கொண்டு இருந்தோமானால்   வாழ்வு முழுதும் தொங்கி கொண்டிருப்போம் .
ஆனால் சேரவேண்டிய இடத்திற்கு போய் சேர மாட்டோம் .
 வார்த்தைகள் எல்லாமே தற்காலிகமான வாகனங்கள் போன்றவையே. அல்லாது அவை நாம் போய் சேர வேண்டிய இடங்கள் அல்ல ,

 மனித சமுதாயத்தை மிகவும் பின் தள்ளிய ஒரு கோட்பாடு இந்த வார்த்தைகளில் தொங்கி கொண்டு இருத்தல் என்பதுதான் ,
இதுவரை தோன்றிய அநேகமான சமய பெரியவர்கள்  பலரும் இந்த முட்டாள்தனத்தை மேலும் மேலும் செய்து மனிதர்களை மிகவும் பின்னோக்கி தள்ளிவிட்டார்கள் என்று தான் எனக்கு படுகிறது,
 வெகு சிலர்தான் இந்த செம்மறியாட்டு தனத்தில் இருந்து மாறுபட்டு இருக்கிறார்கள் , தற்போது எனது அறிவுக்கு எட்டிய வரையில் யாருமே இதற்கு விதிவிலக்கு அல்ல,

ஏதோ ஒன்றை திருப்பி திருப்பி சொல்லுதல்,
 அல்லது ஏதோ ஒரு அர்த்தம் தொனிக்கும் வார்த்தையை எல்லாவற்றிலும் உயர்ந்தது  என்று நம்புதல்.
அல்லது அதுதான் நாம் அடைய வேண்டிய பொருள் அல்லது அதுவே எமக்கு நிச்சயமான ஞானத்தை அளிக்கும் என்பது போன்ற  நம்பிக்கைகள் ஒரு  சாகிலேட்டுக்கள்  போன்று தற்காலிக திருப்தியை அளிக்க கூடும்

சில வேளைகளில் அது ஒரு  திரபி போன்று எமக்கு ஆசு வாசம் அளிக்க கூடும்
இவை எல்லாம் நாம் ஒரு Comfort Zone க்குள் இருக்க பெருதும் உதவிசெய்ய கூடும்.
ஆனால் ஒரு போதும் உண்மையை அறிய உதவாது,
இந்த வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்ட comfort zone எனப்படும் தாலாட்டு தொட்டிலில் இருந்து வெளியே வருவதற்கு நமக்கு மிகவும் தன்னம்பிக்கை வேண்டும்! துணிச்சல் வேண்டும் , உண்மையை அறிய வேண்டும் என்ற ஆவலும் தேடலும் வேண்டும் ,
உண்மையை பெரிதாக அறிந்து என்னதான் ஆகபோகிறது என்று எண்ணினாலும் தவறே இல்லை , இந்த பிரபஞ்சம் எல்லாவித காரண காரியங்களையும் தன்னகத்தே கொண்டே உள்ளது,
வார்த்தைகளின் பலவீனங்களை பற்றி அறிந்து கொள்வதினால் என்னதான் பயன்?
 நான் மீண்டும் மீண்டும் இந்த வார்த்தைகளை விட்டு வெளியே வருதல் என்பது  பற்றி ஏன் வலியுறுத்துகிறேன்?
ஏனெனில் அது  அவ்வளவு சுலபமான காரியம் அன்று ,
 எண்ணங்கள் கோட்பாடுகள் நம்பிக்கைகள் என்பன எல்லாம் வார்த்தைகள் என்ற அளவு கோல் கொண்டு தான் கட்டப்பட்டுள்ளன ,
இந்த இடத்தில் நான் சற்று தயக்கத்துடனே மீதி கருத்துக்களை கூற வேண்டி இருக்கிறது,
இதுவரையில் எந்த வார்த்தைகள் கொண்டு உங்கள் சிந்தனை மாளிகையை கட்டி இருக்கிறீர்களோ அந்த கட்டிடத்தில் இருந்து உங்களை வெளியே வரச்சொன்னால் அது உங்களால் முடியமா ?
மிகவும் இக்கட்டான ஒரு காரியம் ,
இவ்வளவு காலமும் மிக சுகமாக எந்த விதமான களைப்பும் இன்றி அப்படியே பின்பற்றி கொண்டிருக்கும் வார்த்தைகள் என்ற சிறைக்குள் சுகப்பட்ட உங்கள் மனது அதை விட்டு வெளியே வர மிகவும் தயங்கும் அல்லது பயப்படும் .
உண்மையில் உங்கள் மனம் உண்மையை தரிசிக்க rebel பண்ணும்,
உண்மை என்று இதுவரை காலமும் பாவனை பண்ணிய நாடகத்தில் மயங்கி இருந்துவிட்டு திடீரென போதை தெளிவது இலகு அல்ல ,
என்னதான் நாம் வார்த்தைகளை போட்டு விளையாடினாலும் எந்த வார்த்தைகளாலும் உண்மையை அறிய முடியாது ,
வார்ததைகள் எல்லாம் எவராலோ எப்போவோ எதோ எந்த எந்த அர்த்தங்களையோ  சுமந்து பழக்கத்தில் வந்து விட்டது . அந்த வார்த்தைகளின் பெற்றோர் யார் அதற்கு ஏன் அந்த பெயர் வந்தது போன்ற கேள்விகள் பதில்கள் எல்லாமே காணாமல் போய்விட்டது
  அவ்வார்த்தைகளின் அர்த்தங்கள் திருவிழாவில் காணாமல் போய் விட்ட குழந்தை போன்று ஆகிவிட்டது ,
கடவுளை பற்றியோ  இந்த பிரபஞ்சம் பற்றியோ  அல்லது உங்களின்  ஆதி  அந்தம் போன்ற எந்த விதமான கேள்விகளுக்கும் நீங்கள் சுயமாக பதிலை கண்டு பிடிக்கும் முன்பாகவே யாரோ கற்பிதம் செய்து வைத்த வார்த்தைகள் பதில்களாக உங்கள் முன் வந்து நிற்கும் , அவை உங்கள் தேடலை அப்படியே நிறுத்திவிடும் , யாரோ உருவாக்கிய வெறும் வார்த்தைகள் உங்கள் தலைக்குள் நீங்கள் நம்பும் கோட்பாடுகளாக வந்ததுவிட்டது ,

அவற்றை விட்டு வெளியே வந்தால் காணும் இந்த உலகம் உங்களுக்கு புதிதாக தெரியும் ,
எல்லையில்லாத இந்த பிரபஞ்சம் எத்தனையோ அற்புதங்களை ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் காட்டி கொண்டே இருக்கிறது ,
என்ன செய்வது வார்த்தை சிறைகளில் அகப்பட்டு எதற்கும் அவ நம்பிக்கையுடனேயே வாழ்ந்து பழகி விட்டீர்கள் ,
பிரபஞ்சம் அல்லது கடவுள் அல்லது ஆத்மா என்று எதை எடுத்து கொண்டாலும் ஏற்கனவே நமக்கு பரிச்சயமான ஒரு வார்த்தையின் அர்த்தங்களையே அடையாள படுத்தி அவற்றை அறிய முயற்சிக்கிறோம் ,
அந்த வார்த்தைகள் உண்மையில் உங்களை தூங்க பண்ணும் சோம்பல் தொட்டில்கள்தான் ( Comfort Zone)
எந்த வார்த்தையும் உண்மை இல்லை என்றால் எதுதான் உண்மை ?
ஒவ்வொரு வார்த்தையாக தூக்கி எறிந்து கொண்டே வாருங்கள் இறுதியில் எது மிஞ்சுகிறது என்று பாருங்கள் ,
நிச்சயமாக உங்களுக்கு அதிசயம் காத்திருக்கிறது

No comments: