Friday, February 14, 2014

நாம் பிரபஞ்சத்தோடு இயங்கும் விதத்தில் எங்கோ ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது !


இப்பிரபஞ்சம் உங்களுக்கு அற்புதமான
வாழ்க்கையை அளித்துள்ளது.

நமது வாழ்வு ஆனந்தம் உள்ளதாக அமைய நாம்  எப்படி இந்த பிரபஞ்சத்தை அணுக வேண்டும் ?

வாழ்வை செதுக்கும் உளி போன்ற கருவி எம்மிடம்தான் இருக்கிறது .

பிரபஞ்சம் எமக்களித்த அந்த கருவிகளை எப்படி உபயோகிப்பது அல்லது பயன் படுத்துவது என்பது எமக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும் .

இல்லாவிடில் அந்த கருவியால்  எந்தவிதமான பயன்பாடும் இல்லாது போய்விடும் .
அது மட்டுமல்ல மிகவும் வேண்டத்தகாத விளைவுகளும்கூட ஏற்பட்டுவிடும்.

எமக்கு வாய்க்கப்பெற்ற கருவிகள் பல.

எமது உடல் மற்றும் ஐம்புலன்கள் போன்றவை எமது தலையாய கருவிகள் ஆகும் .

இது போன்ற வெளி கருவிகளை விட மனம் அறிவு உணர்சிகள் போன்றவை மிகவும் நுட்பமான கருவிகளாகும் .


நமது மனம் அறிவு அல்லது உணர்சிகள் போன்றவை எவ்வளவு பெறுமதியான சக்தி மிகுந்த உபகரணங்கள் என்பது எமக்கு ஓரளவு தெரிந்தே இருக்கிறது என்று நம்புவோமாக.

எமது அதி உன்னதமான முக்கியமான கருவிகளான மனம் உணர்சிகள் அல்லது உணர்வுகள் எல்லாம் எவ்வளவு தூரம் எமது வாழ்வை தீர்மானிக்கின்றன என்பது பற்றி எமக்கு தெளிவான புரிதல் உண்டா என்ற கேள்வியை கேட்க வேண்டிய கட்டாயம் உள்ளது,

ஏனெனில் , நாம் விரும்பியவாறு எமது வாழ்வு அமைந்துள்ளதா ?

எமக்கு விருப்பமான விடயங்கள் அல்லது பொருட்கள் எல்லாம் எமக்கு கிடைத்துள்ளதா ?

எமது அதி அற்புதமான கருவிகள் எமக்கு விருப்பமான வாழ்வை அல்லது பொருட்களை தந்திருகிறதா ?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆம் என்று மிகவும் மகிழ்ச்சியாக எம்மால் பதில் கூற முடிந்தால் . எமது கருவிகளை நாம் சரியான முறையில் பயன்படுத்தி  வாழ்கிறோம் என்று அர்த்தமாகும் .

இல்லை எமக்கு திருப்தி இல்லை என்ற நிலைக்கு நாம் வந்தோமானால் எங்கோ எதோ  ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது என்றுதான் அர்த்தமாகும்.

அது என்ன தவறாக இருக்க முடியும் ?