
மனிதகுலத்தை எப்படியாவது இருட்டில் வைத்திருக்க விரும்பும் இந்த வியாபாரிகளை பற்றி எல்லாம் எழுதி எழுதி எனக்கு சற்று சலிப்பு ஏற்பட்டுவிட்டது .
எவ்வளவுதான் எழுதினாலும் பேசினாலும் நித்திரையை விட்டு எழுந்திருக்க மாட்டேன் என்று சிலர் பிடிவாதமாக இருப்பது மிகபெரும் அறியாமைதான்.
அவர்களை விட்டுவிடுவோம். இந்த பகுத்தறிவாளர்கள் என்று பெருதும் கருதப்படுபவர்கள் தங்களை அறியாமலேயே வேறு ஒரு இருட்டில் இருப்பதாகத்தான் எனெக்கு எண்ணத்தோன்றுகிறது .
குறிப்பாக தமிழ்நாட்டில் அல்லது இந்திய துணை கண்டத்தில் இருக்கும் பகுத்தறிவாளர்களின் கருத்துக்கள் பலவும் மிகவும் காலம் கடந்த கோட்பாடுகளாகும்.

எது மூட நம்பிக்கை என்று விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்வதற்கு ஜாதியும் சமயமும் பெரும் தடையாக இருக்கிறது .
மேல்ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு சமயத்தை ஒரு சாதனமாக பார்பனர்கள் பயன்படுத்தும் காரணத்தால் சமய கோட்பாடுகள் எப்போதும் உண்மையை மனிதன் கண்டறிவதற்கு தடையாகவே இருந்திருக்கின்றன.
ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சில விதிவிலக்குள் இருந்திருக்கலாம்.
ஆனாலும் ஒட்டு மொத்தமாக பார்பனீயம் மூட நம்பிக்கைகளில் தான் உயிர்வாழ்கிறது, பார்பனர்களை நான் குறிப்பிடவில்லை பார்பனீயத்தை கடைபிடிக்கும் எல்லாரையும் சேர்த்தே சொல்லுகிறேன்.
பிரபல இசையமைபாளர் இளையராஜா தாழ்த்தப்பட்ட ஜாதியாக இருந்தாலும் பார்பனீயத்தின் மிகபெரும் ஆதரவாளராக இருக்கிறார்.
இன்னொரு இசையமைபாளரான A R ரஹ்மான் பிறப்பால் முதலியாராக இருந்தாலும் மதம் மாறி ஒரு சராசரி பார்பனர் எப்படி பகுத்தறிவுக்கு எதிரியாக இருப்பாரோ அதே போன்றுதான் மூட நம்பிக்கையில் உள்ளார்.
இந்த நம்பிக்கைவாதிகள் எல்லோரும் சிந்திப்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல.
இவர்களின் நம்பிக்கை வியாதியை நம்பி வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கள் கடைகளை விரித்து செழித்து வளர்ந்துள்ளார்கள்.
நமது பாரம்பரிய பகுத்தறிவுவாதிகள் பலரும் நம்பிக்கைவாதிகளின் மேல் கொண்ட வெறுப்பின் காரணமாகவோ என்னவோ பல புதிய விஞ்ஞான வளர்ச்சியை பற்றி பெரிதும் அறிந்திராமல் அவற்றை பெரிதும் மூட நம்பிக்கை என்று புறந்தள்ளி வருகிறார்கள்.
பகுத்தறிவாளர்கள் மீதும் நாம் பெரிதாக குற்றம் சொல்லிவிடமுடியாது.
ஏனெனில் எந்த ஒரு விஞ்ஞான உண்மைகள் கண்டு பிடிக்கப்பட்டாலும் முதலில் உரிமை கோருபவர்கள் இந்த பார்ப்பனீயர்களும் இதர சமய நம்பிக்கையாளர்களும்தான் .
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த விஞ்ஞான உண்மை எமது ஏடுகளில் உள்ளன அல்லது கல்வாரிகளில் உள்ளன ஓட்டஹங்களில் உள்ளன என்பது போன்ற பிரசாரங்களை முன்னெடுத்து விடுகிறார்கள்.
அவை சரியானவையாகவும் இருக்கலாம் !
அவற்றில் சில உண்மைகள் கூட இருக்கலாம் !
ஆனால் விடயம் அதுவல்ல ,
அவர்கள் மேலும் மேலும் புதிய புதிய ஆதாரங்களை மேல்கோள் காட்டி மக்களை சிந்திக்க விடாமல்,
பார்த்தீர்களா நமது எழுத்துக்கள் நம்பிக்கைகள் எவ்வளவு அற்புதமானவை அலல்து புனிதமானவை என்று நிறுவி,
மக்களை மீண்டும் மீண்டும் தங்களது சுரண்டல் சாம்ராஜ்யதிலேயே நிரந்தர பிரஜைகளாக வைத்திருக்க முயற்சிக்கிறார்கள் .
இதன் காரணமாகவே பகுத்தறிவு வாதிகள் விஞ்ஞான ரீதியாக புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட சில புரட்சிகரமான கோட்பாடுகளை புறந்தள்ளுகிரார்கள் .
இந்த பகுத்தறிவு வாதிகள் ஜோதிஷத்தை முற்று முழுதாக மூட நம்பிக்கை என்கிறார்கள்.
ஜோதிஷம் ஒரு விஞ்ஞானம் .
அது தவறான மனிதர்களின் கைகளில் சிக்கி வெறும் பித்தலாட்டமாக உருவெடுத்துள்ளது.
பெரும்பாலும் பாப்பனீயர்களும் இதர சமயவாதிகளுமே ஜோதிஷதை வைத்து பிழைப்பு நடத்துவதால்,
பகுத்தறிவாளர்கள் ஜோதிஷதை ஒரு விஞ்ஞானமாக இன்னும் ஏற்றுகொள்ளவில்லை .
முதலில் இந்த ஜோதிஷத்தை ஜோதிடர்களிடம் இருந்து மீட்கவேண்டும்.
ஜோதிஷம் ஒரு விஞ்ஞானம் .இதை அடியேன் முற்று முழுதாக
அனுபவ வாயிலாக கண்டுள்ளேன்,
ஜோதிஷம் பகுத்தறிவுக்கு உட்பட்ட ஒரு Skill ஆகும் .
அடுத்த முக்கியமான விடயம் மனம் சம்பந்தப்பட்டதாகும் .
பழைய விஞ்ஞான கோட்பாடுகளில் மனதிற்கு எதுவித பௌதீக அல்லது இரசாயன தாக்கங்களும் கிடையாது .
ஆனால் தற்போது எமது எண்ணங்கள் ஒவ்வொன்றும் சக்தி அலைகள் என்று நம்ப படுகிறது.
அது இந்த பிரபஞ்சத்தை சுற்றி வருகிறது.
அதன் சுழற்சி மற்றும் தாக்கம் போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் வெறும் சமய வாதிகளின் சொத்துக்கள் அல்ல .
ஆனால் சமயவாதிகள் அந்த உண்மைகளுக்கு சமஸ்கிருதத்திலோ அல்லது அரபியிலோ அல்லது கிரேக்க சீன மொழிகளிலோ வார்த்தைகளை உருவாக்கி அல்லது பொருத்தி அவை தமது சமயம் சார்ந்த தத்துவங்களாக வாணவேடிக்கை காட்டி விடுகின்றனர்.
இதன் காரணமாகவே பகுத்தறிவாளர்களும் கண்ணும் தெரியாத புதிய விஞ்ஞான கோட்பாடுகளை வெறும் மந்திர தந்திர மூட நம்பிக்கைகள் என்று கொச்சை படுத்தி தமது கண்களை தாமே மூடிகொள்கின்றனர் .
Quantum science or Quantum mechanism போன்றவற்றை பகுத்தறிவு வாதிகள் மிகவும் நுட்பமாக ஆய்வு செய்ய வேண்டும் .
ஆனால் இங்கே நடப்பதென்ன ? சமயவாதிகளும் இதர நம்பிக்கை கோட்பாட்டாளர்களும் இந்த விஞ்ஞான விடயங்களை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்துகிறார்கள்
உண்மையில் பகுத்தறிவு வாதிகளை விட சமயவாதிகளுக்கு இவற்றில் பரிச்சயம் உண்டு என்பதை ஒப்பு கொள்ளத்தான் வேண்டும் . ஆனால் அவர்களை ஏற்று கொள்ள முடியாது.
தங்களுக்கு தெரிந்தவற்றை வைத்து தமது வியாபரத்தை பெருக்கி மக்களை சிந்திக்கவே விடாத சாமியார்களை விட விஞ்ஞான உண்மைகளை தெரியாத பகுத்தறிவுவாதி எவ்வளவோ மேல்.
பகுத்தறிவு வாதிகள் என்போர் தங்களது விஞ்ஞான அறிவை வளர்த்து கொள்ளவேண்டும் .
நீங்கள் உங்களை வளர்த்து கொள்ளா விட்டால் இந்த மனித சமுதாயத்தை சமயவாதிகள் என்போர் மீண்டும் மீண்டும் இருட்டுக்குள் தள்ளிவிடுவார்கள்.
நினைத்த காரியம் கூறுதல் என்பதாக பெருதும் அறியப்பட்ட மறைபொருள் அறிதல் என்னும் கலையானது மிகவும் அற்புதமான ஒரு விஞானமாகும் .
நான் பல தசாப்தங்களாக பரீட்சித்து பார்த்து அனுபவ பூர்வமாக இதன் உண்மைகளை அறிந்துள்ளேன்,
அதிசயக்க கூடிய விதமாக மிகச்சரியான பதில்களை இதன் மூலம் கண்டறிந்துள்ளேன்.
இதில் மந்திரமோ மாயமோ அல்லது So Called கடவுள் மட்டரோ இல்லை..
இது முழுக்க முழுக்க ஒரு விஞ்ஞானம்தான். யாரும் இதை பரீட்சித்து பார்க்கலாம் .
இதற்கு மிகுந்த சிரத்தையும் புத்தி கூர்மையும் வேண்டும், முக்கியமாக Very Sensitive ஆக இருத்தல் வேண்டு,
ஏனெனில் எம்மை சுற்றி உள்ள இந்த பிரபஞ்சம் எமது ஒவ்வொரு எண்ண அலைகளுக்கும் ஒவ்வொரு அதிர்வை அளிக்கிறது.
நெருப்புக்கும் நீருக்கும் எப்படியெல்லாம் சக்தி இருக்கிறதோ அதே போல எமது எண்ணங்களுக்கும் நாம் காணும் காட்சிகளுக்கும் கேட்கும் சப்தங்களுக்கும் மிக பெரிய அர்த்தங்கள் உள்ளன.
அவை எல்லாம் எமக்கு தாராளமான தகவல்களை தருகின்றன.
எம்மை சுற்றி பரந்து விரிந்திருக்கும் இந்த உலகம் அல்லது பிரபஞ்சம் ஒரு மிக பெரிய Computer ராகும் .
அதை இயக்குவதற்கு அல்லது அதன் தரவுகளை அறிவதற்கு அதை பற்றிய கல்வி நமக்கு தேவை .
திறந்த மனதோடுதான் அதை நாம் கற்க முடியும்,
ஏற்கனவே நாம் எமக்குள் பதித்து வைத்திருக்கும் குப்பைகளை முதலில் Unlearn பண்ணவேண்டும்,
குப்பைகளை வைத்துகொண்டு புதிய உணவு சமைத்தால் அது Perfect உணவாக இருக்காது
சமயம் கடவுள் போன்ற சமாசாரங்களை விட்டு வெளியே வந்துதான் விஞ்ஞான உண்மைகளை அறியமுடியும்
அதே போன்று விஞ்ஞான உண்மைகளுக்கும் சமய மூலாம் பூசும் பைத்தியகார தனத்தில் இருந்து பகுத்தறிவாளர்கள் என்று சொல்லுபவர்களும் கொஞ்சம் வெளியே வரவேண்டும்.
விஞ்ஞானத்தை விபச்சாரிகளிடம் இருந்து விடுதலை செய்யுங்கள்
No comments:
Post a Comment