Monday, October 15, 2018

உங்களை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா?... ஆரம்பம் இன்றே ஆகட்டும் ..

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அறிவு மிக மிக அபூர்வமானது. நிச்சயமாக அது ஒரு நிகரற்ற அறிவுதான்.
அவரவர்களுக்கு ஏற்ற தேவையான அறிவு ஒவ்வொரு ஜீவராசிக்கும் மிக சரியாகவே உள்ளது.
நாம் இயற்றி கொண்ட அளவுகோல்கள் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பது போல்தான் தெரிகிறது.
ஆத்மீக வேட்கை உள்ளவர் எப்பொழுதும் சாந்த சொருபியாக சுயநலம் அற்று பரோபகார சிந்தை உள்ளவராக இருக்கவேண்டும் . அத்தோடு அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கவேண்டும் . அதாவது அமானுஷ்யமான மர்ம சக்திகள் உள்ளவராகவும் இருக்கவேண்டும் போன்ற எதிர்ப்பார்ப்புக்கள் நமக்குள் குடி கொண்டுவிட்டது.

 நாம் இது போல ஏராளமான கோட்பாடுகளை கண்டு பிடித்திருக்கிறோம்.
இந்த வகை கோட்பாடுகள் ஒரு வகையில் கோழிக்கூடுகள் போன்றவை.
இதில் வளர்க்கப்பட்ட  நாமும் ஒருவகை பிராய்லர் கோழிக்குஞ்சுகள் போலத்தான் வாழ்கிறோம்.
இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் பற்றியும் நமது பிறப்பு இறப்பு போன்ற வாழ்க்கை சங்கிலி தொடர் பயணம் பற்றியும் எதுவித சுய ஆராய்ச்சியும் மேற்கொள்ள தெரியாமல் இருக்கிறோம்.
எமது அடிப்படை கேள்விகளுக்கு எந்தவித சுய சந்தேகமும் கொள்ளாமல் சமுதாயம் கூறும் பதில்களை அப்படியே விழுங்கி கொண்டிருக்கிறோம்.
அதற்கு காராணம் நாம் சுயமாக வளரவே இல்லை என்பதுதான்.
பிரபஞ்சம் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பதில்களை மதங்கள் எறிகின்றன.
அந்த பதில்கள் பிராய்லர் குஞ்சுகளுக்கு போடுவது போன்ற உணவு போன்றதாகும் .
அவற்றை உண்டு உண்டு அதை தாண்டி உணவை தேடவேண்டும் என்ற சிந்தனையோ வேட்கையோ அற்றவர்கள் ஆகிவிட்டோம்.

இதுதான் நமது மிகப்பெரும் பிரச்சனை.
இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு பெரிய சிங்காசனத்தை  வழங்கி உள்ளது.