Monday, December 3, 2012

உங்கள் மனமும் புதைந்து கிடக்கும் உள்மனமும் சேர்ந்தால் வெற்றி

உங்கள் மனம் என்று நீங்கள் பொதுவாக எண்ணிக்கொண்டிருப்பது உங்களின் conscious  mind ஐ தான். அதாவது உங்களின் அன்றாட வாழ்வில் நீங்கள் சுய உணர்வோடு எடுக்கும் தீர்மானங்கள், உதாரணமாக இப்போது நான் காபி குடிக்கவேண்டுமா அல்லது டீ குடிக்க வேண்டுமா? என்பது போன்ற சுய உணர்வோடு மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அல்லது எண்ணங்கள் என்று குறிப்பிடலாம்.

எங்களுக்கே தெரியாத எங்களின் மனம் என்று ஒன்று இருப்பதை பற்றி இனி பாப்போம். இதை ஆழ்மனம் அல்லது sub  consicious  mind  என்றோ un conscious  mind  என்றோ அழைக்கலாம்.இந்த உள்ளுக்குள் புதைந்து கிடக்கும் உள் மனமானது பொதுவாக எமக்கு தெரியாத எமது உள்ளுணர்வுகளின் காப்பகம் என்று கூறலாம்.
இந்த unconscious  mind இல் ரகசியமாக புதைத்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணங்கள் அல்லது விருப்பங்கள் வெறுப்புக்கள் போன்றவை மிகவும் பலம்வாய்ந்த உணர்வுகளாகும். பெரும்பாலும் இவைதான் எமது வாழ்வின் உண்மையான blue print ஆகும். ஒருவர் எஞ்சினியர் இருந்தால் நிச்சயம் அவரின் இந்த unconscious  mind இல் இதற்கான சக்தி அல்லது கரு இருந்திருக்கும்
நமது வாழ்வில் இடம்பெறும் இன்பமோ துன்பமோ எல்லாமே இந்த unconscious  mind என்ற அத்திவாரத்தின் மீது கட்டி எழுப்பப்பட்ட மாளிகைகள்தான்.இந்த unconscious  mind இன் அதிசய பரிமாணங்களை எமது தேகாரோக்கியத்தில் மிக தெளிவாக காணலாம். சகல விதமான நோய்களும் அல்லது ஆரோக்கியமும் இதில் இருந்தே உருவாகிறது.இதை கண்டுபிடிப்பதற்கு பூதக்கண்ணாடி தேவையில்லை மிகத்தெளிவாக கண்டு பிடிக்காலாம். எவரின் unconscious  mind இல் நோய்களை பற்றிய பயம் அல்லது நினைப்புகள் அதிகம் இருக்கின்றதோ அவர்கள் அந்த நோய்களை தம்மை நோக்கி ஈர்த்துவிடுவார்கள். அதிகம் நோய்வைபடுபவர்கள் எல்லாம் அனேகமாக நோய்களை பற்றி சிந்திப்பவர்களாக இருப்பதை அவதானிக்க முடியும்.

எமது மனதில் நாம் பார்க்கும் காட்சிகள் கேட்கும் கருத்துக்கள் உணரும் உணர்சிகள் எல்லாமே எதோ ஒரு காலத்தில் நமது unconscious  mind  என்ற இரும்பு பெட்டகத்தை அடைந்து விடுகின்றன. பின்பு அவை மெதுவாக நமது அன்றாட வாழ்கையை தீர்மானிக்க தொடங்கி விடுகின்றன.
குறிப்பாக விளம்பர நிறுவனங்கள் இந்த ரகசியத்தை நன்றாக புரிந்து வைத்திருக்கின்றன.
புத்திசாலித்தனம் நிறைந்த சில விளம்பர வல்லுனர்கள் மனிதர்களின் unconscious mind ஐ இலக்கு வைத்தே விளம்பர உத்திகளை வகுக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளை கவரும் யுக்திகளை மிக நுட்பமாக கையாளுகின்றனர்.
மனிதர்கள் வாயால் என்னதான் வசனங்களை முழக்கி தள்ளினாலும் அடிப்படையில் மனிதர்கள் பெருதும் உணர்ச்சி வசப்பட்டவர்களே. இந்த unconscious  mind தான் உணர்சிகளை பெரிது உருவாக்குகிறது.உணர்வுகளை உருவாக்குவதில் வசனங்களை விட காட்சிகளுக்கும் சப்தங்களுக்கும் உள்ள பங்கு மிக பெரிது.
எமது conscious mind  காரண காரியங்களை சீர்துக்கி தெரிவுகளை மேற்கொள்ளும் வல்லமையை கொண்டுள்ளது.
ஆனால் நமது unconscious mind ஆனது பெரிதாக காரண காரியங்களை ஆராயும் தன்மை கொண்ட்டதல்ல. ஆனால்   மிகவும் சக்தி வாய்ந்தது.உண்மையில் மந்திரம் மாயம் என்பது போன்ற மகா அற்புத சக்தியை தன்னகத்தே கொண்டது.எடுத்த காரியம் எதிலும் வெற்றி காண்பவர்கள் எல்லோரும் இந்த ரகசியத்தை அறிந்தோ அறியாமலோ நன்றாக கண்டுகொண்டு கடைபபிடிப்பவர்களாகவே இருக்கின்றனர்.
நினைத்ததை அடையும் வல்லமையும் சரியானதை நினைக்கும் திறமையும் ஒருங்கு சேர அமைந்தவரே வெற்றிகரமான பேர்வழிகள் ஆவார்.
இந்த அற்புத சக்தியை மனிதர்கள் எல்லோரும் பெறமுடியும். நேற்றுவரை எல்லாமே பிழைத்து இருந்தாலும் இன்றிலிருந்து எல்லாவற்றையும் நாம் சரிசெய்யலாம்.
உங்களின் உள் மனதையும் வெளி மனதையும் ஒருங்குசேர ஒரே வண்டியில் பூட்ட வேண்டும். சரியான இடத்திற்கு போய்சேர இதுதான் ஒரே மார்க்கம்.
இதற்கு பல வழிகள் உள்ளன.முதல் வழி நீங்கள் இதைபற்றி சிந்திக்க வேண்டும் நிஜமாகவே சிந்திக்க வேண்டும். இந்த வேகமான உலகத்தில் பலரும் சிந்திப்பதற்கு சோம்பல் உள்ளவர்களாகவே தென்படுகிறார்கள்.வாழ்க்கையில் சதா ஓடுகிறார்கள் ஆனால் சிந்திக்க தொடங்கினால் தூங்கிவிடுகிறார்கள் அவ்வளவு சோம்பல்.
எப்படி உங்கள் இரு வகை மனங்களை ஒரு இடத்தில் சேர்ப்பது? இதோ ஒரு சிறிய எளிய பயிற்சி.
தியான முறைகளில் விபரிக்கப்படுவது போல் உங்கள் மூச்சினை கட்டுப்படுத்தி உங்கள் வசப்படுத்துங்கள்.
சிறிது நேரத்திற்கு பின்பு அதை கைவிட்டு விட்டு வழமைக்கு திரும்புங்கள். எப்போதும் உங்கள் மூச்சானது உங்களின் unconscious mind இன் செயலாகவே இருக்கிறது , ஆனால் எப்போது நீங்கள் அதை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களோ அப்போது அது உங்கள் conscious mind இன் காரியமாகிவிட்டது.
பின்பு அது தனது வழமையான இடத்திற்கு போய் விட்டதும் அதனோடு உங்கள் unconscious mind  தனது இயக்கத்தை ஆரம்பித்து விட்டதை மிக நுட்பமாக அவதானித்தால் புரிந்து கொள்ள முடியும். இந்த பயிற்சியை பல தடவைகள் மீண்டும் மீண்டும் செய்துபார்க்க இது புரியும்.
நமது சுய முன்னேற்றத்திற்கு இந்த இரு வகை மனங்களும் சேர்ந்து வேலை செய்வது அவசியம். அப்பொழுதுதான் எமக்கு உதிக்கும் எண்ணங்கள் திண்ணியதாக இருக்கும். எண்ணங்கள் திண்ணியதாக இருந்தால் என்று வள்ளுவரும் கூறியது இதை தான்

Saturday, December 1, 2012

பழக்கவழக்கத்திற்கும் நமது தலைவிதி அல்லது கர்மாவுக்கும் அழுத்தமான தொடர்புகள் உண்டு,

 நமது  அன்றாட பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றும் பெரும் மர்ம முடிச்சுகளை கொண்டுள்ளமை பெரும் ஆச்சரியத்திற்கு உரியது.
எமது பழக்க வழக்கங்களை நாம் ஒருபோதும் ஒரு பெரிய சக்தி வெளிப்பாடு உள்ள  கருமமாக நினைப்பதேயில்லை .
நமது சிந்தனையில் இருக்காத ,நாம் சுய நினைவோடு சிந்திக்காத, தானாகவே நடைபெறும் சம்பவங்கள் தான் பழக்கவழக்கம் என்ற வகையில் அடங்கும்,
உதாரணமாக எம்மை அறியாமலே தலையை சொரிவது அல்லது நகம் கடிப்பது போன்ற எல்லையே இல்லாத எமது பழக்க வழக்கம் எல்லாமே மிகபெரும் விஞ்ஞான ரகசியங்களாகும் ,
நமது எதிர்கால நிகழ்கால கடந்த கால நிகழ்வுகளை நாம் விரும்பிய வாறு அமைத்து கொள்ள இந்த பழக்க வழக்கங்கள் என்று கூறப்படும் சக்தி வெளிப்பாடு மிகபெரும் திறவு கோலாக பயன்படும் விடயமாகும்.
ஒவ்வொரு விதமான பழக்கவழக்கத்திற்கும் நமது தலைவிதி அல்லது கர்மாவுக்கும் அழுத்தமான தொடர்புகள் உண்டு,
இந்த மர்மத்தை எப்படி தெளிவாக சுருக்கமாக விளங்கும்படி சொல்லமுடியும் என்பதே மிகபெரும் சவாலாகும் .
இந்த பிரபஞ்சம் ஏராளமான இயற்கை விதிகளை கொண்டுள்ளது.
கிழக்கே உதிக்கும் சூரியன் நிச்சயம் மேற்கே தான் மறையவேண்டும்
எதை நாம் உருவாக்குகிறோமோ அதையே நாமும் பெறுவோம்
எந்த விதமான செய்திகளை எமது தலைக்குள் அதிக நேரம் வைத்திருக்கிறோமோ அந்த விதமான செய்திகளே எம்மை நோக்கியும் வரும்.
விபத்தை விபரமாக ரசித்தால் விபத்து எம்மை நோக்கி வரும் என்பது இயற்கை விதி, எமது எண்ணங்கள் எல்லாமே விதைகள்தான் , அவை வளர்ந்து மரமாகும் என்று தெரியாமல் தான் எமக்கு விருப்பம் இல்லைதா மரங்களை எல்லாம் வளர்த்து விடுகிறோம்,
எமது எண்ணங்களை எம்மால் ஓரளவு இலகுவாக மாற்றி அமைத்துவிட முடியும் ,
ஆனால் அந்த எண்ணங்கள் மிக அழுத்தமாக எம்மீது பதிந்தது விட்டால் அவை சார்ந்த பழக்கவழக்கங்களாக எம்மில் நிலை கொண்டு விடுகின்றன , அப்படி எம்மீது நிலைகொண்டு விட்ட பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றும் பிரபஞ்சத்தில் எமது வாழ்வை தீர்மானிக்கும் மிகபெரும் இயங்கு சக்திகளாக உருவெடுத்து விடுகின்றன , அதன் பின் அவற்றை மாற்றுவது என்பது இலகுவான காரியம் அல்ல,
நமது முன்னோர்கள் பலவிதமான பழக்கவழக்கங்களை பல நம்பிக்கைகளோடு தொடர்பு படுத்தி வைத்துள்ளனர்/
நாம் பொதுவாக அவற்றை மூட நம்பிக்கைகள் என்று கூறிவிடுவோம் .
அவற்றில் எமக்கு புரியாத சில விஞ்ஞான உண்மைகள் இருப்பதாக தற்போது எண்ணுகிறேன்.
எந்த எந்த பழக்கவழக்கங்களுக்கு என்னென்ன விதமான பின்விளைவுகள் உள்ளது என்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது ,

Friday, November 30, 2012

bathroom க்குள் நாம் மிகவும் சுதந்திரமாக இருக்கிறோம்

உங்கள் வாழ்க்கை உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையாகதான் இருக்கிறதா? ;இந்த கேள்வி எப்போதாவது உங்கள் மனதில் எழுந்திருக்கிறதா?
பெரும்பாலும் உங்கள் வாழ்க்கை உங்கள் வாழ்வாக இருப்பதில்லை என்பது இருட்டில் ஒழித்து வைக்கப்பட்ட பெரிய உணமையாகும்.
இதுதான் உங்கள் வாழ்க்கை இதுதான் உங்கள் விருப்பம் அல்லது இது உங்கள் வெறுப்பு போன்ற பலவிதமான தீர்மானங்களும் உங்கள் மீது பதியப்பட்டவையே அன்றி உண்மையில் அவை உங்கள் ஒரிஜினல் தீர்மானங்களாக இருப்பது அரிதிலும் அரிதேயாகும்.
இரவல் எண்ணங்களும் இரவல் விருப்பங்களும் இரவல் வெறுப்புக்களும் உங்களை உங்களுக்கே உரிய நோக்கத்திற்கு உங்களை ஒருபோதும் அழைத்து செல்லாது.உயர்ந்த இசைமேதையாக வரவேண்டியவர் ஒரு உப்பு சப்பில்லாத கிளார்க்காக வாழ்ந்து முடிப்பதும் சிறந்த நிர்வாகியாக வரவேண்டியவர் சம்மந்தமே இல்லாத எஞ்சினியராக வெறுப்புடனே வேலைபார்த்து முடிப்பதுவும் ஏறக்குறைய எல்லோருக்கும் நடப்பது ஏன்?< உங்களின் மனம் என்பது ஒரு ice berg கடலில் மிதக்கும் பனிப்பாறை போன்றது. வெளியில் தெரிவது மிக சிறு அளவுதான். பெரும்பகுதி கடலில் முழ்கி கண்ணுக்கு தெரியாமல் இருக்கும். ஆனால் அதுதான் மிகப்பெரும் பாறை. பெரும் பெரும் கப்பல்களை மூழ்கடித்துவிடும். ஆனானப்பட்ட titanic கப்பலே மூழ்கியது கண்ணுக்கு தெரியாத கடலுக்குள் மறைந்து இருந்த பனிப்பாறையில் தானே.உங்களின் உள்ளே மறைந்து இருக்கும் உங்கள் unconscious mind ஐ கண்டு பிடிப்பது பெரிய சவாலான காரியமே. ஆனால் மிக முக்கியமாக கண்டு பிடித்தே ஆகவேண்டிய தேவை இருக்கிறது,

Friday, November 9, 2012

உங்கள் தலை எழுத்தை நீங்களே எழுதுகிறீர்கள்

உங்கள் மனதிற்குள் வந்து   போகும் ஒவ்வொரு சின்னஞ்சிறு எண்ண துளிகளும் உங்களுக்குள் வெறும் ரசாயன மாற்றங்களை மட்டுமல்ல உங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களையும் உருவாக்குவது இந்த எண்ணங்களே.
இதில் நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விடயம் எம்மை அறியாமலே எமது மனத்தின் உள்ளே வந்து குடியிருக்கும் எண்ணங்கள் எல்லாமே சதா வாழ்வின் நிதர்சனங்களாக உருமாரிகொண்டிருக்கின்றன.
பெரும்பாலும் நம்மால் விரும்பப்படாத விபத்து துன்பம் போன்ற விடயங்களையே பற்றியே  நாம் பெருதும் எண்ணுகிறோம் . சந்தேகமே இல்லாமல் அந்த விரும்பத்தகாத சம்பவங்கள் நிச்சயமாக எம்மை நோக்கி வருகின்றன .
இது மிகவும் ஆபத்தான உண்மை. இது புரியாமல் தான் நாம் சதா பிரச்சனைகளில் சிக்கி கொள்கிறோம்.
எதை எண்ணுகிறோமோ அதை எம்மை நோக்கி இழுப்பது எமது எண்ணந்களே.
எமக்கு தெரிந்த எமது எண்ண ங்களும் எமக்கே தெரியாமல் எமது எண்ணத்திற்குள் புகுந்து விட்ட எண்ணங்களுமே எமது தலை எழுத்தை எழுதுகின்றன.
இது ஒரு நிச்சயமான விஞ்ஞான உண்மையாகும்

நமது எண்ணங்களே நமது இயந்திரங்கள்

 எமது மனதில் ஒரு விருப்பம் தோன்றியவுடனேயே அதை பற்றி நாம் சிந்தித்து அதில் லயித்து இருப்பது அதை நிதர்சனமாக்கும் ஒரு அற்புதமான வழியாகும். அதை பற்றி கனவு காண்பதுவும் ஒரு மிக நல்ல நிச்சயமான மார்க்கமாகும்.
ஆனால் நாம் அதைபற்றி எண்ணுபோதே அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று எண்ணி கவலைப்பட தொடங்குகிறோம்.அல்லது அந்த விருப்பம் நிறைவேற அதிகம் செலவாகுமே எனக்கு அது கிடைக்குமா? என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்களுக்கு நாம் அதிக நேரத்தை எம்மை அறியாமலேயே ஒதுக்குகிறோம். இதனால் என்ன நடக்கிறது தெரியுமா?
எமது விருபங்களை நாமே தூர தள்ளி வைக்கிறோம். விருப்பங்கள் ஒரு ஈர்ப்பு சக்தி என்றால் அவை நிறைவேறுமா என்ற அவநம்பிக்கை அந்த விருப்பங்களை எம்மை  விட்டு வெகு தூரத்திற்கு தள்ளி வைக்கும் பலம் வாய்ந்த எதிர் சக்தியாகும்.
ஒன்றை நாம் அடைவதும் அதை அடையமுடியாமல் ஏமாறுவதும் நாமே நமக்குள் உருவாக்கிக்கொள்ளும் எண்ணங்களில் இருந்து பிறப்பவைஎயாகும்.
நமது எண்ணங்களே நமது இயந்திரங்கள்

உங்கள் எண்ணங்கள் ஒரிஜினல் அத்திவாரத்தில் மீது கட்டப்பட்டதா?

இது ஒரு உண்மையான எண்ணம்தானா? இது ஒரு உண்மையான விருப்பம்தானா? இது ஒரு உண்மையான வெறுப்பு தானா? எது எனது உண்மையான எண்ணம்? நாம் பொதுவாக நினைப்பது போல் இவை ஒன்றும் இலகுவான சமாச்சாரங்கள் அல்ல.
உதாரணமாக நாம் இன்று ஒரு நெக்லஸ் வாங்க விரும்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.உண்மையிலேயே அந்த நெக்லசை நாம் விரும்புவோமாகில் அது இலகுவில் நமக்கு கிடைக்ககூடியதே. அல்லது அது பலராலும் விரும்பப்படுவத்தின் காரணமாக அந்த நெக்லசை நாம் விரும்பி இருக்கலாம்.அல்லது அது ஒரு முதலீட்டு சாதனமாகவும் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நாம் எமது உள் மனதில் உண்மையாக அதன் அழகில் மயங்காமல் வேறு இதர காரணங்களால் அதை அடைய முயற்சி செய்தால் அது அனேகமாக நிறைவேறாமல் போகக்கூடிய காரணங்கள் அதிகம்.
பலரால் விரும்பப்பைடுவதன் காரணமாக அதை நாம் வாங்க எண்ணினால் அதன் மீது எமக்குள்ள ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவாகும்.
அது ஒரு முதலீட்டு சாதனம் என்ற எண்ணத்தில் அதை வாங்க எண்ணினால் அது கைகூடாமல், சில வேலை அதைவிட மிக சிறந்த முதலீட்டு சாதனம் கிடைக்க கூடும்.
எதை நாம் விரும்புகிறோமோ அதை உண்மையில் நாம் விரும்புகிறோமா என்று நமக்கு நாமே துருவி துருவி ஆராய்ந்த பின்பே அதை நோக்கி எமது எண்ணங்களை செலுத்த வேண்டும்.
இதுவே வெற்றிக்குரிய நிச்சயமான வழியாகும். எமது சகல எண்ணங்களும் அனேகமாக வேறு பல எண்ணங்களில் தங்கி இருப்பவையாகும்.

எப்பொழுதெல்லாம் எமது எண்ணம் சரியாக அதன் அத்திவாரத்தில் இருந்து எழும்பியுள்ளதோ அப்பொழுதே அது நிச்சயமான வெற்றியை நோக்கி எழுந்து நிற்கிறது.
ஆகவே எப்பொழுது எல்லாம் எமக்குள் எழும் எண்ணங்கள் இரவல் அத்திவாரத்தின் மீது எழும்புகிறதோ அப்போதே அதன் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
உதிக்கும் எண்ணங்களை உறுதி செய்து கொள்ளுங்கள் அவை உரிய ஒரிஜினல் அத்திவாரத்தில் கட்டப்பட்டுள்ளதா?

Sunday, November 4, 2012

வாழ்கை என்பது ஒரு process அது ஒரு result அல்ல

நமது சமுதாயம்  மிகவும் கோபக்கார சமுதாயமாகும். ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள இனம்புரியாத அசுகை அல்லது வெறுப்பு மிகவும் வேதனை அளிக்க கூடிய அளவு காணப்படுகிறது.
   இதைப்பற்றி சொன்னால் பலரும் கடந்தகால கொடிய யுத்தம் தான் காரணம் என்று கூறி சுலபமாக தப்பிக்க பார்கிறார்கள்.உண்மை அதுவல்ல.
இன்னும் சரியாக சொல்லப்போனால் இந்த யுத்தம் உருவானதற்கே நமது ஆழ்மனதில் ஊறி இருந்த குரோத மனப்பான்மை தான் காரணமாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
நமது ஆழ்மனதில் உள்ள உணர்சிகள் அல்லது எண்ணங்கள்தான் யதார்த்த நிகழ்வுகளாக உருவெடுக்கின்றன. எமது unconscious  mind  இல் என்ன உள்ளதோ பெரும்பாலும்  அதுவே யதார்த்த நிகழ்காலமாக உருவாகிறது.
 எம்மிடம் தான் கோபம் வெறுப்பு பொறாமை அவநம்பிக்கை போன்ற நெகடிவ் எண்ணங்கள் தாராளமாக உண்டே?

இதைத்தானே சமயங்களும் சொன்னது? தற்போது விஞ்ஞானமும் சொல்கிறது.

quantum  physics  என்று தற்போது அழைக்கப்படும் விஞ்ஞானம் இந்த பேருண்மையை விளக்க முற்படுகிறது.
எண்ணங்கள் எதுவுமே வீணாவதில்லை ஒவ்வொரு எண்ணமும் எல்லையற்ற சக்தியை தன்னகத்தே கொண்டுள்ளது. இதைதான் மனம்போல வாழ்வு என்று தெளிவாக முன்னோர் சொன்னார்.
வாழ்வு என்பது எதோ இரு சக்திகளின் இணைவுதான். இரவும் பகலும் போலவோ  அல்லது பூனையும் பூனையும் போன்ற எதோ இரு ஜீவராசிகள் இணையும்போது தான் வாழ்வு உண்டாகிறது. இந்த இணைவு என்பது தாம்பத்தியம் மட்டும் அல்ல. ஒரு சிறுவனும் இன்னொரு சிறுவனும் கூட சிறிது பேசி மகிழும் அந்த சில வினாடிகள் அவ்விருவரும் வாழ்கின்றனர்.
இரு ஜீவராசிகள் ஒன்றினால் ஒன்று ஈர்க்கப்படும்போது ஏற்படும் மகிழ்வே வாழ்வு எனப்படுகிறது. அனேகமாக இரு அறிஞர்கள் அல்லது இரு ரசிகர்கள் போன்ற இருவர் சேர்ந்து பகிரும் சில வினாடிகளோ வருடங்களோ வாழ்வுதான்
நமக்கு அதாவது நம் மக்கள் சிரிப்பதற்கு கூட ஏதோ ஏதோ கணக்கு கூட்டல் எல்லாம் போடுவார்கள்.ஆரிய கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு என்று வளர்க்கப்பட்ட நாம் ஆரியகூதும் ஆட தெரியாமல் காரியத்தையும் கோட்டை விட்டதும் தான் ஊர் அறிந்த விடயமாச்சே?
ஆனால் இன்னும் ஏதாவது பாடம் இதில் கற்றோமா என்றால்......
வாழ்கை என்பது ஒரு process வாழ்கை என்பது ஒரு result அல்ல.
process இல் ஈடுபடுபவருகே வாழ்கை வசப்படுகிறது. Result என்பது முடிவில் வருவது ரிசல்ட்இலேயே சதா தன கவனத்தையும் சக்தியையும் குவிப்பவற்கு வாழ்க்கை அவரை விட்டு போய்விடும். அவர்தான் ரிசல்ட் டை நோக்கி ஒடுபவராசே? அதாவது முடிவை நோக்கி ஓடுபவர்.
வாழ்கை என்பது ஒரு வகையில் ஆரியகூத்துதான் காரியத்தில் கண்ணாயிருப்பது என்பது சரியாகசொல்லபோனால் முடிவை நோக்கி ஒடுதலாகும்.
Be process oriented not be a result oriented person
Life is a process result is End game

தவறான கோட்பாடுகளில் இருந்து நாம் விடுபடுவது இலகுவான காரியமல்ல

வாருங்கள் சிந்திப்போம் கண்டுணர்வோம் உருவாக்குவோம்

நமது மனம் எவ்வளவு தூரம் எமக்கு நடைபெறும் நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது என்பதை பற்றி நாம் மிகவும் சிரத்தையோடு ஆராய வேண்டி இருக்கிறது . எமது உடல் வளர்ச்சி ஆரோக்கியம் மட்டும் அல்லாது எமது தோற்ற பொலிவு கூட எமது மனத்தை பொறுத்துதான் அமைகிறது என்பது மிகவும் நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும். எமக்கு வாழ்வில் சம்பவிக்கும் வெற்றி தோல்வி மகிழ்ச்சி துக்கம் போன்ற எல்லாமே எமது மனத்தின் தன்மையை பொறுத்தே அமைகிறது. இந்த உண்மைகள் தற்போது ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இன்னும் இதில் உள்ள மர்மங்கள் நமக்கு சரியாக புரியவில்லை என்றுதான் எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனெனில் எமது மனம் என்ற கருவியை நாம் சரியாக உபயோகிக்க தெரிந்திருந்தால் எமக்கு துன்பங்களே இருக்காது நோய்களும் கூட இருக்காது. நல்லதையே நினைப்பவருக்கு கூட பல தீமைகள் நடப்பது ஏன்? நாம் ஆழமாக சிந்திக்க வேண்டி உள்ளோம். மனம் என்ற கருவியை நாம் சரியான முறையில் உபயோகிக்க பழக வேண்டும். இருட்டிலே ஒன்றுமே தெரியாமல் கருவியை தவறான திசைக்கு திருப்புகிறோம், அநேகமானவர்க்கு இந்த தவறுதான் நடக்கிறது. உண்மையில் இது ஒரு formula இது ஒரு சூத்திரம். ஆச்சரியகரமாக இந்த சூத்திரம் பலருக்கும் சரியாக தெரிவதில்லை. இது கொள்கை அளவில் விளங்குவது இலகுதான் ஆனால் நடை முறையில் பழக்கமாக கொண்டு வருவது மிகவும் கடினம். ஏனெனில் எம்மில் ஆழமாக ஊறி விட்ட தவறான கோட்பாடுகளில் இருந்து நாம் விடுபடுவது இலகுவான காரியமல்ல.Un learning is not easy as Learning கூட்டு முயற்சியாகவும், தனித்தனியே சுய பரிசோதனையாகவும், மிக கடினமான பயிற்சி முறைகள் மூலமாகவும் தான் இந்த வெற்றி Formula வை கண்டறிய வேண்டும் எமது வாழ்வு நாம் விரும்பிய படி அமைவதற்கு உரிய சக்தியை நாம் எமக்குள் இருந்தே பெறவேண்டும் நாம் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், இது மிகவும் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான மெய்ஞான உண்மையாகும் . நாம் உண்மையில் ஒன்றும் புதிதாக கூறவில்லை. எல்லா அறிவும் இங்கேயே இருக்கிறது, எத்தனையோ ஞானிகளும் அறிஞர்களும் மீண்டும் மீண்டும் பல பல விதமாக கூறியவைதான் ஆனால் என்ன அவை எமக்கு சரியாக புரியவில்லை. இந்த அற்புத பிரபஞ்சத்தின் அற்புதங்கள் எம்மால் அளந்து கண்டு பிடிக்க முடியாதுதான். ஆனால் எம்மால் கண்டு பிடிக்க கூடிய மர்மங்களை கூட நாம் கண்டு பிடிக்க தயங்குகிறோம் பூனை கண்ணை மூடிக்கொண்டிருக்கும் comfort zone இற்குள் நாமும் கண்ணை திறந்து பார்க்க பயப்படுகிறோம். யாராவது ஏதாவது ஒன்றை கூறி நம்புங்கள் என்றால் நம்பிவிட தயாராகிறோம் , ஏனெனில் நம்புவது மிகவும் சுலபமான காரியமாகும். நாமோ சிந்திப்பதற்கு மிகவும் சோம்பல் படுகின்ற ஒரு மக்கள் கூட்டமாகும். எதையும் நம்பி கண்ணை மூடி கொண்டிருப்பது புண்ணியம் என்று வேறு தவறாக எண்ணி கொள்கிறோம் .சிந்திப்பது ஆண்டவனுக்கு பிடிக்காது அது ஆணவத்தை காட்டுகிறது பேசாமல் நம்புவது இறைவனுக்கு உகந்தது என்று சமய வாதிகளும் மனிதர்களின் அறியாமையில் உயிர்வாழும் சுயநலமிகளும் நம்மை மிக மோசமான இருட்டில் தள்ளி விட்டார்கள். சிந்திப்பது பாபம் நம்புவது புண்ணியம். நாம் ஒவ்வொருவரும் ஒருவகையில் ஒவ்வொரு சிருஷ்டியாளர்களே. எமது சிருஷ்டியின் ஊடாக முழு பிரபஞ்சமும் தனது சிருஷ்டியை நிகழ்த்தி கொண்டிருக்கிறது மரம் செடி மற்றும் நாய் பூனை போன்ற சகல ஜீவா ராசிகளும் சிருஷ்டியாளர்களே. பிரபஞ்சம் என்பது என்றும் இயங்கி கொண்டிருக்கும் சிருஷ்டி இயல்பு தான் என்று கூறலாம். படைப்பில் மரம் செடி கொடியை விட நாம் ஒன்றும் உயர்ந்தவர்கள் இல்லை. சரியாக சொல்லபோனால் எல்லாமே உயர்ந்தவைதான். ஒவ்வொன்றும் தன்னை தானே சிருஷ்டித்து கொள்கிறது ஒவ்வொரு தனி தனி சிருஷ்டியும் சேர்ந்தது தான் முழு பிரபஞ்சம் ஆகிறது. நாம் எம்மை எப்படி சிருஷ்டித்து கொள்ள வேண்டும் என்பது எமது மனம் வாக்கு காயத்தில் தான் இருக்கிறது. எம்மை நாம் எப்படி உருவாக்கி கொள்ள வேண்டும்? எமக்கு எது வேண்டும் ? நாம் வேண்டுவதை அடைவது எப்படி ? இவற்றை பற்றி எப்போதாவது நாம் சிந்தித்து இருப்போமா? வாருங்கள் சிந்திப்போம் கண்டுணர்வோம் உருவாக்குவோம்

எம்மை சிந்திக்க விடாமல் எமக்காக சிந்திக்கும் வேறு யாரோ

சாமியார்கள் வழிகாட்டிகள் மகரிஷிகள் குருமகராஜிகள் பகவான்கள் பகவதிகள் அம்மாசாமியாரினிகள் எல்லாரும் எப்படியாவது மக்களை காப்பாற்றியே தீருவது என்று விடாப்பிடியாக முயற்சி செய்கிறார்கள். தாராளாமாக முயற்சி செய்யட்டும் . உலகில் நடக்கும் கொலை கொள்ளைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவது என்ன நடைபெறக்கூடிய காரியமா? சில கிரிமினல்கள் அகப்படுவார்கள் சிலர் அகப்படமாட்டார்கள். ஆனாலும் இயற்கையின் விஞ்ஞான விதி ஒன்று உண்டு அதில் எவரும் தப்ப முடியாது. ஊரையெல்லாம் ஏமாற்றுபவன்  சொந்த வீட்டிலேயே ஏமாந்த கதையெல்லாம் உண்டு இந்த மாதிரி பித்தலாட்ட சாமிகளிடம் மக்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். இது உண்மையில் ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.
மிகவும் அறிவாளிகளாக படித்தவர்களாக ஏன் படு சுயநலவாதிகளாக இருப்பவர்கள்கூட இந்த மாதிரி முடிச்சவிழ்கி சாமியார் குருமார்களிடம்  சிக்குப்பட்டு விடுகிறார்கள்.
சுய சிந்தனை இல்லாமல் இருப்பது மிகவும் உயர்ந்த விடயமாக  நமது மனதில் பதியப்பட்டு உள்ளது . சமயங்களும் கலாசாரம் என்று நாம் கூறிகொண்டிருக்கும் வாழ்க்கை முறையும் இந்த தவறை கால காலமாக செய்துவருகின்றன.
சுயமாக சிந்திக்க தெரிந்தால் அவர்களை அடக்கி ஆளமுடியாதே? குருமார்கள்  நிலைத்து நிற்பதே மக்களின்   அறியாமையினால்தான்.
மக்கள் உண்மையை அறியாதவாறு சாமிகளும் ஆசாமிகளும் பல விதமான ஒழுக்க விதிகள் கோட்பாடுகள் எல்லாவற்றையும் பாமர மக்களின் தலையில் திணித்து வைத்துள்ளன.
எல்லா சாமிகளும் மகரிஷிகளும் ஸ்ரீ ஸ்ரீ க்களும் தம்மை நாடிவரும் அப்பாவி ஜனங்களிடம் முதலில் போதிக்கும் பாடம் சரணாகதியாகும் , அதாவது சுயமாக சிந்திக்காதே என்னை பின்பற்று என்னையே எப்போதும் நினைத்திரு  நான் சொல்வதை எப்போதும் படி நான்  பேசுவதை எப்போதும் கேள் . உனக்கு ஒரு குறையும் வராமல் நான் பாதுகாப்பேன் உனக்கு இப்பிறவியிலும் இனி வரும் பிறவிகளிலும் நானே துணை.
இப்படியெல்லாம் வார்த்தை மழை பொழியும் இந்த மோசடி பேர்வழிகள் அத்தனை பேரும் .... ஆம்  அத்தனை பேரும் தங்கள் நோய்களுக்கு நல்ல நல்லள அலோபதி வைத்தியம் பார்க்க ஒருபோதும் தவறுவதில்லை. தங்கள் உயிர்மேல் அவ்வளவு ஆசை.
 ஊருக்கு எல்லாம் உபதேசம் செய்து வாருங்கள் உங்கள் நோய்களை குணமாக்குவேன் என்று ஓயாமல் ஜெபம் செய்து கோடி கோடியாக சம்பாதித்து விட்டு டெல்லியில்  போய்  மாதக்கணக்காக படுத்திருந்து வைத்தியம் பார்த்த வரலாறுகள் ஏராளம்.
இப்போது இருக்கும் இந்த வழிப்பறி சாமியார்கள் எல்லோரும் காலமானாலும் புதிது புதிதாக சாமிகளும் குருமார்களும் உருவாகி கொண்டே இருப்பார்கள் .
இங்கே தான் சுயமாக் சிந்திக்க மறுக்கும் அல்லது சிந்திப்பது என்றால் என்வென்று மறந்தே போய்விட்ட ஒரு ஜனக்கூட்டம் இருக்கிறதே?
மனிதர்களை வெறுமையான சுயம் இல்லாத ஒரு இயந்திரங்களாக நமது சமயங்கள் உருவாக்கி விட்டன.
எப்பொழுதும் ஏதாவது ஒன்றை நம்பி கண்ணை மூடிகொண்டிருப்பதே பாதுகாப்பு    என்று துயில் கொள்ளும் அடியவர்கள் கூட்டம்தான் நாங்கள்

இங்கு ஒருவரும் தனது சுய வாழ்க்கையை வாழவே இல்லை. இங்கு ஒருவருக்கும் தனது என்று சொல்லிக்கொள்ள கூடிய விருப்பங்கள் என்று ஒன்றுமே இல்லை. மனதில் இருக்கும் எண்ணங்கள் எல்லாமே இரவல் சிந்தனைகள் தான்.
நம்புவது என்பது சிந்திப்பது அல்ல. சிந்திப்பது என்பது பார்ப்பதை கேட்பதை படிப்பதை மீண்டும் சீர் தூக்கி பார்த்து சுயமாக ஒரு தீர்மானத்திற்கு வருதலாகும்.
நமக்கு தேவையான சிந்தனைகளை வேறு யாரோ (கடவுள்கள்,சாமியார்கள்.குருமகராஜிகள். மகரிஷிகள் ,பாபாக்கள்,பகவதிகள் பகவான்கள் நித்தி புத்தி ஆனந்தாக்கள் மற்றும் ஏராளமான)   சிந்தித்து வெறும் தீர்மானங்களை மட்டும் எமது தலையில் சுமத்தி விடுகிறார்கள். நாமும் சுமப்பது தான் சுகமென்று காலா காலமாக சுமக்கின்றோம்.
எமது வாழ்வை பற்றிய எந்த கோட்பாடுகளும் அல்லது எந்த தீர்மானங்களும்  அனேகமாக எமது சொந்த சுய தீர்மானங்களாக இருப்பது இல்லை.
யாரோ ஒருவரது கருத்துக்களை எமது சொந்த எண்ணங்களாக நம்பி எமது வாழ்நாட்களை ஒட்டி முடித்து விடுகிறோம், முடிவில் வெறுமைதான் எமக்கு மிச்சம் ஆக இருக்கும்.  
ஒவ்வொரு நிமிடமும் உங்களை நீங்களே சிருஷ்டித்து கொண்டிருகிறீர்கள்  
உங்களின் வலிமையான மனம் உங்களுக்கு  தேவையான எதையுமே உருவாக்கக்கூடிய  வல்லமை வாய்ந்தது  
உங்களுக்கு தேவையானதை வேறு ஒருவரால்  வானத்தில் இருந்து படைக்க முடியாது  ஆனால் நீங்கள் படைக்கலாம் 
அதற்குரிய சகல சக்தியும் இயற்கை உங்களுக்கு வாரி வழங்கி உள்ளது 
அதை அறிய முயற்சி செய்யுங்கள் 
உங்கள் நேரத்தை வழிகாட்டிகளுக்கு வீணாக கொடுக்காதீர்கள் 
அவர்கள் கொள்ளைகாரர்கள்  
இதில் இடப்பட்ட இருக்கும் படங்கள் வெறும் சொற்பமே  குருமார்கள் இன்னும் ஏராளம் உள்ளனர்

கடவுள் நம்பிக்கையோடு பொருத்தப்பட்ட எக்ஸ்ட்ரா கோட்பாடுகள் God With Extra Fittings

எமது அடிமனதில் பல பல ஆண்டுகளாக விதைக்கப்பட்டு எம்மோடு பிரிக்கவே முடியாத வாறு உருவாகிய எண்ணங்களில் முக்கியமானது கடவுள் நம்பிக்கை என்பதாகும்.இந்த கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று தனியாக ஒரே ஒரு எண்ணமாக இல்லை . இதனோடு கூடவே ஏராளமான இதர எக்ஸ்ட்ரா நம்பிக்கைகளும் பின்னி பிணைந்தே வளர்ந்து விட்டிருக்கிறது.

இவற்றில் பல நம்பிக்கைகள் ஒன்றோடு ஒன்று மிகவும் முரண்பட்ட எண்ணங்களாக உள்ளது. பல முரண்பாடுகள் நிறைந்த பல விதமான நம்பிக்கைகளின் கூட்டு சாம்பாராக ஒட்டு மொத்த கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் எமது தலையில் சுமக்கின்றோம். அனேகமாக எமது வாழ்வின் குழப்பங்களுக்கு இந்த சாம்பார்தனமான நம்பிக்கை கோட்பாடுகள்தான் காரணம்,

பகுத்தறிவு ஆன்மிகம் Rational Spirituality விஞ்ஞானக் கடவுள்

நாம் யார் ? கடவுள் உண்டா? எம்மை சுற்றி நடப்பது என்ன? இதில் எந்த
கேள்வி உதித்தாலும் உடனடியாக கெட்டித்தனமான பதில்களை தர சகல சமயங்களும் வழிகாட்டிகளும் குருமார்களும் காத்திருக்கிறார்கள். எமது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது மிகவும் தித்திப்பான ஒரு காரியமாக அவர்கள் எதிர்கொள்கின்றனர் . எமது கேள்விகளில் அவர்கள் உயிர் வாழ்கின்றனர். அவர்களை பின்பற்றுபவர்களுக்கு சொர்க்கம் காத்திருப்பதாக நம்பிக்கை
அளிக்கின்றனர் நாம் அவர்களின் பதில்களில் இருந்து தற்காலிகமான போதை உணர்வுகளை பெறுகிறோம் ஆனால் அறிவை பெறுகிறோமா என்றால் அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களிடமே இல்லாத அறிவை அவர்கள் எப்படி எமக்கு தரமுடியும் ? நம்மை தங்கள் கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளப்பண்ணியே எம்மை ஆட்டு மந்தைகளாக்கி விட்டார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படியே நம்பி நம்பி பின்னால் சென்றததனால் எதையுமே சுயமாக சிந்திக்க முடியாதவர்களாகி விட்டோம் . சதா நம்புவதற்கு ஏதாவது ஒரு தூண் நமக்கு தேவை படுகிறது. சாமி சமயம் அல்லது கலாசாரம் மேலும் அரசியல் தலைவர் அல்லது சினிமா நடிகர் போன்று ஏதாவது ஒன்று நம்பிக்கை கொள்வதற்கு தேவை படுகிறது.

இந்த நம்பிக்கை என்பது மருந்து மாதிரி தவிர்க்க முடியாததாகிவிட்டது. தேவை ஏற்படும்போது ஏதோ ஒரு தெரபி என்று கண்டுக்காமல் இருந்து விடலாம் . ஆனால் இங்கே நடப்பது என்ன? மருந்தையே சாப்பாடாக எண்ணி சாப்பிட்டு சாப்பிட்டு எல்லோரும் விசித்திர நோயாளிகளாக மாறிவிட்டனர் அல்லவா?
தனக்கு தானே படைப்பாளி என்ற அற்புத சிருஷ்டி தத்துவத்தை அடியோடு மறந்தவர்களாக வெறும் வெறுமையான மனிதர்களாக உருமாறி விட்டனர் .
 இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி . மனித சமுதாயம் தான் ஒரு சிருஷ்டியாளன் என்பதை உணராமல் எதோ ஒரு சக்தி அல்லது யாரோ ஒருவர் எதோ ஒரு விதமாக தன வாழ்வை தீர்மானிக்கிறார் என்றல்லவா ஒரு இருட்டு நம்பிக்கையில் வாழ்ந்து இறந்து விடுகிறார்கள்.