Monday, March 11, 2013

தற்செயலாக எதுவும் நடப்பதில்லை!

ஒன்றோடு ஒன்று தொடர்புடைய நிகழ்சிகள் ஒரு போதும் தற்செயலாக நடைபெறும் நிகழ்வுகளே அல்ல.
பிரபஞ்சம் ஒரு ஒழுங்கு முறையில் தான் இயங்குகிறது . ஒரு சம்பவம் நடை பெரும் முன்பாக அந்த சம்பவம் தொடர்பான பல சம்பவங்கள் நடை பெறுவதை நாம் அவதானிக்கலாம் 
எம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களின் தன்மைகளை நாம் உற்று அவதானித்தால் அவை எமது சாதாரண அறிவுக்கு புலப்படாத ஒரு வரையறுக்கப்பட்ட ஒழுங்கை நோக்கி இயங்குவதை காணலாம் ,
இதற்க்கு ஏராளாமான உதாரணங்கள் எல்லோரினதும் வாழ்வில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளாகும் . ஆனால் என்ன நாம் அனேகமாக அவற்றை நுட்பமாக அவதானிப்பதில்லை 
உதாரணமாக மாம்பழத்தை பற்றிய எண்ணம் உருவான சில சமயங்களில் உண்மையாகவே எமது கைக்கு ஒரு மாம்பழம் கிடைக்ககூடும் அல்லது யாரவது ஒருவர் மாம்பழத்தை வைத்திருக்கும் காட்சியை நாம் காணக்கூடும் எப்படியாவது அது சம்பந்தமான செய்திகள் எதோ ஒரு விதத்தில் தொடர்பாக நடை பெறக்கூடும் 
இவை போன்ற பல சம்பவங்களை நாம் அவதானிக்கலாம் . இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு சிறிய நிகழ்வுகளிலும் மிக சரியான திட்டமிடல் அடிப்படையிலேயே நடைபெறுகிறது 
ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்தத மிக பெரும் விடயங்களை ஆராய்வது மிக எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .
இயற்கை அழிவுகள் நடக்கும் நாடுகளில்  அவை நடப்பதற்கு சில நாட்களில் முன்பாக அல்லது பின்பாக பல விதமான அரசியல் குழப்பங்கள் நடைபெறுவது நாம் அறிந்ததே .
மனிதர்களின் மனதில் உண்டாகும் எண்ணங்களே நாடுகளின் அல்லது சமூகங்களின் தலைவிதியை எழுதுகின்றன 
எந்த விதமான எண்ணங்கள் எம்மை காந்தம் போன்று இழுக்கின்றனவோ அந்தவிதமான சம்பவங்களும் எம்மை நோக்கி வருவது நிச்சயம் 
தற்செயலாக எதுவும் நடப்பதில்லை 
எல்லாவற்றிக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பாகவே நடக்கின்றன 
எமது மனம்தான் மிக பெரிய கம்ப்யூட்டர் . அதுவும் வாழ்க்கை என்னும் தொழிற்சாலையில் உற்பத்தி ஸ்தானத்தில் கம்பீரமாக வேலை செய்யும் திறமைசாலி 
மனம் விரும்பி நினைப்பது மட்டும் அல்லாமல் விரும்பாமல் ஏனோ தானோ வென்று காரணமே இல்லாமல் நினைப்பதையும்கூட செயல் வடிவமாக நடத்தி காட்டும் பொல்லாத மிக பெரும் பலசாலிதான் எமது மனம் .
எம்மை நோக்கி வரும் சம்பவங்கள் எல்லாமே சரியான சிக்னல்களை காட்டி விட்டே வருகின்றன .
ஆனால் அந்த சிக்னல்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் நம்மிடம் எவ்வளவு தூரம் உள்ளது?
அந்த ஆற்றலை வளர்க்க உண்மையில் விரும்பினால் நிச்சயம் முடியும் 

No comments: