Saturday, December 1, 2012

பழக்கவழக்கத்திற்கும் நமது தலைவிதி அல்லது கர்மாவுக்கும் அழுத்தமான தொடர்புகள் உண்டு,

 நமது  அன்றாட பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றும் பெரும் மர்ம முடிச்சுகளை கொண்டுள்ளமை பெரும் ஆச்சரியத்திற்கு உரியது.
எமது பழக்க வழக்கங்களை நாம் ஒருபோதும் ஒரு பெரிய சக்தி வெளிப்பாடு உள்ள  கருமமாக நினைப்பதேயில்லை .
நமது சிந்தனையில் இருக்காத ,நாம் சுய நினைவோடு சிந்திக்காத, தானாகவே நடைபெறும் சம்பவங்கள் தான் பழக்கவழக்கம் என்ற வகையில் அடங்கும்,
உதாரணமாக எம்மை அறியாமலே தலையை சொரிவது அல்லது நகம் கடிப்பது போன்ற எல்லையே இல்லாத எமது பழக்க வழக்கம் எல்லாமே மிகபெரும் விஞ்ஞான ரகசியங்களாகும் ,
நமது எதிர்கால நிகழ்கால கடந்த கால நிகழ்வுகளை நாம் விரும்பிய வாறு அமைத்து கொள்ள இந்த பழக்க வழக்கங்கள் என்று கூறப்படும் சக்தி வெளிப்பாடு மிகபெரும் திறவு கோலாக பயன்படும் விடயமாகும்.
ஒவ்வொரு விதமான பழக்கவழக்கத்திற்கும் நமது தலைவிதி அல்லது கர்மாவுக்கும் அழுத்தமான தொடர்புகள் உண்டு,
இந்த மர்மத்தை எப்படி தெளிவாக சுருக்கமாக விளங்கும்படி சொல்லமுடியும் என்பதே மிகபெரும் சவாலாகும் .
இந்த பிரபஞ்சம் ஏராளமான இயற்கை விதிகளை கொண்டுள்ளது.
கிழக்கே உதிக்கும் சூரியன் நிச்சயம் மேற்கே தான் மறையவேண்டும்
எதை நாம் உருவாக்குகிறோமோ அதையே நாமும் பெறுவோம்
எந்த விதமான செய்திகளை எமது தலைக்குள் அதிக நேரம் வைத்திருக்கிறோமோ அந்த விதமான செய்திகளே எம்மை நோக்கியும் வரும்.
விபத்தை விபரமாக ரசித்தால் விபத்து எம்மை நோக்கி வரும் என்பது இயற்கை விதி, எமது எண்ணங்கள் எல்லாமே விதைகள்தான் , அவை வளர்ந்து மரமாகும் என்று தெரியாமல் தான் எமக்கு விருப்பம் இல்லைதா மரங்களை எல்லாம் வளர்த்து விடுகிறோம்,
எமது எண்ணங்களை எம்மால் ஓரளவு இலகுவாக மாற்றி அமைத்துவிட முடியும் ,
ஆனால் அந்த எண்ணங்கள் மிக அழுத்தமாக எம்மீது பதிந்தது விட்டால் அவை சார்ந்த பழக்கவழக்கங்களாக எம்மில் நிலை கொண்டு விடுகின்றன , அப்படி எம்மீது நிலைகொண்டு விட்ட பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றும் பிரபஞ்சத்தில் எமது வாழ்வை தீர்மானிக்கும் மிகபெரும் இயங்கு சக்திகளாக உருவெடுத்து விடுகின்றன , அதன் பின் அவற்றை மாற்றுவது என்பது இலகுவான காரியம் அல்ல,
நமது முன்னோர்கள் பலவிதமான பழக்கவழக்கங்களை பல நம்பிக்கைகளோடு தொடர்பு படுத்தி வைத்துள்ளனர்/
நாம் பொதுவாக அவற்றை மூட நம்பிக்கைகள் என்று கூறிவிடுவோம் .
அவற்றில் எமக்கு புரியாத சில விஞ்ஞான உண்மைகள் இருப்பதாக தற்போது எண்ணுகிறேன்.
எந்த எந்த பழக்கவழக்கங்களுக்கு என்னென்ன விதமான பின்விளைவுகள் உள்ளது என்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது ,

No comments: