Sunday, July 11, 2010

அழகான சிறு குருவியை நின்று நிதானமாக ரசித்திருக்கிரோமா

முதலில் உங்களுக்கு என் அன்பான வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் நாம் மிகவும் ரசிக்க வேண்டியது வாழ்க்கையையே.
ரசிக்க வேண்டிய வாழ்கையை நாம் கல்குலட்டர் கொண்டு கணக்கு பண்ணியே பழகி விட்டோம். கொஞ்சம் பொறுமையாக இருந்து யோசித்தால் தெரியவரும். நாம் அநேகமான சந்தர்ப்பங்களில் முத்துக்களை நீக்கி கற்களை பொறுக்கிய முட்டாள்களாகவே வாழ்ந்திருப்பது.
அழகான சிறு குருவியை நின்று நிதானமாக ரசித்திருக்கிரோமா?
ஓட்டமே வாழ்க்கையாக எண்ணிக்கொன்டல்லவா இது நாள்வரை வாழ்ந்திருக்கிறோம்?
வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
நமக்கு எது உண்மையில் விருப்பமானது என்று உண்மைய்லேயை  எமக்கு தெரியுமா?
நமக்கு விருப்பமானது என்று நாம் நினைக்கும் பல விடயங்களும் பல சமயத்தில் பிறரது விருப்பங்களே, எப்படியோ எம்தலை மீது எம்மை அறியாமலேயே பதியப்பட்டுவிட்டவைகளாகும்.
நாம்தான் எல்லாவற்றையும் சிந்தித்து செயலாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று என்னும் பல சமயங்களில் அந்த எண்ணமே ஒரு குழைந்தைத்தனமான எண்ணமாக நமக்கே தோன்றுவதில்லையா?

1 comment:

Unknown said...

Very Nice, Romba Nalla irukku ungal pathivugal.