இன்றைய பகுத்தறிவு வாதம் என்பது சென்ற அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் உருவான கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட மாறியதாக தெரியவில்லை.
நூற்றாண்டுக்கு முந்தைய பகுத்தறிவு கோட்பாடுகளையே இன்னும் பின் பற்றுகிறார்கள்.

ஆத்மீகவாதிகள் அல்லது சமயவாதிகள் எப்படி எப்படியெல்லாம் அறியாமையில் மூழ்கி உள்ளார்களோ அவர்களை போலவே இந்த பகுத்தறிவுவாதிகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு இறுகிய நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.
இது கொஞ்சம் இடக்கு மிடக்கான கருத்தாக தோன்றலாம்.
இவர்களின் பகுத்தறிவு பெரும்பாலும் தந்தை பெரியாரின் கருத்துக்களோடு ஒத்து இருக்கிறது,
தந்தை பெரியாரின் சுயமரியாதை போராட்டம் ஜாதி அடக்குமுறைக்கு எதிராகவே ஆரம்பிக்கப்பட்டது.