
புனிதமானவை போற்றுதற்கு உரியவை .
ஒரு போதும் அந்த பழமையான தத்துவங்களை நாம் கைவிடவே கூடாது
சனாதன தர்மங்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அற்புத கருத்துக்கள் ஆகும் ,
இதுதான் நமக்கு காலகாலமாக இந்த சமூகமும் சமயமும் நமக்கு கற்று தந்திருக்கும் பாடம்.
இது மிகவும் பிற்போக்கு தனமான ஒரு பாடமாகும் .
சனாதனம் என்றாலே கைகூப்பி தொழவேண்டும் அர்ச்சனை செய்யவேண்டும் என்றால்லாம் பெருசுகள் வரிந்து கட்டி கொண்டு வந்து விடுவார்கள்.
இந்த சனாதனம் என்று இவர்கள் எதை குறிப்பிடுகிறார்கள்?
கணவன் இறந்தால் அவனது எரியும் சவத்தோடு மனைவியும் சேர்ந்து எரிந்து சாம்பலாக வேண்டும் என்பது சனாதன தர்மம், அப்படி எரிந்து சாம்பலானவள் சதிமாதா என்று போற்ற படுவாள் .
ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு அந்தஸ்தில் வைக்கப்படுவதும் சந்தன தர்மம் அதாவது பிராமணன் கடவுளின் தலையில் இருந்து பிறந்தவனாம்.தாழ்ந்த ஜாதிக்காரன் காலில் இருந்து பிறந்தவனாம் , இது ஒரு சனாதன தர்மம் .இந்த கண்றாவி கோட்பாடுகளையும் நமது தலையில காவுகிறோம் .