
மனிதகுலத்தை எப்படியாவது இருட்டில் வைத்திருக்க விரும்பும் இந்த வியாபாரிகளை பற்றி எல்லாம் எழுதி எழுதி எனக்கு சற்று சலிப்பு ஏற்பட்டுவிட்டது .
எவ்வளவுதான் எழுதினாலும் பேசினாலும் நித்திரையை விட்டு எழுந்திருக்க மாட்டேன் என்று சிலர் பிடிவாதமாக இருப்பது மிகபெரும் அறியாமைதான்.
அவர்களை விட்டுவிடுவோம். இந்த பகுத்தறிவாளர்கள் என்று பெருதும் கருதப்படுபவர்கள் தங்களை அறியாமலேயே வேறு ஒரு இருட்டில் இருப்பதாகத்தான் எனெக்கு எண்ணத்தோன்றுகிறது .
குறிப்பாக தமிழ்நாட்டில் அல்லது இந்திய துணை கண்டத்தில் இருக்கும் பகுத்தறிவாளர்களின் கருத்துக்கள் பலவும் மிகவும் காலம் கடந்த கோட்பாடுகளாகும்.

எது மூட நம்பிக்கை என்று விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்வதற்கு ஜாதியும் சமயமும் பெரும் தடையாக இருக்கிறது .
மேல்ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு சமயத்தை ஒரு சாதனமாக பார்பனர்கள் பயன்படுத்தும் காரணத்தால் சமய கோட்பாடுகள் எப்போதும் உண்மையை மனிதன் கண்டறிவதற்கு தடையாகவே இருந்திருக்கின்றன.