
உறவுகள் மிகவும் இனிமையானவையாகும் , நாம்
அனுபவிக்கும் உறவுகள் பெரும்பாலும் பிறரை ஒரு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்க பயன்படும் தந்திரமாகவே கருதுகிறோம் . பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே உள்ள உறவானாலும் அல்லது காதலன் காதலிக்கு இடையே உள்ள உறவாக இருந்தாலும் அவை பெருதும் ஒரு சுய நலம் அல்லது (possessiveness) எனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான பொருள் போன்ற ஒரு உணர்வின் அடிப்படையில் தோன்றும் காரணமாகவே இருக்கிறது,

நாம் விரும்பும் பொருள் எமக்கு கிடைக்காவிடின் நாம் ஆத்திரப்பட்டு அதை அழித்துவிடும் அளவுக்கு சென்று விடும் கொடுமை எல்லாம் இந்த possessiveness எனப்படும் சுயநலதினால் தான் உருவாகிறது ,
விலகிப்போகும் காதலிக்கு தீங்கு செய்வது , மகன் வாழ்வு கெட்டாலும் பரவாயில்லை போட்டியாக உள்ள மருமகளுக்கு பாடம் படிப்பிப்பது போன்று ஏராளமான உதாரணங்களை கூற முடியும் ,
குடும்ப அமைப்பு முறை இறுக்கமாக இருப்பதாக தம்பட்டம் அடித்து கொள்ளும் ஆசிய ஆபிரிகக் நாடுகளில்தான் மனித உறவு முறைகள் எல்லாம் மிகவும் திரிபடைந்து மாசுபட்டு உள்ளது ,
குடும்ப பாரம்பரியம் என்ற பெயரால் எத்தனை கொடுமைகள்?
இந்த குடும்ப உறவு பெருமையை பற்றி அதிகமாக பேசும் நாடுகளில்தான் கொடுமைகள் இன்னும் குறையவில்லை !
சக உறவினரை அல்லது நண்பரை தனது கட்டு பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்கவே அன்பு என்று கூறிகொள்ளும் ஒருவித பித்தலாட்ட possessiveness ஐ மனதின் அடியில் புதைத்து வைத்துள்ளார்கள் .