
plagued the world.There is no such thing as 'knowledge' for the sake of knowledge. Knowledge is power. "I know. You don't know". ug krishnamurthi
அனேகமாக எல்லா சாமியார்களும் சமய வாதிகளும் உபதேசிகளும் குருமார்களும் பிரசாரகர்களும் அள்ளி வீசும் கருத்துக்கள் எதுவுமே அவர்களின் சொந்த கருத்துக்கள் அல்ல.
நியு ஏஜ் தத்துவங்கள் என்று கூறப்படும் விடயங்களும் சுய முன்னேற்ற புத்தகங்களில் இருந்து பெறப்படும் உளவியல் மற்றும் பிரபஞ்ச பற்றிய கருத்துக்களே ஆகும் .
அவை நல்ல கருத்துக்களே , யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்று பேசாமல் இருந்து விடலாம் தான் ,ஆனால் இந்த கூட்டத்திற்கு ஆள்பிடிக்கும் ஆத்மீக உபதேசிகள் எல்லாருமே நல்ல நல்ல கருத்துக்களை எல்லாம் தங்கள் சொந்த கருத்துக்கள் அல்லது அனுபவங்கள் போல பாவனை பண்ணி நடித்து விட்டு சிஷ்யர்களை நிரந்தர கத்துக்குட்டி அடிமைகளாக அல்லவா வைத்திருக்கிறார்கள்?
அத்தனை முடிச்சவிக்கிகளும் பெரும் பெரும் தத்துவங்களை சொல்லி கேட்போரை மயக்கி விட்டு இறுதியில் அவர்களின் பணத்தை எப்படியாவது பிடுங்கி விடுவார்கள் எனக்கு தெரிந்த அளவில் இன்று பிரபலமாக இருக்கும் அத்தனை ஆள்பிடி காரரும் இப்படித்தான் நித்தியானந்தா என்பவர் நன்றாக பேசுவார், எல்லாம் ஓஷோ மற்றும் தீபக் சோப்ரா அல்லது வைன் டயர் மற்றும் நோர்மன் விஸ்டன் போன்றவர்களின் உபயம்
அடுத்தது அந்த ஜாக்கி வாசுதேவ் என்ற சாமியார், இவர் மனைவியை கொன்றதாக வழக்கு அப்படியே கிடப்பில் கிடக்க கடையை வெற்றி கரமாக திறந்து விட்டுள்ளார், பேசுவதில் ஒன்று கூட ஒரிஜினல் இல்லை , எல்லாம் ஓஷோ வின் second Hand matter தான் ,இவருக்கு ஒரு மகளும் பல பெண் சிநேகிதகளும் ஏராளமான சொத்துக்களும் உண்டு,