Monday, November 14, 2016

Nothing ஐ அடைவதற்கு Things எல்லாவற்றையும் இழக்க சொல்லும் மோசடிதான் தியானம், ஞானம், முக்தி, மோட்சம்....

மனித குலவரலாறு தோறும் ஒரு தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்று கொண்டுவருகிறது.
மனிதர்களின் சுயசிந்தனையை நிர்மூலமாக்கும் முயற்சிதான் அந்த யுத்தம்.
அதில் பெரும்பாலும் சுயசிந்தனை தோற்ற வண்ணம்தான் உள்ளது. வெளிப்பார்வைக்கு மனிதரின் சுயசிந்தனை வெற்றி பெற்று உள்ளதாக தெரிகிறது.
சில சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் வெற்றியை பெற்று இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் சுயசிந்தனை தனது இருப்பை தொலைத்துவிட்டு திண்டாடிகொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏராளமான உதாரணங்கள் கூற முடியும். அவற்றை விலாவாரியாக எழுதினால் வாசிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கும். எனவே அதன் அடிப்படையான சில தகவல்களை பற்றி மட்டும் தற்போது அலசுவோம்.

இயற்கையின் மிக அழகான வெளிப்பாடுகளில் மனிதர்களும் ஒரு அற்புத படைப்பே.
இங்கே மனிதர்கள் என்று குறிப்பிடும் பொழுது மனிதர்களின் மனம் உடல் இரண்டையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன். ஆத்மாவை பற்றிய கேள்வியை கட்டுரையின் முடிவில் பார்ப்போம்.
மனம் software உடல் hardware. மனம் இல்லையேல் உடல் இல்லை.உடல் இல்லையேல் மனம் இல்லை.இரண்டுமே ஒன்றில் ஒன்று தங்கி வாழ்வு என்ற process இல் இயங்குவதே மனிதவாழ்வு எனப்படுகிறது.
மனம் ஒரு மொழிபெயர்ப்பாளர். நாம் காணும் அல்லது கேட்கும் அல்லது ஏதோவொரு புலன்வழியாக உணர்பவற்றை அறியத்தருவது மனம்தான்.
இந்த மனம் எவ்வளவு தூரம் செயலிழந்து போகிறது அவ்வளவு தூரம் நாம் சுய  செயல் அற்றவர்கள் ஆகிவிடுவோம்.
ஒருவரை சுயமாக சிந்திக்க செயல்பட முடியாதவாறு அவரின் மனதை கட்டுப்படுத்தி  விட்டால் அவர் ஒரு உயிரற்ற பொருள் போலாகிவிடுவார்.
மனம் ஏதோவொரு விடயத்தில் தனது சுயத்தை இழந்து விட்டால் அது  ஒரு பெறுமதி அற்ற மனம் என்று ஆகிவிடுகிறது.

Sunday, September 11, 2016

கடவுளும் மருந்தும் விலை உயர்ந்த பிராண்டுகள்....? இந்த இரண்டையும் விட நீங்கள் உயர்ந்தவர் ! நிமிர்ந்து நில்லுங்கள் !


நவீன வாழ்க்கை வட்டம் ஏனோ தெரியவில்லை பயத்தின் அடிப்படையிலேயே பெரிதும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்த பய உணர்வு மனிதர்களின் இயல்பான ஆனந்தத்தை விழுங்கியே விட்டது.
இந்த வாழ்வு ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றல்லவா?

 அடிமனதில் தோன்றிய பயத்தின் காரணமாக மனதளவில் ஒழித்து வாழ்ந்து பழகி விட்டார்கள்.;
எதுவித காணரங்களும் இன்றியே பயந்து பயந்து ஒழிக்க இடம் தேடுகின்றனர்.
பயத்தின் காரணமாக சுயமாக சிந்திக்கும் பழக்கத்தை மனிதர்கள் பெரிதும் இழந்து விட்டார்கள். பயம் சிந்திக்கும் ஆற்றலை  கிள்ளி எறிந்துவிட்டது 
இந்த உலகை நேருக்கு நேர் பார்க்க பயந்து போய் ஒழித்து வாழ கண்டுபிடித்த முதல் பங்கர் குகைதான் சமயங்கள் அல்லது கடவுள்கள் என்பது.

அந்த குகைகள் தங்களது பாதுகாப்பு தொட்டில் என்று கருதுகின்றனர்.

அது தரும் தாலாட்டில் கண்ணை மூடிக்கொண்டு வாழ முயற்சிக்கின்றனர்.  இது சரியான வழி அல்லது பிழையான வழி என்று ஒருவித அபிப்பிராயத்தையும் நான் திணிக்க வரவில்லை. அது என் வேலை அல்ல.


மனதளவில் அந்த நிலக்கீழ் குகை வாழ்க்கையில் இருந்து பழகி விட்டார்கள்.
அதை விட்டு வெளியே வந்து பார்க்க பயந்த சமுதாயமாகி விட்டது.

 கற்பனைக்கு எட்டாத அற்புதங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம்  பற்றிய எந்தவித கருத்தும் இல்லாமல் பெருவாரியான மனிதர்கள்  வெறும் அடியவர்கள் ஆகிவிட்டனர்,
ஒரு போதும் உண்மையை  பார்க்க முடியாத அளவு  எங்கோ ஒரு தூரத்தில் இருக்கிறார்கள் .
மனதில் எந்த விதமான சந்தேகம் தோன்றினாலும் கைவசம் பதில்  வைத்திருக்கும் போலி மருந்துகள் சமய வியாபாரத்தில்  தாராளமாக  உண்டு.

Saturday, June 4, 2016

மரங்கள்தான் உண்மையான ஞானகுரு.... அவை உங்களுடன் பேசுவது புரிகிறதா?

நாம் வாழும் இந்த  பூமியை  பற்றி சரியான புரிதல்கள் நமக்கு இருக்கிறதா?

இவ்வுலகிற்கு உரிய வாழும் முறை பற்றி மரங்கள் சொல்வதை விட எந்த ஒரு குருவோ அல்லது வழிகாட்டியோ சிறப்பாக சொல்லி தரமுடியாது.
மரங்கள் தங்களின் சுயதர்மத்தை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுகிறது.
எந்த ஒரு குரு, வழிகாட்டி அல்லது சமுகத்துக்கு நல்ல காரியத்தை செய்திருக்கும் பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை கவனித்து பார்த்தால் அவர்கள் எல்லோருமே மரங்கள் செடி கொடிகளோடு மிகவும்  பரிச்சயம் உள்ளவர்கள்.
மனதை ஒரு முகப்படுத்தி தியானம் அல்லது சுயதேடல் முயற்சி உள்ள  பலர் மர நிழலில் அமர்ந்து இருப்பது வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பதை அறிவோம் .

புத்தர் மட்டும் அல்ல அவருக்கு முன்பிருந்தவர்களும் மரத்தின் நிழலில்தான் மன அமைதி பெற்றார்கள் என்பது வரலாறு.
இவற்றில் இருந்து நாம் மிகப்பெரும் பாடத்தை படிக்க வேண்டி உள்ளோம்.
இந்த உலகில் இருக்கும்  எல்லா பொருட்களும் எல்லா  செயல்களும்  உண்மையில் ஒரு  இயங்கு சக்தியின் வெளிப்பாடுதான்.
(இங்கே சக்தி என்றதும் யாராவது அம்பாள் என்று கருத்து கூற முயன்றால் அதற்கு நான் பொறுப்பல்ல  என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறேன்.)

Wednesday, April 13, 2016

பயம்...ஒரு எதிரி அல்ல....விளையாட வேண்டிய மைதானம் அது.

Santosh Patel: You think tiger is your friend, he is an animal, not a playmate.
Pi Patel: Animals have souls... I have seen it in their eyes. Animals don't think like we do! People who forget that get themselves killed. When you look into an animal's eyes, you are seeing your own emotions reflected back at you, and nothing else. ...life of pi quotes

பிராணிகளுக்கா அல்லது மனிதர்களுக்கா  பய உணர்வு மிக அதிகம்?
மனிதர்களுக்குதான் பய உணர்வு அதிமாக இருக்கிறது!
மனிதர்கள் ஏன் பிராணிகளை விட அதிகமாக பயப்படுகிறார்கள்?

இந்த கருத்து  உண்மையா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படவும் கூடும். அடிப்படையில் மனிதர்களும் பிராணிகளும் பல சந்தர்ப்பங்களில் பயம் என்ற பொறிக்குள் அகப்படவேண்டிதான் உள்ளது. 
பயம் உண்டாவதற்கான காரணங்களும் ஏராளமாக உள்ளன.

மனிதர்களின் பய உணர்வுக்கும் பிராணிகளின் பய உணர்வுக்கும் இடையே  உள்ள வேறுபாடு என்னவென்றால் அந்த பயத்தை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் பிராணிகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதில்தான் உள்ளது.

Saturday, April 2, 2016

"ஆத்மீக அறிவு ஒரு பிரமிட் மோசடி "..... அரசியல், வர்த்தகம், கலை, சமுகம், சமயம்....கேள்வி கேள்...சவால் விடு...


உண்மையை தேடல்  என்றாலே அது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆத்மீக உண்மையை தேடி ஆராயும் முயற்சி என்றாகிவிட்டது.
உண்மை என்பது உண்மை மட்டுமே. அதில் ஆத்மீக உண்மை அரசியல் உண்மை என்பதெல்லாம் கிடையாது.
சில பெரியவர்கள் ஆத்மீக உண்மை வேறு இதர உண்மைகள் இதர துறைகள் எல்லாம் அநாத்மீகம் என்பதாக கூறுவார்கள்.

இது ஒரு சௌகரியமான பொய்யான முகமூடியாகும்.

நான் சதா மனித வாழ்வின் மர்மங்களை ஆராய்ச்சி செய்பவன்.

என் கண்முன்னே நடக்கும் அரசியல் சமுக நிகழ்வுகளையும் சரி கலை கலாச்சாரத்தையும் சரி மிகவும் ஆர்வத்துடன் படிப்பவன்.
அதில் ஈடுபாடும் கொள்பவன்.
இந்த அதிசயமான உலகில் என்னதான் நடக்கிறது  என்பதை  அறிவதில் அனுபவிப்பதில் எனக்கு  அதீத விருப்பம்.

Tuesday, February 9, 2016

கனவுக்கு ஒரு பாலம்......அங்கே உங்களின் ஒரு விசுவரூபத்தை நீங்கள் தரிசிப்பீர்கள்.

கனவுகள் உண்மையானவையா?
இறந்தவர்களுடன் பேச முடியுமா?
ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா?
எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா?
நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா?
எல்லாவற்றிக்கும் பதில்கள் ஒன்றுதான். ஆம் ஆம் ஆம் .
இந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும்.
உண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விடயங்கள்தான்.
இன்னும் சரியாக சொல்லப்போனால் நாம் எம்மை அறியாமலேயே அடிக்கடி செய்துகொண்டிருக்கும் விடயங்கள்தான் இவை.

Wednesday, January 20, 2016

இயற்கை விதிகளை அறியாமல் நாம் இயற்றிய விதிகள்......

Stephen Hawking says humanity is inching closer to demise, and we are to blame.
We are not going to stop making progress, or reverse it, so we have to recognize the dangers and control them. I'm an optimist, and I believe we can,"  he said.
எமது வாழ்வும் இந்த பிரபஞ்சத்தின் வாழ்வும் ஒன்றில் ஒன்று தங்கியே உள்ளன. இந்த பிரபஞ்சம் என்று நான் குறிப்பிடுவது எம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தைத்தான்.
எமக்கும் இந்த பிரபஞ்சதிற்கும் உள்ள இயற்கை விதிகள் ஒன்றுதான்.
எமக்கு முன்பாக நடந்து செல்லும் ஒரு வழிப்போக்கனும் நானும் பிரிக்கவே முடியாத படி இணைந்துதான் இருக்கிறோம்.
விஞ்ஞான ரீதியாக மட்டும் அல்ல  மெய்ஞானம் என்று கூறுபவர்களின் கூற்றுப்படியும் இதுதான் உண்மை.
உண்மையில் நான் வேறு அவன் வேறு அல்ல ... அல்லது அவன் வேறு அது வேறு அல்ல.
சற்று முன்பு கூட அவனின் ஒரு அங்கமாக இருந்த பல நுண் அணுக்கள் எனது அங்கமாக சுழற்சி வேகத்தில் மாறிவிடுகிறது.
இது விஞ்ஞான ரீதியான உண்மையாகும்.
இந்த நுண் அணுக்கள் வெறும் பௌதீக சமாசாரம் மட்டும் அல்ல.
அவை ஒவ்வொன்றிலும் செய்திகள் உணர்வுகள் உள்ளன.

அவற்றில் உள்ள செய்திகள் , உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்பன சதா ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளுக்கு அல்லது இன்னொரு
ஜீவராசிக்கு மாறிக்கொண்டே இருக்கின்றன.

Tuesday, January 5, 2016

சந்தேகம் கொள்....கேள்வி கேள்...சிக்னல்களை சரியாக புரிந்து கொள்......

அழகை ரசிக்கும் ஆற்றல்  எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் ஆண் பெண் கவர்ச்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உயிரனங்களின் வாழ்வுக்கும் அதற்கேற்ற வசதிக்கும் உரியதாக இன்றளவும் உலகம் இருக்கிறது.

இன்று நாம் நம்பிக்கை வைத்து பின்பற்றி வரும் கோட்பாடுகள் அல்லது
வாழ்க்கை முறை எல்லாம் எப்படி உருவானது?
பெரும்பாலும் இயற்கையின் அடிப்படை விதிகளை தூக்கி எறிந்து விட்டு சமயங்கள் கூறும் செயற்கையான பொய்யான கோட்பாடுகளின் அடிப்படையில்தான் பெரிதும் இன்றைய வாழ்வு அமைந்துள்ளது.

எமது தேவைகள் என்று எமக்கு தேவையே இல்லாத பல விருப்பங்களை எமது தலைமீது சுமத்தி எம்மை ஒரு பொதி சுமக்கும் கழுதைகளாக உருமாற்றி இருக்கிறது.
எமது உண்மையான தேவைகளை நோக்கி எம் உள்ளுணர்வுகள் ஓயாது குரல் கொடுத்து கொண்டு இருக்கையில் , அதற்கு நேர் எதிர்மாறாக எமது தலையில் சுமத்தப்பட்ட விருப்பங்களை நோக்கி நாம் மனத்தால் ஓடுகிறோம்.
விளைவு இரண்டுக்கும் நடுவில் மாட்டுப்பட்டு அவதிபடுகிறோம்.
எமது உள்ளுணர்வுக்கு நாம் ஒருபோதும் உண்மையாக இருந்ததே இல்லை. எனவே எமது உள்ளுணர்வுகளுக்கு இந்த வாழ்க்கை உகந்ததாகவே இல்லை.