Monday, October 28, 2013

முடிவான அபிப்பிராயங்கள் சிருஷ்டிக்கு எதிரானவை ! never approve or disapprove before starting the process

There are in fact two things, science and opinion; the former begets knowledge, the latter ignorance.”
― Hippocrates
 I never approve or disapprove of anything now !  Is is an absurd  attitude to take  towards LIFE . Oscar Wild

ஒரு  அனுபவத்தை 
அடைய தொடங்கும் முன்பே அது பற்றி அளவுக்கு
அதிகமாக  அபிப்பிராயங்களை  உருவாக்கி கொள்ளும்  பழக்கம் நம்மில் 
ஓரளவு இருக்கிறது,
இது  பாலகாண்டம் ஆரம்பிக்கையிலேயே  சமாதி காண்டத்தை  வாசிப்பது போன்றது,
இறுதி அத்தியாயத்தை முதலில் படித்து விட்டால் பின்பு  ஆரம்பத்தில் இருந்தே படிக்க வேண்டிய  அவசியம்  அவ்வளவாக இருப்பதில்லை ,
இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் இயங்குகிறது,
இங்கே முடிவுரையாக வருவது எமது  அதீதமான அபிப்பிராங்களும் அதன் காரணமாக நாம்   கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களும்தான்.
முதலிலேயே ஒன்றை தெரிந்து கொள்வோம் , வாழ்க்கை என்பது  ஒரு process அதாவது  அது ஒரு இயக்கம் , இன்னும் சரியாக சொல்லப்போனால் ஒவ்வொரு கணமும்  வாழ்வானது தன்னை தானே சிரிஷ்டித்துகொண்டு இருக்கிறது,
அதன் சிருஷ்டிக்கு  ஆதார விதையாக இருப்பது எமது மனதில் சதா   எழுந்த வண்ணம் உள்ள எண்ணங்களே ,
சிருஷ்டிக்குரிய  எண்ணங்கள் உருவான அடுத்த கணமே அந்த சிருஷ்டியின்  விளைவாக வரவேண்டிய  இறுதி  பயன் பற்றிய எமது  அபிப்பிராயங்கள்  அந்த சிருஷ்டியின் நோக்கத்தை  சிறுமை படுத்தி விடுகிறது.
அதாவது  ஆரம்பத்தில்  எதிர்பார்த்த  விளைவை இறுதியில்  அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது, அபிப்பிராயங்கள் தீர்மானங்களும் உண்மையில் இரண்டு வேறு பட்ட விடயம்தான் , ஆனால் பல சமயங்களில் அவற்றிக்கு இடையே உள்ள இடைவெளி அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை .
மேலோட்டமான அபிப்பிராயங்கள்  காலப்போக்கில்  எமது குணாதிசயங்களை பொறுத்து அவை முடிவான தீர்மானங்கள் ஆகிவிடுவதுண்டு ,
அவை வெறும் அபிப்பிராயங்களாக இருக்கும் வரைக்கும் பெரிதாக ஒரு தாக்கத்தை அன்றாட வாழ்வில் உண்டாக்காது , அந்த அபிப்பிராயங்கள் ஒரு அழுத்தம் பெற்று ஒரு முடிவான அபிப்பிராயங்களாகி விடும் பொழுது அவை ஒரு வலிமையான உணர்ச்சியாக அல்லது சக்தியாக மாறிவிடுகிறது ,
பெரும் பாலும் எதற்கெடுத்தாலும்  அபிப்பிராயம் மேற்கொள்வது  எமது உலகத்தை  சின்னஞ்சிறிதாக்கி விடும்,
எமது மனதில் உருவாகும் எந்த ஒரு அபிப்பிராயமும் பூரணமான ஒரு சத்தியமாக இருப்பதில்லை, அது மிகவும் அபூர்வமாகவே சம்பவிக்கும்.

Wednesday, October 23, 2013

உலகம் தட்டையானது என்ற நம்பிக்கை மிகவும் சுகமானது

I love to disturb people, because only by disturbing them can I make them think. They have stopped thinking for centuries. Nobody has been there to disturb them. People have been consoling them. I am not going to console anybody, because the more you console them, the more retarded they remain.osho.

அறிஞர்களை அல்லது வழிகாட்டிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம் ,
நமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி நம்மை ஒரு சௌகரியமான மன நிலைக்கு இட்டு செல்பவர்கள் ஒரு வகை ,
அதாவது  நமது Comfort  Zone எனப்படும் மிக சுகமான ஒரு மன நிலையில் எம்மை ஆறுதல் படுத்தும் வழிகாட்டிகள் இவர்களாவர்,

அடுத்த வகையான வழிகாட்டிகள் நம்மை மிகவும் தொந்தரவு செய்யும் மனிதர்களாவர் ,
நாம் நீண்ட நாட்களாக சுமந்து  கொண்டிருக்கும் சுகமான நம்பிக்கைகளை அல்லது கோட்பாடுகளை உடைத்து நம்மை மிகவும் குழப்பத்திற்கு உள்ளாக்கி  விடுவார்கள் ! தீவிரமாக யோசிக்க வைத்துவிடுவார்கள் !
இவ்வகையான மனிதர்கள் நமது நிம்மதியையும் சிலவேளைகளில் தொலைத்துவிடுவார்கள் ,
Ignorance is Bliss அதாவது அறியாமையே ஆனந்தம் என்பது போல நாம் மிகவும் சரியான பாதையில் செல்வதாக எண்ணி கொண்டிருக்கையில் இந்த Disturb வழிகாட்டிகள் எமது கனவு சொர்க்கத்தை தகர்த்து விடுவார்கள்.

கனவு சொர்க்கத்தை கலைக்கும் காரியத்தை செய்யும் அறிஞர்களை மனித சமுதாயம் அவ்வளவு நிம்மதியாக இருக்க விட்டதில்லை ,

டார்வின், கலிலியோ, கோர்ப்பனிக்கஸ், சோக்கிரட்டீஸ் மற்றும் ஏராளமான Disturb காரரை மனித குல வரலாறு கண்டிருக்கிறது ,

நமது கனவுகளை கலைக்காமல் மேலும் மேலும் அக்கனவுகளில் ஊறி நம்மை மறந்து ஒரு சுகமான நம்பிக்கையில் நம்மை செலுத்தும் அறிஞர்களையும் ஏராளாமாக நாம் கண்டுள்ளோம்,
அநேகமான சமய அல்லது சமுக தலைவர்கள் பலரும் இந்த வகையை சார்ந்தவர்கள்தான் ,

இதில் யார் சரி அல்லது யார் தவறு என்பது அல்ல பிரச்சனை ,

கனவுகளை இறக்குமதி செய்யும் பலரும் தாங்கள் அந்த கனவுகளை நம்பி அதில் எதோ ஒரு புளகாங்கிதம் அடைந்து அதைபற்றி பிரசங்கம் செய்கிறார்கள் !

Friday, October 11, 2013

கடவுளை விட உடலே சிறந்தது ! எல்லா வாய்ப்புக்களையும் தந்திருப்பது எது ?

வாழ்க்கைக்குள் இருந்து கொண்டே வாழ்கையை திட்டிதீர்ப்பதை
என்னெவென்று சொல்வது?
வாழ்க்கை ஒரு பாபகரமானது அது ஒரு அசிங்கம் அது மிகவும் கேவலமானது போன்ற படு மோசமான அபிப்பிராயங்கள் மனிதர்களின் மனதிற்குள் விதைப்பது யார் ?
ஏதாவது ஒரு நல்ல நோக்கத்திற்காக எமது வாழ்வை நாமே அழித்து கொள்வது ஒரு ஒப்பற்ற தியாகம் என்று இல்லாத
ஊருக்கு போகும் வழியை காட்டுவது யார்?
ஒரு நியாயமான நோக்கத்திற்காக பிறரின் வாழ்வை அழிப்பது கூட மிகவும் உன்னதமான செயல் என்று இந்த மனித சமுதாயத்தை நம்ப வைப்பது யார்?
எமது வாழ்வை எமக்கு தரும் எமது உடல் ஒரு பெறுமதி அற்ற பொருள் என்றும் அதை நல்ல ஒரு காரியத்திற்காக நாசப்படுத்துவது தியாகம் என்றும் படு மோசமான மார்க்கத்தை போதிப்பது யார்?
எமது உடலை நாம் விரும்பக்கூடாது ! அதனுள் உறைந்து இருக்கும் அல்லது மறைந்து இருக்கும் பொருளே உயர்ந்தது எனவே நமது உடலை கூடுமானவரை அழகு படுத்தி ரசிப்பது வெறும் மாயை அது ஒரு பொருட்டே அல்ல என்பது போன்ற துர்போதனைகளை உபதேசிப்பவர்கள் யார்?