Thursday, October 26, 2017

ரீமிக்ஸ் ஆத்மீக வியாபாரம் ... சுகி சிவம் ... தீபக் சோப்ரா !

சமணம் . பௌத்தம், மற்றும் ஏராளமான் சிறிய பெரிய  வழக்கொழிந்து
போய்விட்ட   சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் எல்லாம் தற்போது  இந்து சமயம் என்ற பெயரில்  இருக்கிறது.

நவீன விஞ்ஞான உலகத்துக்கு சமய நம்பிக்கைகள்  மீது ஒரு  அவநம்பிக்கை  இருக்கிறது.
நம்பிக்கை இருப்பதாக பாவனை பண்ணும் பலருக்கும் சந்தேகங்கள்தான் அதிகமாக இருக்கிறது ,
ஆனால்  நடித்து கொண்டிருக்கிறார்கள்.
 அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கடந்த நூற்றாண்டுகளில் இருந்து விஞ்ஞான அறிவு மிகபெரும் அளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
மறு புறம்  எல்லாவிதமான தத்துவங்களும் மீள் பரிசோதனைகளுக்கு உட்பட்டு கொண்டே இருக்கிறது.
மனிதர்கள் கொஞ்சம் சுயமாக சிந்திக்க தொடங்கி உள்ளார்கள்.
மேலை நாடுகளில் மனிதரின் பிறப்பு. இறப்பு மட்டும் அல்லாது , இந்த பிரபஞ்சம் இயங்கும் விதிகளை ஆராய்ந்து  பார்ப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
Darwin , Fredric Neitche, Sigmande Freud போன்றவர்கள் தத்துவார்த்த ரீதியிலான புரட்சியை சமகாலத்தில் தொடக்கி வைத்தார்கள் என்றே கூறலாம்.
இவற்றின் வழி பல புதியவர்கள் பல நூல்களை எழுதினார்கள் .
அவற்றில் மிக ஆழமான புரட்சிகரமான பிரபஞ்சவியல் ஆய்வு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில்  எதை குறிப்பிடுவது எதை விடுவது என்ற குழப்பம் எனக்கு உள்ளது.
ஏனெனில் மிக நீண்ட பட்டியலை குறிப்பிடுவது வாசர்கர்களின் பொறுமையை சோதித்து விடுமோ என எண்ணுகிறேன்.
 Jane Roberts என்பவர் எனக்கு  முக்கியமானவர் . இவர் ஏராளாமான நூல்களை அளித்துள்ளார் .

Tuesday, October 24, 2017

ஆத்மீக / மத பேச்சாளர்களின் நவீன விஞ்ஞான பக்தி காக்டெயில் விஸ்கி பிரசாதம் !

தற்போது எல்லா சமயவாதிகளும் தங்கள் பிரசார  தந்திரங்களை  கொஞ்சம்
நவீன மயப்படுத்தி உள்ளார்கள்.
ஜெஹோவா சாட்சிகள்தான் முதல் முதலாக சுய முன்னேற்ற கருத்துக்களை தங்கள் கர்த்தரோடு மிக்ஸ் பண்ணி கொடுத்தவர்கள்,
இப்போது எல்லோரும் இதே டெக்னிக்தான்.
 டபிள் ஸ்ரீ , ஜாக்கி வாசு  போன்ற பார்ப்பனீய கொள்கை பரப்பு செயலாளர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அத்தனை சமயத்தவர்களும் புதிய உலகின் சிந்தனைக்கு ஏற்ப விஞ்ஞான ரீதியான விளக்கங்களோடு ரீல் சுத்துகிறார்கள்.
பல நேரங்களிலும் இவர்கள் கூறும் கருத்துக்கள் நல்லவையாக இருக்கிறது உண்மையே .
ஆனால் இவர்களது நோக்கம் மிகவும் கபடம் வாய்ந்தவையாகும்.
அதனால்தான் இவர்கள் இன்னும் சீனில் நின்று பிடிக்க முடிகிறது. பழைய சினிமா பாடல்களை ரீமிக்ஸ் செய்து இளம் தலைமுறைகளின் காதுகளில் தங்கள் சொந்த சரக்கு போன்று சப்பிளை செய்வது போல இந்தசமய  சொற்பொழிவாளர்களும் இப்போது செய்கிறார்கள் .
 பேரறிஞர்கள் பேசியதை எழுதியதை எல்லாம் தேடி பிடித்து அவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாக அள்ளி வீசி தங்கள் பழைய குப்பைகளை புதிப்பிக்கின்றனர்,
வழக்கம் போல பொதுபுத்தி மக்கள் ஆகா கண்டேன் அறிவின் கருவூலத்தை என்பது போல இந்த சமய வியாபாரிகள் பின்னால் செல்கின்றனர் . இந்த பக்தி சரணாகதி உல்டாக்கள் எல்லாம் வெறும் ரீமிக்ஸ் ஆத்மீக போதை வஸ்துக்கள்தான்.

Tuesday, July 4, 2017

சுயமாக சிந்திப்பது பாவம் ஏதாவது ஒரு தலைவனை அல்லது சாமியாரை நம்பி கண்ணை மூடுங்கள் சொர்க்கம் நிச்சயம்

சாமியார்கள் வழிகாட்டிகள் மகரிஷிகள் குருமகராஜிகள் பகவான்கள் பகவதிகள் அம்மாசாமியாரினிகள் எல்லாரும் எப்படியாவது மக்களை காப்பாற்றியே தீருவது என்று விடாப்பிடியாக முயற்சி செய்கிறார்கள். தாராளாமாக முயற்சி செய்யட்டும் .
உலகில் நடக்கும் கொலை கொள்ளைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவது என்ன நடைபெறக்கூடிய காரியமா?
சில கிரிமினல்கள் அகப்படுவார்கள் சிலர் அகப்படமாட்டார்கள். ஆனாலும் இயற்கையின் விஞ்ஞான விதி ஒன்று உண்டு அதில் எவரும் தப்ப முடியாது. ஊரையெல்லாம் ஏமாற்றுபவன் சொந்த வீட்டிலேயே ஏமாந்த கதையெல்லாம் உண்டு இந்த மாதிரி பித்தலாட்ட சாமிகளிடம் மக்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். இது உண்மையில் ஆராயப்பட வேண்டிய விடயமாகும். மிகவும் அறிவாளிகளாக படித்தவர்களாக ஏன் படு சுயநலவாதிகளாக இருப்பவர்கள்கூட இந்த மாதிரி முடிச்சவிழ்கி சாமியார் குருமார்களிடம் சிக்குப்பட்டு விடுகிறார்கள்.

 சுய சிந்தனை இல்லாமல் இருப்பது மிகவும் உயர்ந்த விடயமாக நமது மனதில் பதியப்பட்டு உள்ளது . சமயங்களும் கலாசாரம் என்று நாம் கூறிகொண்டிருக்கும் வாழ்க்கை முறையும் இந்த தவறை கால காலமாக செய்துவருகின்றன. சுயமாக சிந்திக்க தெரிந்தால் அவர்களை அடக்கி ஆளமுடியாதே? குருமார்கள் நிலைத்து நிற்பதே மக்களின் அறியாமையினால்தான். மக்கள் உண்மையை அறியாதவாறு சாமிகளும் ஆசாமிகளும் பல விதமான ஒழுக்க விதிகள் கோட்பாடுகள் எல்லாவற்றையும் பாமர மக்களின் தலையில் திணித்து வைத்துள்ளன.

Saturday, May 13, 2017

உனது உடலைவிட உனக்கு வேறு பெரிய சொத்து கிடையாது.


இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் உடல்தான் அதிக பெறுமதி வாய்ந்த தலையாய சொத்தாகும்.  இந்த உலகத்தில் உனது உடலைவிட உனக்கு பெரிய சொத்து வேறு எதுவும் கிடையாது.
எனவேதான் எல்லா உயிர்களும் தங்கள் உடலை பாதுகாப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன.
ஆனால் மனிதர்கள் மட்டும் இந்த இயற்கை விதியில் இருந்து விலகி தங்களை ஏதோ ஒரு அடிப்படை அறிவாளிகள் என்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் உடலை தாங்களே மிகவும் பாரதூரமாக சிதைக்கின்றனர்.
மனித உடலின் பெறுமதியை மிகவும் மலினப்படுத்திய முதல் குற்றவாளிகள்  மதவாதிகள்தான்.
மதங்கள் உருவாக்கிய காலச்சாரம் பாரம்பரியம் போன்றவை எல்லாம்  மனித உடலுக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை.  உடலை விட ஆத்மா உயர்ந்தது அல்லது அந்த ஆத்மாவை விட கடவுள் பெரியது என்பதாகதான் எல்லா மதங்களும் மீண்டும்  மீண்டும் பிரசாரம் செய்கின்றன
இந்த மதங்களின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொடர்ச்சியான பிரசாரங்களால் மனிதமனத்தின் மிகவும் ஆழத்தில் தனது உடல் ஒரு பெறுமதி இல்லாத பொருள் என்ற எண்ணம் பதிந்து விட்டது.
மனிதர்களை நல்வழிக்கு அழைத்து செல்வதாக கூறிகொள்ளும் மதங்கள் இறுதியில் மனிதனின் உடலை வெறும் வழி தேங்காயை எடுத்து தெருவில் உடைப்பது போன்று மனிதர்களின் உடல் பற்றிய கரிசனையை குழி  தோண்டி புதைத்து விட்டன.
உலகில் உள்ள எந்த விலை உயர்ந்த அதி பெறுமதி வாய்ந்த சிலையையும் விட மனிதனின் உடல் அற்புதமான உயிருள்ள சிலையாகும்..
இறைவனை வணங்குவதை விட தமது உடலை முதலில் வணங்குவதே மிகவும் சரியான ஒரு வழிபாடாக இருக்கமுடியும். அதற்கு அடுத்ததுதான் மீது வழிபாடெல்லாம். உடல் இருந்தால்தானே உன்னால் மீதி வழிபாடெல்லாம் தொடர முடியும் !