Saturday, June 4, 2016

மரங்கள்தான் உண்மையான ஞானகுரு.... அவை உங்களுடன் பேசுவது புரிகிறதா?

நாம் வாழும் இந்த  பூமியை  பற்றி சரியான புரிதல்கள் நமக்கு இருக்கிறதா?

இவ்வுலகிற்கு உரிய வாழும் முறை பற்றி மரங்கள் சொல்வதை விட எந்த ஒரு குருவோ அல்லது வழிகாட்டியோ சிறப்பாக சொல்லி தரமுடியாது.
மரங்கள் தங்களின் சுயதர்மத்தை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுகிறது.
எந்த ஒரு குரு, வழிகாட்டி அல்லது சமுகத்துக்கு நல்ல காரியத்தை செய்திருக்கும் பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை கவனித்து பார்த்தால் அவர்கள் எல்லோருமே மரங்கள் செடி கொடிகளோடு மிகவும்  பரிச்சயம் உள்ளவர்கள்.
மனதை ஒரு முகப்படுத்தி தியானம் அல்லது சுயதேடல் முயற்சி உள்ள  பலர் மர நிழலில் அமர்ந்து இருப்பது வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பதை அறிவோம் .

புத்தர் மட்டும் அல்ல அவருக்கு முன்பிருந்தவர்களும் மரத்தின் நிழலில்தான் மன அமைதி பெற்றார்கள் என்பது வரலாறு.
இவற்றில் இருந்து நாம் மிகப்பெரும் பாடத்தை படிக்க வேண்டி உள்ளோம்.
இந்த உலகில் இருக்கும்  எல்லா பொருட்களும் எல்லா  செயல்களும்  உண்மையில் ஒரு  இயங்கு சக்தியின் வெளிப்பாடுதான்.
(இங்கே சக்தி என்றதும் யாராவது அம்பாள் என்று கருத்து கூற முயன்றால் அதற்கு நான் பொறுப்பல்ல  என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறேன்.)