நான் உங்களை தொந்தரவு செய்வதற்கு நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும் ஆனால் உண்மையில் மகிழ்ச்சி அடையவேண்டும்
எதையும் புதிதாக அறிவதிலும் பார்க்க ஏற்கனவே நாம் அறிந்தவற்றை மறப்பது அவ்வளவு எளிதல்ல .
ஒரு குழந்தையின் விளையாடு பொருளை பறித்தால்அதற்கு கோபம் வருவது இயல்புதான் .
நீங்கள் சந்தோஷமாக கொண்டாடும் கோட்பாடுகள் நம்பிக்கைகளை எல்லாம் விட்டு சற்று மாற்றி யோசிப்பது அவ்வளவு எளிதல்ல ,
ஏற்கனவே நாம் அறிந்த ஒன்று தற்போது தவறு என்று நமக்கு தெரிய வருவதற்கு மிகுந்த நுட்பமான அறிவு வேண்டும் ,
அதை விட தைரியம் வேண்டும்,
நாம் சரி என்று பரிபூர்ணமாக பல யுகங்களாக நம்பிய சமாசாரங்களை திடீரென்று அவை எல்லாம் சுத்த ஹம்பக் என்று ஏற்று கொள்ள எல்லை இல்லாத துணிவு வேண்டும்,
முதலில் பயம் எங்கள் கண்களை திறக்க எம்மை அனுமதிக்காது ,
அப்படி விழிப்புணர்வு பெற்றாலும் அனுபவித்த இருட்டு சுகம் ஒரு போதையாக எம்மை தலை தூக்க விடாது,
இனிமேல் தூங்கவே முடியாது தொந்தரவு தாங்கவே முடியாது என்ற நிலை வருபோது சிலவேளை நாம் எமது தூக்கத்தை விட்டு துயிலேழுவோம் . இங்கே நான் தூக்கம் என்று குறிப்பிடுவது சிந்தனை தூக்கத்தைத்தான் , ஆழமாக பதிக்கப்பட்ட நம்பிக்கைகள் எமது ஆதார மெத்தைகளாக சொகுசான நித்திரையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தந்து விட்டிருக்கிறது,
அந்த மெத்தையின் சுகத்தை நாம் அவ்வளவு இலகுவில் தியாகம் செய்துவிட முடியாது, பழக்க தோஷம் தலை தூக்க விடாது,
கண் முன்னாள் தெரியும் உலகத்தை விட கண்ணுக்கு தெரியாத விண்ணுலகம் சொர்க்க லோகம் ஆத்மா அநுபூதி என்பதாக பலவிதமான கோட்பாடுகள் பலவற்றையும் நம்புகிறோம் ,
இவை எல்லாம் உண்மையில் இருப்பதாகவே வைத்துகொள்வோம் ,
இவை எல்லாவற்றையும் விட இந்த மனித வாழ்வு அற்புதமானது,
கண்முன்னே பரந்து விரிந்து சதா ஜீவனுடன் காட்சி தரும் இந்த அற்புத வாழ்வை விட இந்த அற்புத உலகத்தை விட வேறு ஒன்றும் தற்போது தேவை இல்லை ,